குண்டூரைச் சேர்ந்த ஹரிபாபு என்ற விவசாயின் மகள் தீப்தி (26). இவர் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடன் வேலை பார்த்த கிரண் குமார் என்பவரை கடந்த 2001ம் ஆண்டிலிருந்து காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தீப்தியின் பெற்றோர் எதிர்த்தனர். பெற்றோர்களின் கடும் எதிர்புகளுக்கிடையே தீப்தி-கிரண்குமார்ஜோடி கடந்த 21ம் திகதி ஐதராபாத்தில் உள்ள ஆர்யசமாஜத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதனையறிந்த தீப்தியின்...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உலகில் உள்ள செல்வந்தர்களில் 9வது நபர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்க ஒதுக்கப்பட்ட பணத்தில் அதிகளவான பணம் ராஜபக்சவினரால் கொள்ளையிடப்பட்டுள்ளன. சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு நிதி ராஜபக்ஷவினரால் கொள்ளையிடப்பட்டுள்ளது. நாட்டில்...
30 ஆண்டுகாலப் போர் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் இதனை வெற்றி கொண்ட நாட்டின் பெரும்பான்மை சமூகமும், பாதுகாப்புப் படையும் மிகவும் பெருந்தன்மையுடனும், தாராள மனப்பாங்குடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, இவர்கள் போர் மமதையுடன் நடந்து கொண்டனர். இவ்வாறு கொழும்பை தளமாகக்கொண்ட Ceylon Today ஆங்கில ஊடகம் தனது ஆசிரியத் தலையங்கத்தில் சுட்டிக்காட்டி உள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கர்களின் 'காஸா' என நோக்கப்படும் வடக்கில் சிறிலங்கா...
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா, நடுநிலை வகித்தமை மிகப் பெரிய தவறு என ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான நிமல்கா பெர்னான்டோ ஆகியோர் தெரிவித்துள்ளனர். 2012லும், 2013லும் எதிராக வாக்களித்தது. ஆனால் இம்முறை விலகியிருந்தமை. பெரிய தவறு, இலங்கையில் போர் முடிவுக்கு வந் பின்னர், தமிழர்கள் உள்பட அங்குள்ள எல்லா சமூகத்தவருக்கும் அரசியல் தீர்வு காண்பதற்கான சிறந்த வாய்ப்பை கொடுத்துள்ளதாக இந்தியா தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது...
  விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் இருந்தார்கள் என பல ஆண்டுகளாக சர்வதேசமும், சர்வதேச அமைப்புக்களும் இலங்கையுடன் சேர்ந்து குற்றம் சுமத்திய வண்ணமே உள்ளனர். இன்று வரையும் புலிகளை முற்றிலுமாக ஒழித்து விட்டோம் என்று சொல்லிய பிறகும், அந்தக் குற்றச்சாட்டுக்கள் முற்றுப் பெற்றதாகத் தெரியவில்லை! சர்வதேசம் சிலவேளைகளில் மறந்து போய் அமைதியாக இருந்தாலும் தமிழர் விரோத சக்திகள் மீண்டும் “சிறுவர் போராளிகள்” விடயத்தினை இலங்கை அரசுடன் சேர்ந்து ஊதிப் பெருப்பித்து விடுகின்றனர்....
ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட உள்ள பிரேரணை, மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றை இலக்கு வைத்து ராஜபக்ஷ அரசாங்கம் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பான புதிய பிரசாரங்களை ஆரம்பித்துள்ளது. இந்த புதிய பிரசார தந்திரோபாயத்தின் அடிப்படையில் நேற்று அதிகாலை யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள 200 கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டு 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பில், இராணுவத்தின் விசேட அதிரடிப்படைப் படைப்பிரிவு,...
ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்றாலும்இ ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்தியாவின் இலங்கை கொள்கையில் மாற்றம் வரும் என்கிறார் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பி சஹாதேவன். இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் முன் மொழியப்பட்டிருக்கும் தீர்மானம் அடுத்தவாரம் ஐநா மன்றத்தின் மனித உரிமை அவையில் கொண்டுவரப்பட இருக்கும் சூழலில்இ இலங்கை தொடர்பான சர்வதேச நாடுகள்இ குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாடுகள் குறித்த...
கருணா அம்மான் எனப்படும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ள தனது பிள்ளைகள் தொடர்பில் கருணா அம்மான் தான் பொறுப்பு கூற வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த 57 வயதான தந்தையொருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தற்போது அரசாஙகத்தில் மீள்குடியேற்ற துணை அமைச்சராக பதவி வகித்து வருகின்றார். வடக்கு- கிழக்கு மாகாணங்களில் காணாமல்...
இலங்கையில் நடைபெற்று வந்த யுத்தம் இன்று சர்வதேச அளவில் இடம்பிடிக்கும் அளவிற்கு அதனுடைய செயற்பாடுகளை உலக அரங்கிற்கு எடுத்துரைத்தது ஊடகங்களே. அந்தவகையில் 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சனல் 4 ஊடகமானது இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்கத்தொடங்கியது. இராணுவ புலனாய்வினரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணப் படங்களே இன்று உலகவளம் வருகின்றது. அதனடிப்படையில் ஜெனிவாவில் நடைபெற்ற அமர்வுகளில் எல்லாம் இலங்கை தொடர்பான ஒளிநாடாக்கள் மட்டுமல்லாது சர்வதேச ஊடகங்களில் கூட புலித்தேவன், ரமேஸ்,...
இலங்கைத் தீவினில் வாழும் சிறுபான்மை இனமக்களின் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்வதற்காக மக்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்ற தன்மையினை ஆர்ப்பாட்டங்கள், சத்தியாக்கிரகங்கள், பேரணி கள், போன்றவற்றின் ஊடாகத் தெரிந்து கொள்ளலாம். தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக அணிதிரண்டு வடமா காணசபையை தமிழ்த் தலைமைகளி டம் கொடுத்திருந்தாலும் மக்களுக்காக வழங்கிய வாக்குறுதிகளை தமிழ அரசி யல் தரப்பு இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறதே தவிர அவற்றை நிறைவேற்றமுடியாத கையாலாகாத நிலை யில் இருக்கின்றது என்பது மனவருந்தத்...