கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்ர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். சதத்தில் சதம் கண்டு (டெஸ்ட் 51+ ஒருநாள் போட்டி 49) சாதனை படைத்து இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் பெருமை தேடி தந்தவர். கிரிக்கெட் பிதாமகனான டெண்டுல்கரை அணிக்காக ஆடமாட்டார். தனது சாதனைக்காகவே ஆடுபவர் என்று கூறி அவரை விமர்சித்தவர்களும் உண்டு. இதற்கு அவரே விளையாடும் காலத்தில் பதிலடி கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் தெண்டுல்கரை...
இந்தியா– இங்கிலாந்து அணிகள் மோதும் 4–வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை (வியாழக் கிழமை) தொடங்குகிறது. 5 டெஸ்ட் கொண்ட தொடரில் நாட்டிங்காமில் நடந்த டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2–வது டெஸ்டில் இந்தியா 95 ரன்னில் வெற்றி பெற்றது. சவுத்தம்டனில் நடைபெற்ற 3–வது டெஸ்டில் இங்கிலாந்து 266 ரன்னில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1–1 என்ற சமநிலையில் உள்ளது. 3–வது டெஸ்டில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு நாளைய...
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் பொறுப்பின் கீழ் இருக்கும் நீர் வழங்கல் சபையை மிகவும் தந்திரமான முறையில், நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரியவருகிறது. நிதியமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செலுத்த முடியாத பெருந்தொகை பணத்தை தேசிய வங்கிகளிடம் இருந்து...
எமது நாட்டில் முஸ்லிம் இன­வாத அர­சி­யல்­வா­திகள் தமிழ் மக்­க­ளுடன் சேர்த்து முஸ்லிம் மக்­க­ளையும் ஏமாற்­றி­ய­தா­கவே வர­லா­றுகள் காணப்­ப­டு­கின்­றன. அவர்கள் காலத்­திற்கு காலம் கூறி வரு­கின்ற வார்­த­தைகள் எல்லாம் நீர் மேல் எழு­திய எழுத்துப் போலவே இருக்­கின்­றது என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் பிர­சன்னா இந்­தி­ர­குமார் தெரி­வித்தார். ஞாயிற்­றுக்­கி­ழமை அமிர்­த­க­ழியில் இடம்­பெற்ற விளை­யாட்டுப் போட்டி நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு...
நாட்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய எதிர்நோக்கியுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக சட்டம் கையாளப்படும் விதத்தை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் வெறுமனே உபுல் ஜயசூரியவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக கருத முடியாது. நாட்டில் உள்ள 15...
வட – கிழக்கு இலங்கையில் காணமல் போனோரின் குடும்பங்களின் குறைகளை கேட்பதற்கும், அதற்கான நீதியை பெற்றுகொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்றின் போது அனுமதியில்லாமல் நுழைந்த அரச அனுசரணை பெற்ற பிக்குகள் உட்பட கும்பல் ஒன்று பாதுகாப்பு தரப்பினர் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே நடை பெற்றுக்கொண்டு இருந்த கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்தினர். எனினும் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்வுக்கு அத்துமீறி நுழைந்த கும்பலை வெளியேற்ற பாதுகாப்பு...
  நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வை கொண்டுவராது என தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இது தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்றதாகும் என குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ள அவர் தற்போதைய ஆளும் கட்சி இந்த நிறைவேற்று அதிகார முறையை கொண்டுவரவில்லை, இன்றைய பிரச்சினைகளுக்கெல்லாம் அதனை குறை சொல்லுவது தவறு, அதனை கொண்டு வந்தவர்களே அதனை நீக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி தலைவர் எப்போது...
பூஸா முகாமிலுள்ள ஜெயக்குமாரியிடம் சனல்- 4 வின் நேர்காணல் தொடர்பாக விசாரணை கிளிநொச்சி, தர்மபுரத்தில் கடந்த மார்ச் மாதம் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தற்போது பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியிடம் சனல்-4ற்கு அளித்த நேர்காணல் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேடப்படும் குற்றவாளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயக்குமாரி, கைது செய்யப்படுவதற்கு முன் பின்தொடரப்படுவதாகவும் என்றும் அச்சுறுத்தப்படுவதாகவும் பிரிட்டனின் சனல் 4 ஊடகத்துக்கு...
ஆளுங்கட்சிக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவங்ச முன்னெடுத்த அரசியல் நாடகம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஜே.வி.பி.யின் முன்னாள் பிரச்சாரச் செயலாளரான விமல் வீரவன்ச, தற்போது ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர். வீடமைப்பு உள்ளிட்ட முக்கிய அமைச்சுப் பொறுப்பி்ல் இருப்பவர். இவற்றுக்கு மேலதிகமாக ஆளுங்கட்சிக்குள் ஜனாதிபதி மற்றும் கோத்தபாயவின் செல்லப்பிள்ளை. அரசாங்கத்திற்குள் ஜனாதிபதிக்கு பிடிக்காதவர்களை மட்டம் தட்டுவதற்காகவே ராவண பலகாய என்றொரு கடும்போக்குவாத அமைப்பை உருவாக்கி, ஆளுங்கட்சியின்...
நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. குற்றச்செயல் நடந்த காலம்: 21.02.2002 முதல் 15.11.2011 வரை. (இதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி அதற்கு பின்னர் நடைபெற்றாலும் அதுகுறித்தும் புகார் தெரிவிக்கலாம்). புகார் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.10.2014. (அக்டோபர் மாதம் 30 ஆம் நாளுக்கு முன்னதாக புகார்களை அனுப்ப வேண்டும்) புகார்களை...