அம்பலாங்கொடை நகரில் நேற்று (22) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கொள்ளைச் சம்பவத்தில், மோட்டார்சைக்கிளில் வந்து பெண் ஒருவரை வழி மறித்துக் கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் இருவரையும், வங்கியில் வைப்பிடச் சென்ற ரூபா 18,60,000 பணத்துடன் கைது செய்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் குறித்த குறித்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்த, பணத்தை பறிகொடுத்த பெண்ணின் உறவினரின் மகன் ஒருவரையும் கைது செய்துள்ளதாக...
  கொத்துரொட்டி தயாரிப்பதற்காக ஏற்கனவே அரிந்துவைக்கப்பட்ட வீச்சுரொட்டி பொதிகளை பழுதடைந்த நிலையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேற்று கொழும்பு மருதானை டீன்ஸ் வீதி உணவகமொன்றிலிருந்து கைப்பற்றினர். சுகாதார அமைச்சின் பணிப்பிற்கமைய நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
  சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உமாதேவி என்ற பெண், கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதா மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் கதாநாயகியான நடிகை ராதா எனது கணவரை அபகரித்துக்கொண்டார். அவரிடம் இருந்து, எனது கணவரை மீட்டு தாருங்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் மனு மீது தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன் விசாரணை நடத்தினார். அப்போது,...
 தமிழ் காவல்துறையிருக்கு கடமை நிமித்தம் சிவில் உடையில் பலாலி மற்றும் காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகப் பயணம் செய்வதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். வலிகாமப் பிரதேசங்களான அன்டனிபுரம், காங்கேசன்துறை பகுதிகளில் இராணுவத்தினரால் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனூடாக பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்கு பயணிக்கும் வாகனங்கள் மற்றும் உந்துருளிகள் என்பன பதிவு செய்யப்பட்ட பின்னரே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் நெல்லியடி, அச்சுவேலி, பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை போன்ற காவல்...
  வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் நேற்றைய நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார். வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் நேற்று யாழ்ப்பாணத்தில் முதலீட்டாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதில் மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் நட்ராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், வடக்கிலுள்ள...
  முப்படைகளின் உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரையிலான அனைத்து அங்கத்தவர்களதும் பாதுகாப்பிற்காகவும் அபிமானத்திற்காகவும் முன்னிற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முப்படைகளின் பிரதானி என்ற ரீதியிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் தனது பொறுப்புக்கள் தொடர்பாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறைத்து மதிப்பிட்டு தான் நடவடிக்கை மேற்கொள்வதில்லையெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற 09 ஆவது பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டியின் பூர்த்தி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே...
  மட்டக்களப்பில் இருந்து காங்கேசன்துறைக்கான இரவு நேர பஸ் சேவை நேற்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதலாவது பஸ் பயணம் நேற்று இரவு 8.20 அளவில் மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து ஆரம்பமாகியது. இந்த இரவு நேர நெடுந்தூர பஸ் சேவையானது 412 கி.மீ தூரம் கொண்ட இந்த பஸ் சேவையை பல காலங்களுக்கு பின் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் ஆரம்பித்து வைத்தார். மட்டு-யாழ் மக்களினதும், மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகம், இசை...
  திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூரம் திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் இருந்து வெறும் கைகளால் வடை சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு சுடப்பட்ட 7 வடைகள் ரூ. 26 ஆயிரத்திற்கு ஏலம் போனது. திருவண்ணாமலை மாவட்டம், கேளூர் அடுத்த துரிஞ்சிகுப்பத்தில் ஆதிபராசக்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் 3ம் வெள்ளியன்று ஆடிபூரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று 16ம் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி,...
ஐ.டி ஊழியர் சுவாதி கொலை வழக்கில் 10 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சிசிடிவி காட்சியில் பதிவான உருவத்துடன் ராம்குமார் முகபாவனை ஒப்பீடு நடந்து வருகிறது. கடந்த ஜூன் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மென் பொறியாளர் சுவாதி. இந்தக் கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் எவ்வித தீர்மானங்களும் இன்றி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த கொலைச் சந்தேகநபர்கள் 12 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.ரியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். மாணவி வித்தியா கொலைசெய்யப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், கொலையாளிகள்...