ராஜபக்ச குடும்பத்திற்கு பால் மாடுகளைத் தவிர வேறு சொத்துக்கள் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை பால் பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நெஸ்ட்லே நிறுவனம் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். என்னைப் போன்றே எனது தந்தையும் ஒர் பால் பண்ணையாளர். எனக்கும் எனது குடும்பத்தாரிற்கும் தோட்டங்கள், ஹோட்டல்கள் மற்றும் கம்பனிகள் காணப்படுவதாக சிலர்...
  ஊவா மாகாணசபைத்தேர்தலைப் பொறுத்தவரையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட அதே நேரம் பணத்திற்காக விலைபோயுள்ள அரசியல்வாதிகளையும் காணமுடிந்தது. அந்த வகையில் பதுளை மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் அரைவாசியாக இரு கட்சிகளும் வாக்குகளைப் பெற்றிருந்தன. ஆனால் முன்னைய காலகட்டங்களைப் பார்க்கின்றபொழுது அரசை விடவும் எதிர்க்கட்சிகள் ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கின்றன. அடுத்ததாக நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித்தேர் தலைப் பொறுத்தவரையில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டங்கள் வெளிநாடுகளினால் முன்னெடுக்கப்படும் அதேநேரம், இந்தியாவும் அதனையே மறைமுகமாக செயற்படுத்திவருகின்றது....
அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. தமிழ் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட உள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் காணி மற்றும் பாடசாலை பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது. கடந்த வாரம் இந்த சந்திப்பு நடத்தப்படவிருந்தது. ...
   ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படுவதனை விரும்பவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை விடவும் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதனையே தமது கட்சி விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பாராளுமன்றம் மக்களின் அபிலாஸைகளை பிரதிபலிக்கவில்லை எனவும் மக்களின் ஆணையை புதிதாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் ஆளும்...
வடமாகாணசபை நிர்வாகம் தனித்து தன்னிச்சையாக செயற்படுவதான குற்றச்சாட்டுக்களின் மத்தியில் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கட்சியின் அவசர கூட்டம் இன்று யாழில் நடைபெற்றுள்ளது. வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனது காரியாலத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்திருந்தனர். காலை முதல் ஆரம்பமாகி நீண்ட நேரம் நீடித்த இக்கூட்டத்தில் வடமாகாணசபை நிர்வாகம் கட்சி தலைமையினை மீறி தனித்து தன்னிச்சையாக செயற்படுவதான குற்றச்சாட்டு கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்...
நந்திக்கடல் வடக்காறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக அப்பிரதேச மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இன்று சுமார் 50 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சிலாப்பி, கெளிறு, மணல், மன்னா, கூறல் போன்ற மீன் வகைகளே இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்குவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கரையொதுங்கி வரும் மீன்களை வட்டுவாகல் கிராமிய கடற்தொழில் மீன்பிடி கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து கரைத்துறைப்பற்று பிரதேச...
52 வருடங்களுக்குப் பின் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் நேற்று சிறுவர் தினத்தை முன்னிட்டு அப்பாடசாலைக்கு சென்று அதிபர், ஆசிரியர்கள், மாணவனையும் பாராட்டியதுடன் உதவிகளையும் வழங்கினார். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியாலயத்தில் 162 புள்ளிகளை பெற்று சித்தியடைந்த மாணவன் பு.மிருசனனுக்கு துவிச்சக்கர வண்டியை வழங்கி வைத்தார். இப்பாடசாலையானது 1962ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 52 வருடங்களின் பின் முதல் தடவையாக பு.மிருசனன்...
  கடந்த சனிக்கிழமை சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா இதுவரை யாரையும் சிறை வளாகத்தில் சந்திக்கவில்லை என்று சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   இது குறித்து சிறை வளாக வட்டாரம் மேலும் தெரிவித்த தகவல் வருமாறு:- தமிழகத்தின் புதிய முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் தமிழக உயர் அதிகாரிகள் என பலரும் சிறையில் ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் பொதுவாக கைதிகளை பார்க்க சிறைக்கு யார் வந்தாலும்,...
. சர்வதேச போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவரான சையேந்திர முபடால் சைபுடீன் சஹீப் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்தித்தார். இன்று வியாழக்கிழமை அலரிமாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. -
பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக அர்ஜென்டினா வெளி முதலீட்டாளர்களிடமிருந்து வாங்கியிருந்த 100 பில்லியன் டாலர் கடனை கடந்த 2001-ம் ஆண்டில் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அதன் பங்குதாரர்களுக்கு குறிப்பிட்ட அளவு பணத்தைத் திருப்பிக்கொடுப்பதாக ஒரு உடன்பாட்டினை அந்த நாடு எட்டியது. குறைந்த மதிப்பு பத்திர பரிமாற்றங்களை சில முதலீட்டாளர்கள் ஏற்றுக்கொண்டபோதும் அவர்களுக்கு வட்டி ஏதும் வழங்கப்படவில்லை. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த என்எம்எல் கேபிடல் மற்றும் அரேலியஸ்...