இலங்கை அரசுக்கும் எங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக நடப்பது போல இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச உலகை ஏமாற்றி வருவதாக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும் இந்திய பிரதமர் மோடி மீது நம்பிக்கை இருப்பதாகவும், தமிழ் பேசும் மக்களின் பழைய நிலைகளில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து விட்டு இலங்கை திரும்பும் வழியில், சென்னை தி.நகரில் உள்ள...
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக செயற்பட்டு வந்த நவநீதம்பிள்ளை இம் மாதத்துடன் ஓய்வு பெறுவதை அடுத்து, அந்தப் பதவிக்கு ஓய்வு ஷெயிட் அல் ஹூசைன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஈழத் தமிழர் விடையத்தில் பல கட்டமான முடிவுகளை இலங்கை அரசுக்கு எதிராக எடுத்த நவிப்பிள்ளை, ஐ.நாவை விட்டு செல்வது ஈழத்...
உக்கிரேன் கோர விமான விபத்துக்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்கவேண்டாம்
  பிரபாகரனை புகழ்ந்து பாடிய கருணா இன்று மகிந்த வெற்றி பெற வேண்டும் என்று வக்காளத்து வாங்குவது தனது உயிரை தக்கவைத்து கொள்ளவே இந்த வீடியோவை பாருங்கள் TPN NEWS
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மோசடி செய்தே தேர்தல்களில் வெற்றியீட்டினார் என அவரது சகோதரரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஆனந்த அலுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாவலப்பிட்டி புதிய தொகுதி அமைப்பாளர் பதவியை பொறுப்பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் அலுத்கமகே ஓர் நன்றி கெட்டவர். ஏறிய ஏணியை உதைத்து விட்டார். அமைச்சரின் வெற்றிக்காக இரத்தம் வியர்வை சிந்தி அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை அவர் விரட்டிவிட்டார். கிரமமாக ஒவ்வொருவராக உதவி...
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நோபல் பரிசு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உலகில் தொடர்ச்சியாக 22 தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய ஒரே கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த பரிசு வழங்கப்படும். வெளிநாட்டு சூழ்ச்சியாளர்களுடன் இணைந்து நாட்டுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி துரோகம் இழைக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியானது, தமிழ்த்...
அரசாங்கமானது தீர்வுத்திட்டத்தில் அக்கறைகாட்டாது பதவிக்காலத்தை நீடிப்பதிலேயே அக்கறை செலுத்தி வருகின்றது. தமிழ் மக்கள் படும் துன்ப, துயரங்கள் இந்தியா உட்பட சர்வதேசத்திற்கு நன்கு தெரியும். இந்தியா சென்று பொய் கூறவேண்டிய அவசியம் இல்லை. என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. ஆனால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு சென்றுதான் பேசவேண்டும் என்ற...
பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து இலங்கை இராணுவம் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கில், இந்தியாவின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி பங்கேற்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் விளக்கமளித்துள்ளார். இலங்கை இராணுவம் வருடாந்தம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கு கடந்த 18ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரையான மூன்று நாட்கள் கொழும்பில் கலதாரி விடுதியில் இடம்பெற்றது. இதில் இந்தியாவில் இருந்து பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம்...
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிற்கு ராஜயோகம் உண்டெனன பிரபல ஜோதிடவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சரத் சந்திர போதலகே என்ற ஜோதிடரே இவ்வாறு ஆரூடம் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கிரக நிலைகள் மோசமாக காணப்படுகின்றன. இதன் காரணமாகவே தேர்தல்களில் தோல்வி ஏற்படுகின்றது. எதிர்வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் தேர்தலில் வெற்றியீட்ட முடியும். மிதுன ராசிக்காரரான சஜித் பிரேமதாசவிற்கு தற்போது...
சென்னை: பாலியல் தொழில் புரிவதற்காக பல வெளிமாநில அழகிகள் சென்னைக்கு அழைத்து வரப் படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபச்சார சுற்றுலாவைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் போலீஸார் இறங்கியுள்ளனர். சென்னை கே.கே.நகர் 69-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண்களை வைத்து ஒரு கும்பல் பாலியல் தொழில் செய்வதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று...