மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களுக்குச் சொந்தமான 18 ஆயிரம் ஏக்கர் காடுகளை சட்டத்தை மீறி வெட்டி அபகரித்துள்ளதாக அடாவடி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது, சுற்றுச் சூழல் சங்கங்கள் நான்கினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் குற்றம் சாட்டியுள்ளன. மன்னார் நீதிமன்றத்தை தாக்கி நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றவாளியும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா தடுப்பு முகாமில் இருந்த தமிழ் பெண்களை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை...
  மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் எதற்கும் அஞ்சாதவராக 'உள்ளே மிருகம் வெளியே கடவுள்' என்பது போல் அவருடைய செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அவர் கையிலிருக்கும் மந்திரக் கல்லை வைத்து அனைத்துலக நாடுகளின் கண்களில் மண்தூவி வருகின்றார். இதுவரை காலமும் ஆண்டுவந்த ஆட்சியாளர்களுள் மஹிந்தவின் போக்கு சற்று வித்தியாசமானது. முன்னைய இருந்த அரசாங்கங்கள் அனைத்தும் சிறிமாவோ பண்டாரநாயக்கவைத் தவிர ஏனையவர்கள் அரசிற்கு அடிபணிந்தே செயற்பட்டனர். மஹிந்த ராஜபக்ஷவும் கூட சிறிமாவோ பண்டாரநாயக்கவின் விடயங்களையே தற்போது...
சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் அனைத்­துத்­த­ரப்பு இணக்­கப்­பாடு தொடர்பில் பேசு­கின்­றனர். அதி­காரப் பகிர்வு விட­யத்தில் அர­சாங்கம் எம்முடன் பேசத் தயாரா? என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கேள்வி எழுப்­பி­யது. சர்­வ­தே­சத்தின் நடு­நி­லைமை இருந்தால் மாத்­தி­ரமே இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு எட்­டப்­படும் எனவும் கூட்­ட­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யது. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 26ஆவது கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில், அரச மற்றும் எதிர்த்­த­ரப்­புக்கள் அதி­காரப் பகிர்வு விட­யத்தில் கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றமை தொடர்பில் வின­விய போதே தமிழ்...
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் விசாரணை செய்யவுள்ளது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். லண்டனில் நேற்று ஆரம்பமான வன்முறையின் போது பாலியல் வன்புணர்ச்சியை தடுக்கும் பிரகடனத்துக்கான மாநாட்டின் ஆரம்ப நாளில் அகதிகள் சட்டத்தரணிகள் மற்றும் குழுக்கள் முன்வைத்த முறைப்பாட்டின் பின்னரே ஹேக் தமது தகவலை வெளியிட்டார். அண்மைய வாரங்களில் நாடு...
பிள்ளையான் மற்றும் கருணாவுக்கு எதிரான செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. யுத்த காலத்தின் போது அவர்கள் இருவரும் அரசாங்கத் தரப்புக்கு அத்தியாவசிய தேவைகளாக இருந்தார்கள். குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தந்திரோபாயங்கள், தாக்குதல் வியூகங்கள் மற்றும் பலப்பிரதேசங்கள் குறித்து அறிந்துக் கொள்வதற்காக, ஐரோப்பிய நாடு ஒன்றில் சிறை வைக்கப்பட்டிருந்த கருணா அம்மானை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு அழைத்திருந்தார். அவர்கள் மேற்கொண்ட காட்டிக் கொடுப்புகளுக்கு பிரதி...
சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச விசாரணைக்குழு, சிறிலங்காவுக்கு விஜயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கோரியுள்ளது. மனித உரிமைகள் மாநாட்டின் ஆரம்ப தினத்தில் உரையாற்றி இருந்த அமெரிக்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான தூதுவர் கீத் ஹார்பர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரேரணை அடிப்படையில் விசாரணைக்குழுவை அமைத்து, விசாரணைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமைக்காக அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு நன்றித் தெரிவித்துக் கொண்டார். அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைத்து...
தமிழர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்த முன்னைய அறிக்கைகளை வேண்டுமானால் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விவாதியுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் அட்டவனைப்படுத்தப்படாத ஆளணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் இன்று (10.3) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், எமது கட்சியின் கருத்தாக இல்லாமல் எனது கருத்தாக தெரிவுக்குழு விடயத்தில் சிலவற்றை செல்லிக்கொள்ள விரும்புகின்றேன். பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி தொடர்பாகவும், தமிழ்நாட்டு எதிர்ப்புக்கள் மத்தியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பதவியேற்பு வைபவத்திற்கு அழைப்பு விடுத்தமை பற்றியும், அதனுடைய பின்னணிகள் இலங்கைத் தமிழர்களுக்கான அரசியற் தீர்வின் சாதக, பாதகமான விடயங்கள் எவ்வாறு அமையப்போகின்றது என்பது பற்றியுமான தமிழ் அரசியல்வாதிகளினுடைய கருத்துக்களை தினப்புயல் பத்திரிகை வினவிய போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள். நரேந்திரமோடி அவர்களின், பிரதமர் பதவியின் பின்னரான அவரு டைய செயற்பாடுகளை வைத்தே...
யுத்த வலயங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் லண்டன் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்த வலயங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் நோக்கிலான பிரகடனமொன்றை அமுல்படுத்தும் பிரித்தானியாவின் திட்டம் வரவேற்கப்பட வேண்டியது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.எனினும், இந்த மாநாடு கூட இலங்கைக்கு எதிராக பயன்படுத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அரச படையினர் ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு பாலாரையும் பாலியல்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று வலியுறுத்தியே அக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு-காலி வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று வலியுறுத்தி கொள்ளுப்பிட்டியிலுள்ள...