மணிரத்னம் படங்கள் என்றாலே கிளாஸியாக அனைவரும் கவரும் வகையில் இருக்கும். ஆனால், அவர் இகடைசியாக ஹிட் ஆன படம் என்றால் கொஞ்சம் யோசிக்க தான் வேண்டும்.இவர் பெரிதும் நம்பியிருந்த கடல் படமும் கை விட்டது. இந்நிலையில் இனி பெரிய பட்ஜெட் படங்கள் எடுப்பதில்லை, சுமார் ரூ 5 கோடியில் ஒரு படத்தை எடுத்து முடிக்க முடிவெடுத்துள்ளாராம்.மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் சில பகுதிகளில் யாருக்கும் தெரியாமல் எடுத்து வருவதாக கூறப்படுகிறது....
நேற்றையதினம் (12.102014) கிளிநொச்சியில் இடம்பெற்ற 20,000 பேருக்கு காணி உரிமைப்பத்திரம் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு, வடமாகாணசபை உறுப்பினர்களுக்கெதிராக நையாண்டி பேச்சுக்கள் பேசப்பட்டன. வைக்கோல் பட்டறை நாயென மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாது விக்னேஸ்வரன் ஒரு முட்டாள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில்; ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. இந்நிலையில் தாம் வெற்றிபெறவேண்டும் என்கின்ற நோக்கத்தோடு ஜனாதிபதி அவர்கள் வடபகுதியில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு,...
தனுஷ் தற்போது அனேகன், ஷமிதாப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படங்களை முடித்து கையோடு இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிப்பதாக கூறியிருந்தார்.ஆனால் இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கும் சூதாடி படத்தில் நடிக்கவும் கால்ஷிட் தந்துள்ளார். இதனால் தனுஷ் அடுத்து என்ன படம் நடிப்பார் என்று யாருக்கும் தெரியவில்லை.மேலும் பாலாஜி படத்தை தனுஷ் நடிப்பதாக சம்மதித்து பல நாட்கள் ஆகிவிட்டது. இப்படத்திற்காக வாங்கிய காஜல் கால்ஷிட்டும் கரைந்து கொண்டே வருகிறது....
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் பதிவுசெய்யாத வரையிலும் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ் மக்களுக்கும் சிறந்தது. தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் இதர கட்சிகளை பதிவு செய்வதாயின் ஒற்றுமையை நிலைநாட்டுவதென்பது மிகக்கடினமான விடயமாகவே அமையும். அவ்வாறு பதிவுசெய்யப்படவேண்டுமாயின் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக்கூட்டணியையையும் இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. அவர் அதற்கெதிராகவே செயற்பட்டுவந்த ஒருவரும் கூட. பொதுவாக இக்கட்சிகள் அனைத்தும் ஒருகுடையின் கீழ் பதிவுசெய்யப்படுமாயின் தமிழரசுக்கட்சியினால் இக்கட்சிகள் அனைத்தும் ஓரங்கட்டப்படும்....
வைக்கோல் பட்டடை நாய் போன்று வடக்கு மாகாணசபை செயல்படுகிறது என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விமர்சனத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. கிளிநொச்சி வைபவம் ஒன்றில் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். வடக்கு மாகாணசபைக்கும் போதிய நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும், அதனை அந்த மாகாண சபை முறையாக பயன்படுத்த தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். அத்துடன், வைக்கோல் பட்டடை நாய் போன்று மக்களுக்கு...
  அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது என்று அரசின் நம்பகரமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷ, தான் மூன்றாவது தடவையாகவும் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார். மறுபுறத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுவது அரசியல் சாசனத்திற்கு முரணானது எனவும், அதற்கான ஆலோசனையை நீதிமன்றிடம் பெறமுடியாது எனவும்...
பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி மலாலா யூசுப்சாய். இப்பகுதி தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு பெண் குழந்தைகள் கல்வி பயில தீவிரவாதிகள் கட்டுப்பாடு விதித்தனர். தனது 12 வயதில் அதை எதிர்த்து அவர் குரல் கொடுத்தார். மேலும் பெண் கல்வி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தீவிரவாதத்துக்கு எதிராகவும் பிரசாரம் மேற்கொண்டார். எனவே அவரை தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் உயிருக்கு...
  இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜோகோ விடோடோவை சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளின் உறவுகள் குறித்தும் பேசப்பட்டது. அத்துடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் வாழ்த்துக்களையும் இந்தோனேசிவின் புதிய தலைவருக்கு பீரிஸ் தெரிவித்தார். புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட விடோடோ வரும் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்...
யாழிற்கான புகையிரத சேவை ஆரம்பித்து வைக்கப்படவுள்ள நிலையில் அதன் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு 11.10.2014 - சனிக்கிழமையாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நாளை மறுதினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில் அதன் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையிலான குழுவினர் நேரில் ஆராய்ந்து கொண்டனர். பளை புகையிரத நிலையத்திற்கு இன்றைய தினம் (11) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் தலைமையிலான...
  இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் பௌத்த தீவிரவாத அமைப்பான பொதுபல சேனாவை அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால், இலங்கைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய பயங்கரவாதம் நுழைவதற்கு அதிகபட்ச சாத்தியப்பாடு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எஸ்.ஆர்.ஏ. அமைப்பு (Security Risk Asia) இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. டெல்லியில் இயங்கும் எஸ்.ஆர்.ஏ. அமைப்பின் பிரதானி பிரிகேடியர் பொன்ஸாலே வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பொதுபல சேனாவுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள பிரச்சினை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்குச் செல்லாமல் தடுக்க...