தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள ஒருங்கிணைவு குறித்து அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சும், பாதுகாப்பும் அமைச்சும் உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அரசாங்கத்தினால் அண்மையில் தடை செய்யப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் இயக்கங்களுக்கும் புலிகளுக்கும் உண்டான தொடர்பு குறித்து தெளிவுபடுத்தப்பட உள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கையில் உள்ள ராஜதந்திரிகளுக்கு எதிர்வரும் வியாழக்கிழமை விளக்கம் அளிக்கவுள்ளார். உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த கூட்டத்தில்...
LTTE  நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சந்தேகத்திற்கு இடமான பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெற்றால் அது குறித்து அவதானம் செலுத்துமாறு பொதுமக்களிடம் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார். பயங்கராத செயற்பாடுகள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதனை தடுப்பது காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பை...
  விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத விநியோகஸ்தர்  பத்மநாதனுக்கு எதிராக இண்டர்போல் பொலிஸார் வெளியிட்டிருந்த சிகப்பு பிடிவிராந்து நீக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் கே.பி பயங்கரவாத செயல்களில் ஈடுபடாத காரணத்தினால் அவருக்கு எதிரான இந்த பிடிவிராந்து நீக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். எவ்வாறாயினும், இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் ஒன்றிணைவதை தடுக்கும் நோக்கில் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் 40...
குறித்த உயிரிழந்த யுவதி பெரிய கோவில் என்றழைக்கப்படும் மரியன்னை தேவாலயத்தினில் ஞாயிற்றுக்கிழமைகளினில் மதபோதனைகளை மேற்கொண்டு வந்தவரென கூறப்படுகின்றது. அவ்வேளையினிலேயே இரண்டு இளம் மதகுருமார் அவரை உளவியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் ஏற்கனவே இவ்வாறு இடம்பெற்றிருந்த நிலையினிலேயே தற்போது தமது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் குடும்பத்தவர்கள் வாதிட்டுவருகின்றனர். யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரி அருகில் உள்ள கிணற்றிலிருந்து இளம்யுவதி ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டமை தொடர்பினில் யாழ்.ஆயர் இல்லம் முன்பதாக ஆர்ப்பாட்டமொன்றை...
வில்பத்து வனத்தின் 22 ஹெக்டேயர் காட்டு பகுதியை அழித்து அரபு கொலனி ஒன்றை ஏற்படுத்தி வருவதாக பொதுபல சேனா சுமத்தி வரும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1990 ஆம் ஆண்டு முசலி பிரதேசத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றினர். மரிச்சுக்கட்டி, கரடக்குழி, பாளைக்குழி, முள்ளிக்குளம் ஆகிய கிராமங்கள் வில்பத்து...
             ஐநா விசாரணையின் போது அரசுக்கு எதிராகச் சாட்சியமளிக்க முன்னாள் படை அதிகாரிகள் தயார்? ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்ற விசாரணையின் போது பிரதான சாட்சியங்கள் தமிழர் தரப்பிலிருந்து மட்டுமல்லாமல், படைத் தரப்பிலிருந்தும் முன்வைக்கப்படவுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. யுத்தக் காலத்தில் படைகளில் மிக உயர்ந்த தரத்தில் பணியாற்றிய...
சிறுபான்மை மக்களை மூன்றாம் தரப் பிரஜைகளாக நடாத்தும் அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா? முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானிக்க வேண்டியது அவசியம்.. பொதுபல சேனா இயக்கத்திற்கு அரசாங்கNமு ஆதரவளி;க்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. பௌத்த மதத்திற்கு களங்கம் விளைவிக்க சர்வதேச சக்திகள் பொதுபல சேனா இயக்கத்தை பயன்படுத்தி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஆளும்...
    தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களுக்கு சில நாடுகள் உதவிகளை வழங்கி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாதம் இல்லாத போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின்  பயங்கரவாத வலையமைப்பு உலக அளவில் தொடர்ந்தும் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.   மலேஷியாவின் புத்ரஜயாவில் இடம்பெற்ற 14ம் ஆசிய பாதுகாப்புச் சேவை கண்காட்சியில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை சில நாடுகள் கண்டு கொள்வதி;ல்லை...
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டால் இராணுவ உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள முடியும் அமெரிக்கா நிபந்தனை இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என அமெரிக்கா, நிபந்தனை விதித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென மத்திய மற்றும் தென் ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா...
வாஷிங்டன்: நகரத்து இளைஞர்களையும் இணையத்தையும் பிரிப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு வெப் அவர்களது நேரத்தை விழுங்குகிறது. பலவிதத் தகவல்களையும் அவர்கள் இணையத்திலிருந்தும் சமூக வலைதளங்களிலிருந்தும் பெற்றுக்கொள்கிறார்கள். என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதிலிருந்து இன்று மனசே சரியில்ல என்று தங்கள் மன உணர்வை வெளிப்படுத்துவது வரை எல்லாவற்றையும் உடனுக்குடன் ஃபேஸ்புக் டிவிட்டர் போன்றவற்றில் பதிவிடுகிறார்கள். இதனால் நன்மைகள் இருக்குமளவுக்கு ஒருசில தீமைகளும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஃபேஸ்புக்கில் நேரம் செலவிடுவதற்கும்...