யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த குடும்பங்கள் அதிகளவில் குடும்பத் தலைவர்களை இழந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஆயிரக் கணக்கான குடும்பத் தலைவர்கள் யுத்தம் காரணமாக உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் 84000த்திற்கும் மேற்பட்ட பெண்கள் கணவரை இழந்துள்ளதாகவும், குடும்பப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதுடன் பொருளாதார சுமையையும் சுமக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார். இவ்வாறான பெண்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதுடன், வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய...
நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வை புறக்கணிக்க தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பங்கேற்பது உறுதி என்பதால் தமிழகத்தில் அதிமுகவின் 37 நாடளுமன்ற உறுப்பினர்கள், பாமகவின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என 38 எம்.பிக்களும் அந்த விழாவை புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நரேந்திர மோடி எதிர்வரும் 26 ஆம் திகதி டெல்லியில் பிரதமராக பதவியேற்க உள்ளார். அந்த விழாவில் சார்க்...
இந்தியாவின் 14 ஆவது பிரதமராக எதிர்வரும் 26 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்புவிழாவில் பங்கேற்பதற்காக தன்னுடன் இந்தியாவுக்கு வருமாறு மஹிந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.எனினும் இவ்வழைப்பு தொடர்பினில் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தகவல் எதனையும் வெளியிட்டிருக்கவில்லை. இதனிடையே மோடி பதவியேற்பின் பின்னர் கூட்டமைப்பு அவரை நேரினில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று கொழும்பினில் சம்பந்தர் தலைமையினில் கூடிய கூட்டமைப்பு பங்காளி கட்சிகள் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
  'வடமாகாண மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினர் மக்களைப் பதட்டத்துடன் வாழவே செய்து வருகின்றார்கள் என்பதும் வடமாகாண சபையைப் பொறுத்தவரையில் அவர்களின் நடவடிக்கைகள் பலவாறாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உண்மை நிலையாகும். இவ்வாறான அழைப்பை நான் ஏற்றுக் கொண்டால் உண்மை நிலையை மறைத்து முகமனுக்காக ஏற்றுக்கொள்வதாக அமையும்'  என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். இந்தியாவின் புதிய பிரதமராகத் தெரிவாகியுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை புதுடில்லியில்...
      தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04  காணொளி 1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன. புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார். இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப்...
    இலங்கைவாழ் தமிழ்மக்கள் இந்தியாவை நம்பியிருந்ததொரு காலம். இந்திய ஹெலிகொப்டரில் 1987ம் ஆண்டு யூலை 24ஆம் திகதியன்று புதுடெல்;லிக்கு அழைத்துச்செல்லப்பட்ட புலிகளின் தலைவர் உள்ளிட்ட குழு வினர் இந்தியாவின் அசோகா ஹோட்டலில் உள்ள 518ம் இலக்க விடுதி யில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறுவ தைவிட சிறைவைக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறலாம். பிரபாகரன் தங்கவைக்கப்பட்டிருந்த விடுதிக்கு வெளியே இந்தியாவின் கறுப்புப்பூனைப் படையினர் காவலுக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். அங்கிருந்து பிர பாகரன் உள்ளிட்ட...
  கடந்த பத்தாண்டு காலங்களுக்கு மேலாக, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை எவ்வாறு உடைப்பது என்று அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி இற்றைக்கு ஓரளவு சாத்தியமாகிக்கொண்டு வருகின்றது என்றே கூறவேண்டும். காரணம் என்னவென்றால், தமிழ்த்தேசியக்கூட்டமை ப்பிலுள்ளவர்கள் ஒரு தீர்மானத்தினை எடுக்கும் பொழுது கூட்டாக எடுப்பதில்லை. இதில் குறிப்பிட்ட ஒரு சிலர் மாத்திரமே அங்கம் வகித்துக்கொள்கின்றனர். இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இலங்கையரசு, பிரபாகரனையும் பிரித்த உத்வேகத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும் பிரித்து விடலாம் என்று சுலபமாக நினைத்து செயற்பட்டுவருகின்றது. இவ்விடயம் தமிழரசுக்கட்சிக்கு...
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய நிக்கவெரட்டிய சேனாநாயக்கபுர விகராதிபதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹலம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுமி ஒருவரையே குறித்த விகராதிபதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாகவும் சிறுமி தற்போது நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட விகராதிபதி தொடர்பில் ஏற்கனவே பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாக தெரிவிக்கும் பொலிஸார் குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.        
அடக்குமுறைக்கெதிராக போர்க்கொடி தொடுத்த பிரபாகரன், தமிழ், சிங்கள மக்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. புpரபாகரனின் கட்டுப்பாட்டு பகுதியில் எவரும் எங்கும் சென்றுவரக்கூடிய சூழ்நிலையே காணப்பட்டது. அமைதி காக்கும் படையென இலங்கைக்கு வருகைதந்த இந்தியரசு காட்டுமிராண்டித்தனமாக பாலியல்; பலாத்காரங்களை செய்தது. இதன் காரணமாகவே பிரபாகரன் இந்தியரசுடன் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தமிழ் பேசும் முஸ்லிம் மக்களைக்கூட இந்தியாவின் குருக்காஸ் சீக்கியப்படையினர் விட்டுவைக்கவில்லை. வடகிழக்குப் பகுதிகளில் பல பாலியல்...
இந்தியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடி எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ள இந்நிலையில், ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் அளவிற்கு அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் அமையப்பெற்றுள்ளது. மறுபுறத்தில் இலங்கையரசாங்கத்துடன் இந்தியரசு இன்று நேற்றல்ல கடந்த பல வருடங்களுக்கு மேலாக நெருங்கிய நட்புறவுகளை பேணிவருகின்றது. அதற்கு முக்கிய காரணம் அவர்களின் வியாபார, அரசியற் தந்திரோபாயமும், ஈழத்தமிழர்களினது பிரச்சினையுமேயாகும். நரேந்திரமோடி ஆட்சிபீடமேறி குறைந்தது ஒரு வருடங்களாவது கால...