உள்நாட்டுப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஈராக்கின் நஜ்ப் நகரில் சிக்கி, வெளியேற வழியின்றி தவித்தவர்களில் மேலும் 200 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டின் பேரில், ஈராக்கில் உள்ள இந்திய தூதரகம் எடுத்த தீவிர முயற்சியின் பயனாக ஈராக் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர்கள் புது டெல்லி வந்தடைந்தனர். ஈராக்கில் தவிக்கும் மேலும் பல இந்தியர்களை ஈராக் ஏர்லைன்ஸ், ஏர்...
உலகமெங்கும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் இருக்கிறார்கள். தாய்லாந்து நாட்டில், சாங், இங்க் பங்கர் சகோதரர்கள் 1811-ம் ஆண்டு மே மாதம் 11-ந் திகதி பிறந்தார்கள். அதிகபட்சமாக இவர்கள் 62 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து சாதனை படைத்தனர். 1874-ம் ஆண்டு ஜனவரி 17-ந் திகதி இங்க் பங்கர் உறங்கிக்கொண்டிருந்தபோது, சாங் நுரையீரல் நோயால் இறந்து விட்டார். சகோதரர் மறைவு, இங்க் பங்கரை உலுக்கியது. அடுத்த 3 மணி நேரத்தில் அவர் இறந்து விட்டார். அவர் சகோதரர் இறந்த...
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசின் தணிக்கை குழுவின் தமிழ்நாட்டு பிரிவில் கடும் ஆள்பற்றாக்குறை உள்ளது. இதனால் படங்கள் தணிக்கைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறது. ஆள் பற்றாக்குறையால் படங்கள் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு அறிவிக்கப்பட்ட தேதியிலும் படங்களை வெளியிட முடியவில்லை. சரபம் படம் வருகிற 11ந் தேதி வெளிவருவதாக இருந்தது. படம் தணிக்கைக்கு காத்திருப்பதால் தள்ளிப்போகிறது. இது தவிர மெட்ராஸ் உள்பட 15 படங்கள் தணிக்கைக்காக...
பாரதிராஜா இயக்கிய 'பொம்மலாட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். அந்தப் படம் வெளிவந்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும் அப்போது எப்படி இருந்தாரோ அப்படியேதான் இன்று வரை இருக்கிறார். ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் சரியான உடலமைப்பில் அவருடைய அழகை அவர் பராமரித்து வருகிறார். தமிழை விட தெலுங்கில் காஜல் அகர்வாலுக்கு வரவேற்பு அதிகம். அதோடு ஹிந்திப் படங்களிலும் நடித்து அங்கம் புகழ்...
முன்பெல்லாம் படத்தில் இடம் பெறும் சில பாடல்களுக்கு கவர்ச்சி நடிகைகள் மட்டுமே நடனமாடி வந்தார்கள். ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா, அல்போன்சா, முமைத் கான் என இந்த பட்டியல் நீளும்...ஆனால் இப்போதெல்லாம் பல முன்னணி நடிகைகளே இம்மாதிரியான பாடல்களுக்கு நடனமாடி விடுகிறார்கள். கதாநாயகியாக இருக்கும் போதே இம்மாதிரியான பாடல்களில் நடனமாடிய பலர் இருக்கிறார்கள். இப்போதும் அதே மாதிரி பலரும் நடனமாடி வருகிறார்கள். தமிழ்...
ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கும் 'ஐ' படம் நீண்டகால தயாரிப்பாக உருவாகி வருகிறது. விக்ரம், எமிஜாக்சன், சுரேஷ்கோபி, ராம்குமார் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட்புரடக்ஷன்ஸ் வேலைகள் இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. சில நாட்களுக்கு முன்தான் இப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலை பாடினார். ஐ படத்திற்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், 'இப்படத்தின் அனைத்து பாடல்களின்...
கடந்த வியாழக்கிழமை, மலேசியாவின் செர்தாங்க், செந்துல், சுங்காய் பெசி, மத்திய கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் மலேசிய போலீசார் நடத்தி அதிரடி தேடுதல் வேட்டையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 32,37,43 மற்றும் 45 வயது கொண்ட 4 பேர் சிக்கினர். இதில் ஒருவர் வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. எனினும் இவர்களது பெயர் விவரத்தை இதுவரை மலேசிய போலீசார் வெளியிடவில்லை. 4 பேருக்கும் இலங்கையில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில்...
பிரேசிலில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து - கோஸ்டாரிகா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் ஆட்ட நேர இறுதி வரை கோல் போடாததால் பெனால்டி சூட் வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் நெதர்லாந்து 4-3 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் 200-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) அணிக்கும், ஷேன் வார்னே தலைமையிலான உலக லெவன் அணிக்கும் இடையே 50 ஓவர் கொண்ட காட்சி கிரிக்கெட் போட்டி நேற்றிரவு லார்ட்சில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த உலக லெவன் அணியில் ஷேவாக் (22 ரன், 24 பந்து, 5 பவுண்டரி), கில்கிறிஸ்ட் (29 ரன்),...
பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரியான வில்லியம் ஹேக் இரு நாள் அரசு முறைப் பயணமாக வரும் திங்களன்று இந்தியா வருகிறார். அப்போது வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. அவருடன் அந்நாட்டின் கருவூலத்தலைவரானஜார்ஜ் ஆஸ்போர்ன் மற்றும் அந்நாட்டை சேர்ந்த மூத்த மந்திரிகள் குழுவும் வருகின்றது. தங்கள் நாட்டுக் குழுவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜை சந்திக்கும் அவர் இரு தரப்பு பிராந்திய உறவு குறித்தும்,...