கலப்படம் செய்யப்பட்ட கொத்தமல்லி பிடிபட்டது.
கலப்படம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 575 கிலோகிராம் கொத்தமல்லி கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களினால் வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து நேற்று(சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே கொத்தமல்லி கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர்கள்...
புனர்வாழ்வின்பின் உயிரிழந்த போராளிகளின் விபரங்களை வழங்க அறிவுறுத்து
புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் சந்தேகத்து இடமாக உயிரிழந்தவர்களுடைய விபரங்களை உடனடியாக வழங்குமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கேட்டுள்ளார்.
உயிரிழந்த முன்னாள் போராளியின் பெயர், சிகிச்சை பெற்ற வைத்தியசாலை, உயிரிழந்த...
பரீட்சைகள் மண்டப பணிகளில் முறைகேடுகள்
இம்முறை இடம்பெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுவருவதாக கல்வி கல்விசாரா ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பரீட்சைகள் மண்டப உதவியாளர் தெரிவுகளில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக இந்ததொழிற்சங்கத்தின் செயலாளர் அஜித்.கே.திலகரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் தகுதியற்றவர்கள் இவ்வாறு...
மாணவர்களிடையே கத்திக்குத்து
அக்குரஸ்ஸ நகரில் இன்று பகல் இரு தரப்பிடையே ஏற்பட்ட மோதலால் மூன்று மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அக்குரஸ்ஸ நகரின் துணிக்கடை ஒன்றில் குறித்த கடை ஊழியர்களுக்கும், இம்முறை உயர்தரப்பரீட்சையில்...
கரைச்சியில் இராணுவத்தினரிடம் இருந்த கட்டடம் உரியவர்களிடம் கையளிப்பு
கிளிநொச்சி ஏ 35 வீதி கோரக்கன் கட்டுப்பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த கரைச்சி வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டடம் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் படையினரின்...
மோட்டார் சைக்கிளை பாகங்களாக்கியவர்கள் கைது
வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி, அதன் பகுதிகளை கழற்றி எஞ்சினை கழிவு நீர் வாய்காலில் மறைத்து வைத்ததாக கூறப்படும் இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மோட்டார்...
ஜெயக்குமாரி மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் அழைப்பு
சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த திருமதி பாலேந்திரன் ஜெயக்குமாரி மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் 16ம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பினரின் அலுவலகத்திற்கு...
முதலாம் திகதி முதல் அமுலாகிறது வடமாகாணத்துக்கான வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நியதிச் சட்டம் (Photos)
வடமாகாணத்துக்கான வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நியதிச் சட்டம் விரைவில் உருவாக்கப்பட்டு ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மக்கள் அதி உச்சப் பயனை அடையக் கூடிய வகையிலும், பாதுகாப்பான, தரமான போக்குவரத்துச் சேவையை...
24 மணி நேரத்துக்குள் கடும் காற்று வீசும் அபாயம்: வானிலை அவதானம் நிலையம்
இலங்கையை ஊடறுத்தும் நாட்டுக்கு அண்மையில் உள்ள கடற்பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
24 மணிநேரத்துக்குள் இதனை எதிர்ப்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ள...
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும் வரலக்சுமி காப்பு விரதம் அனுஷ்டிப்பு
முல்லைத்தீவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும் வரலக்சுமி காப்பு விரதம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமக் குருக்கள் கீர்த்தஸ்ரீவாசன் குருக்கள் தலைமையில் அபிசேக பூசைகள் இடம்பெற்று விரத்தை...