மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சீனியர் தடகள போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதன் 2–வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் விக்னேஸ்வரன் 7.90 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். விக்னேஸ்வரன் சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில், பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்று வருகிறார்.
பிரான்ஸ் அணியின் முன்னணி கால்பந்து வீரர் பிராங் ரிபரி. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது பிரான்ஸ் அணிக்கு பின்னடைவாகும்.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். அதிவேகமாக பந்து வீசும் இவர் இவர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்டார். இவரது திருமணம் ஜூன் மாதம் நடக்க இருக்கிறது. இத்தகவலை அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியதாக எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ஜூன் 19-ந் திகதி மெகந்தி நிகழ்ச்சியும், 20-ந் திகதி ரக்சாதி ஹரிபுரிலும், 22-ந் திகதி வலிமா நிகழ்ச்சி ராவல்பிண்டியிலும் நடைபெறும் என செய்தி தெரிவித்துள்ளது. கைபர் பாக்துன்க்வா மாகாணம் ஹரிபுரைச்...
பண மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முத்தாகிதா குவாமி இயக்க தலைவர் அல்டாப் உசைன் இன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்ட 60 வயதான அல்டாப் உசைன், கடந்த 3-ம் தேதி வடக்கு லண்டனில் அவரது வீட்டில் இருந்தபோது அவரை போலீசார் கைது செய்து மத்திய லண்டன் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 3 நாள் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உடை அணியும் பாணிக்கு அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த மோடி, ஒவ்வொரு மேடையிலும் விதவிதமான வண்ணங்களில் தைக்கப்பட்ட பைஜாமாக்களையும், அரைக் கை மற்றும் முழுக்கை குர்தாக்களையும் அணிந்து புதுப் பொலிவுடன் காணப்பட்டார். பாராளுமன்ற தேர்தலில் வென்று பிரதமரான பின்னர், உடைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டி வரும் மோடி, ஒரே நாளில்...
ஐ.நா. மனித உரிமை சபையின் உயர் கமிஷனராக ஜோர்டான் நாட்டை சேர்ந்த இளவரசர் ஸெய்ட் ராட் ஸெய்ட் அல் ஹுசெய்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது அந்த பதவியை வகித்து வரும் நவி பிள்ளையின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைவதையொட்டி, புதிய கமிஷனராக யாரை நியமிக்கலாம்? என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் ஆலோசனை நடத்தினார். இந்த...
சிங்கப்பூரில் 179 ஆண்டு பழமையான கோவில் சீரமைக்கப்பட்டது. சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் இந்தியர்கள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக இங்கு தமிழர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த நிலையில் இடம் பெயர்ந்து அங்கு குடியமர்ந்த தமிழர்கள் கடந்த 1835–ம் ஆண்டில் வீரமாகாளியம்மன் கோவிலை கட்டினர். இதற்கிடையே சிங்கப்பூரில் உள்ள 75 கட்டிடங்கள் புராதன சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அக்கோவில் தற்போது சுமார் 30 கோடி ரூபாய் செலவில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மராமத்து பணிகள் முற்றிலும்...
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான இறுதி கட்ட போர் கடந்த 2008–ம் ஆண்டு நடந்தது. அதை தொடர்ந்து விடு தலைப்புலிகள் தலைவர்களும், இலங்கை தமிழர்களும், அங்கிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் தங்கியுள்ளனர். வெளிநாடுகளில் இருந்தபடியே நாடு கடந்த தமிழீழம் அரசாங்கத்தை அமைத்துள்ளனர். இதனால் அச்சம் அடைந்துள்ள இலங்கை அரசு விடுதலைப்புலிகளை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்கும்படி உலக நாடுகளை வலியுறுத்தி வருகிறது. மலேசியாவில் இலங்கை தமிழர்களும், விடுதலைப் புலிகளும் அதிக...
சீன அதிபரை போன்று தோற்றமளிக்கும் இறைச்சி உணவு வியாபாரி இன்டர்நெட் மூலம் பிரபலமானார். சீனாவில் உள்ள ஹூனான் நகரை சேர்ந்தவர் ஷாவோ ஜியான்ஹூவா. இவர் ஹூனான் பல்கலைக்கழக மாணவர் விடுதி அருகே இறைச்சி உணவு கடை நடத்தி வருகிறார். சில நாட்களாக இவரது கடை முன்பு ‘கியூ’ வரிசையில் நின்று மக்கள் உணவு பொருட்களை வாங்கி செல்கின்றனர். இது அவருக்கே ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவரது உணவின் சுவை காரணமாக கூட்டம்...
இஸ்ரேல் சிறையில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும். சிறையில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கடந்த ஒரு மாதமாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் உடல் நிலம் குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீன கைதிகள் தொடர் உண்ணாவிரதம் இருப்பதால் அவர்கள் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. இஸ்ரேல் அரசு அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். இச்சம்பவம்...