இந்திய சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் அனைவரும்முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கின்றனர். அந்த வகையில் இவர் தற்போது அகிரா என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா முக்கியமாக கதாபாத்திரத்தில் நடிக்க, அடுத்து முருகதாஸ் தெலுங்கு படம் ஒன்றை இயக்கவிருப்பதாக கூறப்படுகின்றது. இப்படத்தில் ஹீரோவாக மகேஷ் பாபு நடிக்க, ஹீரோயினாகஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க முடிவு எடுத்துள்ளார்களாம். ஸ்ருதி ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் நடிப்பில் வெளிவந்த மாரி எதிர்ப்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை. இதனால் தன் வெற்றிக்கூட்டணியான விஐபி டீமுடம் இணைந்து உருவாக்கியுள்ள தங்கமகன் படத்தை எப்படியாவது ஹிட் அடித்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்த நிலையில் டீசர் விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படம் டிசம்பர் 18ம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இதே நாளில் தான் உதயநிதி நடித்த கெத்து படமும் வரவிருப்பதாக கோலிவுட்டில்...
நடிகர் சங்க தேர்தல் நடந்த முடிவதற்குள் பல நடிகர், நடிகைகளுக்கு இடையே பிரச்சனை வந்து விட்டது. இந்நிலையில் பாண்டவர் அணிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தவர் ராதிகா சரத்குமார். நேற்று சரத்குமார் அணி தோல்வியடைய ராதாரவி, சிம்பு, ராதிகா என அந்த அணியை சார்ந்த பலரும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால், ராதிகா தன் டுவிட்டர் பக்கத்தில் அனைத்தையும் மறந்து பாண்டவர் அணிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர்பாத்திமா பாபு. இவர் ஒரு சில படங்களிலும் தலையை காட்டியுள்ளார். சமீபத்தில் ஆளுங்கட்சியை சார்ந்த நடிகர், நடிகைகள் தங்கள் விருப்பப்பட்ட அணிக்கு வாக்களிக்கலாம், ஆனால், வாக்கு சேகரிக்க எங்கும் செல்லகூடாது என கட்சி தரப்பில் கூறப்பட்டது. ஆனால், ஆளுங்கட்சி தொலைக்காட்சியில் வேலைப்பார்க்கும் இவர்சரத்குமார் அணியுடன் ஓட்டு சேகரிக்க சென்றது பெரும் அதிருப்தியை ஏற்பத்தியுள்ளதாம். இதனால், அந்த தொலைக்காட்சியில் இருந்து இவரை நீக்கி விட்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகள் ஐபிஎல் தொடரில் இடம்பெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் பி.சி.சி.ஐ.-யின் புதிய தலைவர் ஷசாங்க் மனோகர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சூதாட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகளின் நிலைமை தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. இதில் சென்னை, ராஜஸ்தான் அணிகளை ஐபிஎல் தொடரில் இருந்து நீக்க பி.சி.சி.ஐ விரும்பவில்லை என்றும், அதற்குப்பதில்...
என்னை முழு பந்துவீச்சாளராக மாற்றிய பெருமை ஜாகீர் கானுக்கு தான் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா உருக்கமாக கூறியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் தான் எனது கிரிக்கெட் வாழ்வில் பல விடயங்களை கற்றுக் கொடுத்தவர், அவர் செய்த உதவிகளை என்றும் மறக்க மாட்டேன் என்று இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி தொடரில் 2-1 என்று முன்னிலையில் உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய...
ரஞ்சி கிண்ணப் போட்டியில் பஞ்சாப் அணியில் இந்திய அதிரடி வீரர் யுவராஜ் சிங் முதல் இன்னிங்சில் 187 ஓட்டங்கள் விளாசி அசத்தியுள்ளார்.ரஞ்சிக் கிண்ணப் போட்டியில் பஞ்சாப்- குஜராத் அணிகள் மோதின. இதில் முதல் இன்னிங்சில் பஞ்சாப் அணியின் யுவராஜ் 187 ஓட்டங்கள் (14 பவுண்டரி, 7 சிக்சர்) அடித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் எனது ஆட்டத்தை விரும்பி ஆடுகிறேன். இது போன்ற ஆட்டம் நான் மீண்டும் இந்திய அணிக்கு...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மீதமிருக்கும் 2 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி இன்று தெரிவு செய்யப்படவுள்ளது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் மீதமிருக்கும் 2 ஒருநாள் மற்றும்...
விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக பல்வேறு வியத்தகு கண்டுபிடிப்புக்கள் நாள்தோறும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.இவற்றின் தொடர்ச்சியாக தற்போது உலகிலேயே மிகவும் பாரம் குறைந்த உலோகம் உருவாக்கப்பட்டுள்ளது. Microlattice என அழைக்கப்படும் இந்த உலோகமானது முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட Styrofoam எனும் உலோகத்தினைவிட 100 மடங்கு பாரம் குறைந்ததாகும். இது 99.99 சதவீதம் வளி நிரம்பியதும், 100 நனோமீற்றர்கள் தடிப்பம் உடையதுமான சிறிய உலோக குழாய்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இக் குழாய்கள் மனிதனின் தலை முடியின் தடிப்பை...