கால்பந்து உலகக் கோப்பையை ஜெர்மனி அணி வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் கோலி தெரிவித்துள்ளார். இது குறித்து பெங்களூரில் அவர் சனிக்கிழமை மேலும் கூறியதாவது: ஜெர்மனி அணியில் திறமைமிக்க வீரர்கள் பலர் உள்ளனர். மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் ஜெர்மனி மிகவும் ஆபத்தானது. எனது ஆதரவு ஜெர்மனிக்குதான். இந்த ஆண்டு ஜெர்மனிக்கு ராசியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஜெர்மனியின் ஃபிலிப் லாம், எனக்குப் பிடித்த வீரர். அணியில் உள்ள மற்ற வீரர்கள் கோல்...
கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற இந்த சீசனுக்கான டைமண்ட் லீக் தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி-அன் ஃப்ரேஸர்-ப்ரைஸ் (படம்) வெற்றி பெற்றார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் 11.13 விநாடிகளில் இலக்கை எட்டி ப்ரைஸ் முதலிடம் பிடித்தார். நைஜீரிய வீராங்கனை ஓக்பேர் 11.18 விநாடிகளில் வந்து 2-ம் இடத்தைப் பிடித்தார். 800 மீட்டர் பந்தயப் போட்டியின் மகளிர் பிரிவில் உலக சாம்பியனான கென்யாவின் யுனிஸ்...
வான்கடே மைதானம் மும்பை அணியின் கோட்டை என்று கடந்த ஓர் ஆண்டாக நீடித்து வந்த வரலாற்றை தோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள் சனிக்கிழமை இரவு மாற்றி அமைத்தனர். மும்பை நிர்ணயித்த 158 என்ற வெற்றி இலக்கை 19.3 ஓவர்களில் எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அசத்தலாக வெற்றி பெற்றது. இத்துடன், வான்கடே மைதானத்தில் மும்பை தொடர்ச்சியாக பெற்ற 10 வெற்றிகள் என்ற எண்ணிக்கை மேலும் அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது. மும்பையில்...
சிம்புவை காதலித்து பின்னர் அவரை பிரிந்தபோது பிரபுதேவாவுடன் தோள் போட்டுக்கொண்டு எப்படி சிம்புவை சிலகாலம் நயன்தாரா வெறுப்பேற்றினாரோ அதற்கும் மேலாக இப்போது ஹன்சிகா அவரை வெறுப்பேற்றி வருகிறார். குறிப்பாக, சிம்புவுக்கு எந்தெந்த நடிகர்களெல்லாம் பிடிக்காதோ அவர்களுடனெல்லாம் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார். அந்த வகையில், சேட்டையில் இணைந்த ஆர்யாவுடன் சமீபகாலமாக செம லூட்டி அடிக்கிறார் ஹன்சிகா. அதிலும் தற்போது மீண்டும் அவருடன் மீகாமன் படத்தில் இணைந்திருப்பவர், தற்போது தனக்கு கட்டுக்காவல்...
கோச்சாடையான் படத்தையடுத்து ரஜினி நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. அதில் முறுக்கு மீசை வைத்து கிராமத்து கெட்டப்பில் நடித்த ரஜினியுடன் இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடித்த காட்சிகள்தான் மே 2-ந்தேதியில் இருந்து நடந்து வந்தது. அதில் அவர்களது ரொமான்டிக்கான காட்சிகள் மட்டுமே தற்போது படமாக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து லிங்கா படத்துக்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், இனி அந்த...

வாரணாசி உள்பட 41 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு 543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7-ந் திகதி முதல் மே 12-ந் திகதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.இதுவரை 8 கட்ட தேர்தல்களாக 502 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 9-வது இறுதிக்கட்டமாக நாளை 3 மாநிலங்களில் உள்ள 41 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதாவது உத்தர பிரதேசத்தில் 18 தொகுதிகளிலும், மேற்கு வங்காளத்தில் 17...
ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் சர்வதேச மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றின் முதல் அரை இறுதிப் போட்டி நேற்று அங்கு நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடாலும் சக நாட்டவரான ரொபர்டோ பாடிஸ்டா அகட்டும் மோதினர். இதில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று ரபேல் நடால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். ஒரு மணி 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில்...
இந்தோனேஷியாவில் அதிபர் தேர்தல் ஜூலை மாதம் 9-ந்தேதி நடக்கிறது. இதில் முக்கிய எதிர்க்கட்சியான இந்தோனேஷிய ஜனநாயக கட்சி சார்பில் ஜகார்த்தா மாநில கவர்னர் ஜோகோ ஜோகோவி விடோடோ என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இதற்காக கடந்த மாதம் நடந்த முதல்சுற்று தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அப்போது இந்தோனேஷிய ஜனநாயக கட்சிக்கு 18.9 சதவீத ஓட்டுகளே கிடைத்தன. ஜனாதிபதி தேர்தலின் இறுதிச் சுற்றில் போட்டியிடவேண்டும் என்றால் குறைந்த பட்சம் 25 சதவீத...
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 25வது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டன. 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக, இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான விசாரணைப் பொறிமுறையை இன்னமும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் உருவாக்கவில்லை. இது ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வந்த நாடுகள் மத்தியில் கவலைகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கவலை தமிழர்...
சர்வதேச தலசீமியா தினத்தையொட்டி கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அனுசரணையுடன் தலசீமியா நோய் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. வேகமாக மக்களை ஆட்கொண்டுவரும் தலசீமியா நோயில் இருந்து மக்களை விழிப்படைய செய்யும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி. எஸ். எம். சாள்ஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கண்காட்சியை ...