யுத்தம் முடிந்து யாழ். மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ள 5ஆவது வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள் பெருமெடுப்பில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன்படி யாழ்ப்பாணம் பொது நூலகத்தினை அண்மித்த பகுதியினை வெசாக் வலையமாக அறிவிக்கப்பட்டு பெருமெடுப்பில் வெசாக்கூடுகள் , புத்தரின் வரலாற்றுக் கதைகளைக் கூறும் காட்சிக் கூடங்கள் என மிகவும் பிரமாண்டமான அளவில் குறித்த பகுதி அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் 14ஆம் திகதி இரவு 7 மணிக்கு குறித்த வெசாக் வலையம் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி...
இலங்கையில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வகையில் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.
இது மிகவும் மோசமான ஒரு மனித உரிமை மீறல் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, காண்டுமிராண்டித்தனமானது என அவர் கூறுகிறார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள்...
வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்பான செய்திகள் உண்மையானவை அல்ல – சுரேஸ் பிரேமசந்திரன்
Thinappuyal News -
தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசன்னம் தொடர்பான செய்திகள் உண்மையானவை அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் இராணுவத்தினரை தொடர்ந்தும் நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறான வதந்திகளை கிளப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கின்றார்கள் என சிங்கள மக்களுக்கு தொடர்ச்சியாக சொல்லி பீதியை ஏற்படுத்த வேண்டும்...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது
Thinappuyal News -
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. கொழும்பு பேராயர் இல்லத்தில் ஜனாதிபதி மஹிந்த, கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை சந்தித்துள்ளார். கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஏனைய பேராயர்கள் அண்மையில் பாப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இடம்பெற்று வரும் மத முரண்பாடுகள் குறித்து பாப்பாண்டவர் கருத்து வெளியிட்டிருந்தார்.எதிர்வரும் ஆண்டில் இலங்கை விஜயம் செய்வது குறித்தும் பாப்பாண்டவருடன், பேராயர்கள் பேசியிருந்தனர். இந்த...
சிலை திறப்புவிழா முத்தையா மண்டபத்தில் இன்று நடைபெற்றது
இன்று காலை 9.30 மணியலவில் திரு.ந. சேனாதிராசா தலமையில்
அமரர்.பொன்னையா முத்தையா அவர்களின் ஞாபகார்த்த சிலை திறப்பு விழாவும்
நினைவுப் பேரவையுயம் வெகு சிரப்பாக ஙடைபெற்றது இன் நிகழ்வில்
வடமாகாண சபை சுகாதார அமைச்சர் டொக்டர்.சத்தியலிங்கம் உற்பட வடமாகாணசபை
உறுப்;பினர்கமும் கலந்து சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடதக்கது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை இந்தியாவுக்கு வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான இணைச் செயலாளரினால் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகவலை வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலக அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இணைச் செயலாளரும், இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை விடயங்களைக் கையாளும் மூத்த அதிகாரியுமான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன்...
1990 முதல் 2014ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நடந்த பொருளாதார குற்றம் மற்றும் புலனாய்வு பற்றிய கதையாக உருவாகிறது உறுமீன். சிம்ஹா, காளி, ஆராதனா உள்பட பலர் நடிக்கின்றனர். இதுபற்றி இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி கூறும்போது, தமிழ் நாட்டில் நடந்த பொருளாதார குற்ற புலனாய்வுகளை திரைக்கதையாக அமைத்து உண்மை சம்பவம் பின்னணியை மையமாக வைத்து ஆக்ஷன் திரில்லர் படமாக இது உருவாகிறது. எல்.சிவபாலன் தயாரிக்கிறார். சென்னை, புதுச்சேரி, கோவை,...
போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். இப்படத்தையடுத்து விஷாலுடன் மதகஜ ராஜா படத்தில் நடித்தார். அப்படம் இன்னும் திரைக்கு வராமல் பென்டிங்கில் உள்ளது. இதற்கிடையில் சுதீப் ஜோடியாக மாணிக்யா என்ற கன்னட படத்தில் நடித்தார். தற்போது பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் நடிக்கிறார். நடனத்தில் ஸ்பெஷலிஸ்ட் என்ற வகையில் முதலில் இந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சென்றது. பின்னர் அது வரலட்சுமிக்கு மாறியது. இவரும்...
ஏமன் நாடு அதிபர் வீட்டு அருகே நேற்று இரவு குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஏமன் நாட்டின் துறைமுக நகரில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் அருகில் இருந்த கட்டடத்தின் சுவார் இடிந்துள்ளது. காயமுற்றவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
அர்ஜென்டினாவை சேர்ந்த விஞ்ஞானி ஆன்ட்ரஸ் கேரஸ்கோ காலமானார். அவருக்கு வயது 67. உலகில் மிக பரவலாக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்டுபிடித்தவர்.
இவர் அந்நாட்டு தேசிய அறிவியல் குழுவின் முன்னாள் தலைவராக இருந்தார். கடந்த சிலநாட்களாக அவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.