பாலிவுட்டின் ஹாட் டாப்பிக் தற்போது சர்வின் சாவ்லா தான். இவர் தமிழில் நடித்தார் என்றால் எத்தனை பேருக்கு தெரியும், வசந்த் இயக்கத்தில் வெளிவந்த மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தாரே அவர் தான்.
ஆனால் இப்படம் ஓடாததால் பாலிவுட் திரையுலகிற்கு சென்றார், அங்கு ஹேட் ஸ்டோரி 2 படம் ரெட் கார்பட் போட்டு அழைத்ததால், தற்போது இவருக்கு அங்கு செம்ம மார்க்கெட்.
அதுமட்டுமின்றி கோலிவுட்டிலும் வாய்ப்புகள் குவிகிறதாம்,...
நடித்த சில படங்களிலேயே புகழின் உச்சிக்கு சென்றவர் சிவகார்த்திகேயன். அதேபோல் தன் ரசிகர் பலமும் அதிகமாக, எங்கு சென்றாலும் 50 பேரை அழைத்து தான் செல்வார் என்று சிலர் கூறிவந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த மொசக்குட்டி இசைவெளியீட்டு விழாவிற்கு வருகை தந்தார் சிவா. முன்பு போல் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாக வந்து சென்றுள்ளார்.
என்ன என்று விசாரித்தால், மான் கராத்தே படத்திற்கு பின்பு சற்று அடங்கி தான் போய் விட்டாராம்.
வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் பனைமரம்.பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
அவற்றில் நுங்கின் மகத்துவம் அளப்பரியது!‘
கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.
நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
நுங்குக்குக்...
மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள்.
ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இவற்றை உண்பதன் மூலம் மனிதன் பல உபாதைகளில் இருந்து விடுபடலாம்.
மாதுளையின் நன்மைகள்
* இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப்...
இணையம் (Internet) என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பை குறிக்கும். 1990களில் இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இத்தகைய இணையத்திற்கு வயது 25.
இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிக, கல்வி நிறுவன, தனி நபர் மற்றும் அரசு சார்ந்த கணினி-வலையமைப்புகள் இதன் உறுப்புகளாக உள்ளன. மின்னஞ்சல், இணைய உரையாடல், காணொளி பார்த்தல், விளையாட்டு, மற்றும் தொடர்புபடுத்தப்பட்ட இணையத்தளங்கள் முதலிய சேவைகளையும், உலகளாவிய வலையின் தரவுகளையும் இணையம் தருகின்றன.
1950-ம்...
கடந்த ஆண்டில் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் நடுங்க வைத்தது, டெங்கு காய்ச்சல். இன்றைக்கும் தமிழகத்தில் ஆங்காங்கே இது பரவிக்கொண்டுதான் இருக்கிறது. டெங்கு ஏற்படுத்தும் உயிரிழப்புகளும் உடல் பாதிப்புகளும் மக்கள் மத்தியில் கூடுதல் பயத்தை உருவாக்கி இருக்கின்றன. இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பூசியோ மருந்துகளோ கிடையாது. இதற்கெனப் பிரத்யேகமான சிகிச்சையும் இல்லை. சாதாரணக் காய்ச்சலுக்கான சிகிச்சைதான் டெங்குவுக்கும். இது தானாகவே குணமானால்தான் உண்டு. சித்த மருத்துவத்தில் நிலவேம்புக்...
அல்ஜியர்ஸ் : சமீபத்தில் மாயமான, அல்ஜீரியா நாட்டு பயணிகள் விமானம், நைஜர் நாட்டில் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட, பர்கினோ பாசோ நாட்டிலேயே விழுந்து நொறுங்கியதாகவும், அதில் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
தொடர்பு துண்டிப்பு : ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவின் விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம், : னமும் நான்கு முறை, அதன் தென்பகுதியில் உள்ள மற்றொரு நாடான, பர்கினோ...
தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் 24 மணி நேரம் நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகளும் நேற்று 12 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டனர். உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த குறுகிய நேர போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போர் நிறுத்தம் அமலில் இருந்த 12 மணி நேரத்தில் காஸா பகுதியில்...
இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ம் திகதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை பாலஸ்தீனத்தை ஒட்டியுள்ள காஸா எல்லைப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் குழுவினர் கடத்தினர்.அந்த மாணவர்களைக் கொன்று, பிரேதங்களை பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியான வெஸ்ட் பேங்க் அருகே வீசிச் சென்றனர்.
இதனையடுத்து, ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை...
20-வது காமன்வெல்த் போட்டியில் நடைபெற்ற 69 கிலோ ஆண்கள் பிரிவிற்கான பளு தூக்கும் போட்டியில் இந்திய வீரர் ஓம்கார் ஒட்டாரி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
நேற்று மட்டும் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு ஐந்து பதக்கங்களும், பெண்களுக்கான ஜூடோ போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன. ஓம்கார் ஒட்டாரி வென்ற வெண்கலப் பதக்கத்தை சேர்த்து இந்தியா இதுவரை 17 பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் நீடிக்கிறது.
16 தங்கம்,...