பிராந்திய செய்திகள்

‘ஈழநாடு’ செய்தித்தாளின் சிரேஸ்ட செய்தியாளர் கே.ஜி மஹாதேவன் காலமானார்!

மூத்த தமிழ் செய்தியாளர் கே ஜி மஹாதேவா காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை சென்னையில் தமது 76 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான 'ஈழநாடு' செய்தித்தாளின் சிரேஸ்ட செய்தி ஆசிரியராக...

திருகோணமலை உப்புவெளி பகுதியில் காணாமல் போன ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் மீட்பு!

திருகோணமலை உப்புவெளி பகுதியில் இரண்டு பிள்ளைகள் காணாமற்போயுள்ளனர். 9 வயதான சிறுமியொருவரும் 11 வயதான சிறுவனொரும் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக வகுப்பிற்காக கண்ணியா சென்ற வேளையிலேயே நேற்று (12) மாலை இரு பிள்ளைகளும் காணாமற்போயுள்ளதாக...

யாழ்.நீதிமன்ற வளாகத்தில் வெள்ளை வான் – இளைஞர்களிடையே பதற்றநிலை!

யாழ் நீதிமன்றில் நீதிவான், வழக்கினை நிறைவு செய்து வெளியில் வரும் போது, கொழும்பு குற்றப்பிரிவினர் மூவரை வெள்ளை வானில் ஏற்றி சென்றுள்ளதனால் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர்களிடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று நீதிமன்ற...

கிளிநொச்சியில் சடலம் மீட்பு! கொலையா தற்கொலையா? குழப்பத்தில் பொலிஸ்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில், இனந்தெரியாத ஆண்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த பகுதிக்கு மாடு கட்டச் சென்ற பெண் ஒருவர் வழங்கிய தகவலின்பிரகாரம், குறித்தசடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த...

கொழும்பில் மீண்டும் காசநோய் அபாயம்! எச்சரிக்கை

கொழும்பில் மீண்டும் காசநோய் தலைதூக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வட கொழும்பு மற்றும் மாளிகாவத்தை பிரதேசங்களில் இந்த நோய் அதிகம் பரவி வருவதாக கொழும்பு நகரசபையின் வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். கடந்த 8 மாதங்களில்...

முல்லைத்தீவு, மாங்குளம் – மல்லாவி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளர்.

முல்லைத்தீவு, மாங்குளம் - மல்லாவி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாங்குளத்தில் உள்ள பாடசாலைக்கு மகனை விடுவதற்காக வந்தவேளை வீதியின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

வவுனியா விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் கையளிப்பு

வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு வவுனியா விவசாய பண்ணையில் இன்று (13.09) விவசாய திணைக்களத்தின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட சுமார்...

நாட்டில் கொலைச் சம்பவங்கள் மற்றும் கொள்ளை, பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகின்றது.

நாட்டில் கொலைச் சம்பவங்கள் மற்றும் கொள்ளை, பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்படுவதும் கொலை செய்யப்படுவதும் இன்றைய காலங்களில் அதிகரித்துள்ளன. அதுமட்டுமன்றி கொலை செய்யப்படும் சம்பவங்களும் பாரிய...

யாழ் வட்டு இந்து கல்லூரிக்கு மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு

யாழ் வட்டு இந்து கல்லூரிக்கு 22.2 மில்லியன் ரூபா செலவில் மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பிரதம அதிதியாக...

திருகோணமலையின் இன்றைய நிலை!

நாட்டில் பல பாகங்களிலும் கடுமையான வரட்சி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் கடுமையான வரட்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவையில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியான...