இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1–3 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் பிரிஸ்டலில் நடக்க இருந்த முதலாவது ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்தியா–இங்கிலாந்து இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டெஸ்டில் சோடை போன...
இலங்கை–பாகிஸ்தான் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்டோட்டாவில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 310 ரன்கள் குவித்தது. மஹேலா ஜெயவர்த்தனே (67 ரன்), கேப்டன் மேத்யூஸ் 93 ரன் (115 பந்து, 8 பவுண்டரி), திசரா பெரேரா (65 ரன், 36 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) அரைசதம் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் வஹாப்...
   விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவின் பிரிவு எப்பொழுது ஆரம்பமானது? - இதுபற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மைகள் நிகழ்ச்சி. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதியாகவிருந்த கேணல் கருணாவின் பிரிவு பற்றியும், அந்தப்பிரிவினால் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு பற்றியும், அந்தப் பிளவினால் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் சந்தித்த...
‘சிகரம் தொடு’ மற்றும் ‘வெள்ளக்கார துரை’ படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு கூறியதாவது:‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’, ‘அரிமா நம்பி’ ஆகிய படங்கள் வெவ்வேறு களத்தில் அமைந்தன. ‘வெள்ளக்கார துரை’யில் முதல்முறையாக காமெடி செய்துள்ளேன். அப்பா, மகனுக்கு இடையே நடக்கும் கதையாக ‘சிகரம் தொடு’ உருவாகியுள்ளது. அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். ஆக்ஷன், காமெடி, சென்டி மெண்ட் கலந்த படம். எனக்கு போலீஸ் வேடம். கவுரவ் இயக்கியுள்ளார். விரைவில் ரிலீசாகிறது....
 தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வரும் இனியா கூறியதாவது:மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும், இதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்ததில்லை. தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டு ஆதரவு தரும் அளவுக்கு மல்லுவுட்டில் ஏற்கவில்லை. திறமையான பல நடிகைகள் இருந்தாலும், நடிப்பில் ஆர்வம் இல்லாத நடிகைகளை ஒப்பந்தம் செய்து சில மலையாள இயக்குனர்கள் நடிக்க வைக்கின்றனர். நான் ஒரு பாடலுக்கு நடனமாடுவதை குறை சொல்கிறார்கள். அப்படி ஆடுவதில் என்ன தவறு? நடிப்பில் எவ்வளவு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இலங்கைக்கு ஐஸ் வாளி சவால் (ice bucket challenge) என அரசியல் விமர்சகரும் முன்னாள் இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜய திலக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தலையில் குளிர்ந்த நீரை ஊற்றும் ஐஸ் வாளி சவால் என்றே நான் காண்கிறேன். இந்திய பிரதமர் மோடி இலங்கை அரசாங்கத்தில் ஐஸ் வாளியில் தண்ணீர் நிரப்பியுள்ளார்.அரசாங்கத்திடம் மண்டியிட்டு பாராளுமன்ற...
ரைசிங் சன் பிலிம் சார்பில் எச்.என்.கவுடா தயாரித்துள்ள படம், ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’. வினய் கிருஷ்ணா, ஹாசிகா தத், ஸ்ரீமன், ஜீவா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கார்த்திக் நல்லமுத்து. இசை, உமேஷ். இப்படம் குறித்து இயக்குனர் வீரா கூறியதாவது: நள்ளிரவில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடக்கும் இறுதி கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பை நண்பர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.கடைசி பந்து வீச தயாராகிறார் வீரர். இந்தியாவின் வெற்றிக்கு...
   ‘வத்திக்குச்சி’, ‘ரகளபுரம்’, ‘கபடம்’ ஆகிய படங்களில் நடித்தவர், அங்கனா ராய். அவர் கூறியதாவது:நான் தமிழில் தெளிவாகப் பேசுவேன் என்பதால், தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். ‘மகாபலிபுரம்’, ‘பிளாக் அண்ட் ஒயிட்’ படங்களில் நடிக்கும் நான், கன்னடத்தில் துனியா விஜய்யுடனும், மலையாளத்தில் மேஜர் ரவி டைரக்ஷனில் பிருத்வி ராஜுடனும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடிக்கிறேன். அடிப்படையில் நான் பெங்காலி. இப்போது பெங்காலிப் படத்திலும் அறிமுகமாகிறேன். என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த உதவும்...
‘சுவடுகள்’ படத்தை இயக்கி நடித்த அமெரிக்கவாழ் தமிழர் ஜெய்பாலா, அடுத்து திகில் படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘சுவடுகள்’ படத்தில் 12 துறைகளின் பணிகளை கவனித்தேன். அமெரிக்காவில் தமிழர்களுக்கு படத்தை திரையிட்டேன். மீண்டும் படம் இயக்கச் சொல்லி உற்சாகப் படுத்தினார்கள். அமெரிக்காவில் திரைப்பட இயக்கம் கற்றுள்ளதை அடிப்படையாக வைத்து, திகில் படம் இயக்குகிறேன். பேய் மற்றும் அமானுஷ்ய சக்திகள் இல்லாத திகில் படமான இதில், 10 துறைகளை கையாள்கிறேன்....
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவால், உலக சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பை வாய்ப்பு பெற்றார். இதனால் இன்று நடைபெற்ற  2ம் சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் நடாலியா பெர்மினோவாவை எதிர்கொண்டார். துவக்கம் முதலே ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த...