சீனாவை சேர்ந்த நபர் ஒருவரது மகன் அவரின் கடவுச்சீட்டில் படங்கள் வரைந்ததால் நாடு திரும்ப முடியாமல் அந்நபர் தவித்து வருகிறார்.
சீன நாட்டை சேர்ந்த தந்தையும், அவரது நான்கு வயது மகனும் தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தனர்.
விமானத்தில் பிரயாண களைப்பு தெரியாமல் இருக்க சிறுவன் தனது தந்தையின் கடவுச்சீட்டில் எழுதுகோலினால் அவரது உருவமே தெரியாத அளவிற்கு சரமாரியாக கிறுக்கி படம் வரைந்துள்ளான்.
இதன்பின் தென்கொரிய விமான நிலையத்தையடைந்த அவ்விருவரையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை...
வடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் சிறுவர்களின் ஆளுமை, ஆற்றல்களை விருத்தி செய்யும் நோக்குடன் யாழ் சிறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கான சாகச விளையாட்டுத் திடல் அமைப்பதற்கான முதற்படியான அடிக்கல் நாட்டும் விழா நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்றது.
50 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இந்த சாகச விளையாட்டுத் திடலுக்கான அடிக்கல்லினை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி நாட்டினார்.
சுழலும் ராட்ணம், கயிறில் நடத்தல், சிறுவர்களுக்கான விநோத விளையாட்டுக்கள் இங்கு அமைக்கப்படவுள்ளன.
இந்த அடிக்கல் நாட்டு...
யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து வீதிகளும் மிகவிரைவில் ‘காப்பெற்’ வீதிகளாக மாற்றப்படவுள்ளன என்று தெரிவித்தார் யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா.
யாழ். மாநகர சபையின் மாதாந்த கூட்டம் நேற்று நடைபெற்றது. அமர்விலிருந்து எதிரணியினர் வெளிநடப்புச் செய்த நிலையில் ஆளுந்தரப்பினருடன் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இதன்போது மேற்படி திட்டத்தை முதல்வர் அறிவித்தார். யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட மக்களின் கோரிக்கைக்கிணங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் இந்த திட்டம்...
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் பிரதான வீதி, கொக்குவில் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இரு பொலிஸார் காயமடைந்தனர்.
நேற்று மதியம் 1.45 மணியளவில் கொக்குவில் ஆடியபாதம் வீதியில் இருந்து பாடசாலை மாணவியை ஏற்றி வந்த முச்சக்கரவண்டி யொன்று கே.கே.எஸ் பிரதான வீதியால் யாழ் நோக்கி வேகமாக வந்த போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு பொலிஸார் மற்றும் பாடசாலை...
வவுனியா பாரதிபுரம் கிராமத்தில் வாழும் மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு உத்திரவிடப்பட்டுள்ளது
Thinappuyal -
பாரதிபுரம் கிராம மக்களை வெளியேறுமாறு உத்திரவிடப்பட்டுள்ளது
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வவுனியா பாரதிபுரம் கிராமத்தில் வாழும் மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு சிலரால் நேற்று (28.5) உத்திரவிடப்பட்டுள்ளமை தொடர்பாக தனக்கு மக்களால் முறையிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மிகவும் வறிய நிலையில் உள்ள ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாரதிபுரம் கிராமத்தில் வாழ்ந்துவருகின்றனர். குறித்த கிராமத்திலுள்ள தமிழ்...
வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த மகாலிங்கம் றஜீவன் எனும் 17 வயதுடைய மாணவன் நேற்று (27.05.2014 அன்று) காணாமல் போயுள்ளதாக அறிய முடிகின்றது. கடந்த 27.05.2014 அன்று தரணிக்குளம் சாஸ்திரி கூழாங்குளம் எனும் முகவரியில் அமைந்துள்ள தனது வீட்டிலிருந்து, அதிகாலை 5.00 மணிக்கு பத்து கிலோ பயிற்றங்காய்களுடன் புறப்பட்டு, வவுனியா நகரப்பகுதியிலுள்ள தினசரி சந்தையில் வியாபாரியிடம் கொடுத்த பின்னர், தான் பயணித்த...
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை அழைத்துச் சென்று பொய்யான நாடகம் ஒன்றை காட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சித்தார்
Thinappuyal News -
இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுமாறு புதிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை வலியுறுத்தியுள்ளமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மகிழ்ச்சியை தருகின்றது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்டதும் அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றதுடன், அதற்கு அப்பாலும் சென்று அதிகாரப் பகிர்வை...
வடமாகாணசபை உறுப்பினரான அனந்தி சசிதரன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக, தொலைபேசியில் தொடர்புகொண்டபொழுது, தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வி.
கேள்வி :- திருகோணமலையில் நடைபெற்ற தெரிவுக்குழுக்கூட்;டத்தில் நீங்கள் புறக்கணிக்கப்பட்டதாக பல செய்திகள் வெளிவந்தன. இதுதொடர்பில் என்ன நடந்தது என்று கூறமுடியுமா?
பதில்:- நான் ஜெனிவாவிற்கு சென்றுவந்த காலப்பகுதியில் வீரகே சரி பத்திரிகைக்கு தவறான முறை யில் செவ்வி வழங்கியிருந்தேன் என்றும், பிழையான அறிக்கைகளை பத்திரிகைகளில் வெளியிடக்கூடாது என்றும், கட்சியினருடைய அனுமதியின்றி...
வடமராட்சியில் பொதுமக்களின் காணிகள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது....யாழ்.வடமராட்சி அல்வாய், திக்கம் பகுதியில் பொதுமக்களிற்குச் சொந்தமான 8 ஏக்கர் காணியினை இராணுவத்தினர் சுவீகரிக்கும் நோக்கில் இன்று புதன்கிழமை நில அளவையாளர்கள் மூலம்அளவீடுகள் செய்யப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார்.
ஜே - 400 கிராம அலுவலர் பிரிவிற்குள் அமைந்துள்ள 31 குடும்பங்களுக்குச் சொந்தமான மேற்படி காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படுகின்றது. இது தொடர்பாக அறிந்ததினையடுத்து, தானும் வடமாகாண சபை...
கடந்த சில மாதங்களாக முஸ்லிம் மதத்தினருக்கு எதிராக பொதுபலசேனா என்கின்ற அமைப்பு மிகக் கடுமையான முறையில் எம்மதத்தினையும் கொச்சைப்படுத்தி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் நடந்துள்ளமையானது முஸ்லிம் சமுதாயத்தினரை மன உளைச்சலுக்குள்ளாக்கும் ஒரு நடவடிக்கையாகவே அமையப் பெறுகிறது. இவ்வாறான ஒரு செயல் நடைபெறக்காரணம் என்னவென்று பார்க்கின்றபொழுது, வெறு மனே பொது பலசேனாவை மட்டும் குற்றஞ்சாட்டுவதாக அல்ல. இன்னும் 20 வருடங்களுக்குப் பின் பௌத்த நாடை முஸ்லிம்...