டி56 ரக ரவைகள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (22.03.2024) இடம்பெற்றுள்ளது.
விசேட சோதனை நடவடிக்கை
இந்நிலையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையி்ன் போது காந்தி நகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், டி56 துப்பாக்கி 13 ரவைகள் மற்றும்...
கடற்றொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வை எழுத்து மூலம் பெறத்தேவையில்லை எனவும், எனது சொல்லும் செயலும் ஒன்று தான் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் பிரதிநிதிகளுக்கு விளக்கம் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திற்கு அருகாமையில் இன்று (22.03.2024) இந்திய கடற்றொழிலாளர்களால் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி இடம்பெற்ற உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்கள்
அவர் மேலும்...
திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஆற்றில் பாய்ந்த நிலையில் தேடுதல் நடவடிக்கையில் கல்முனை தலைமையக பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அண்மையில் வீதியில் சென்ற பெண் ஒருவரின் தங்க மாலையை அறுத்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸ் குழு நற்பிட்டிமுனை பாண்டிருப்பு எல்லை பகுதிக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று குறித்த சம்பவத்துடன்...
வெற்றிலைக்கேணி கடற்பகுதிகளில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஒன்பது பேரை கடற்படையினர் கைது செய்ததுடன் மூன்று டிங்கிபடகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (22.03.2024) இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத கடற்றொழில்
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் 22 வயது முதல் 49 வயது வரையிலானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ரோந்து நடவடிக்கைகளின் போது, கடற்படையினர் 03 சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகளை இடைமறித்து, சோதனையிட்டபோது சட்டவிரோத இரவு டைவிங்கில்...
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர் புரம் பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவர் அவரது சகோதரியின் கணவனால் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி கடந்த (20.03.2024) அன்று ஆறுமாத கர்ப்பம் தரித்த நிலையில் வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு சென்ற போது குறித்த குற்றச்செயல் வெளிவந்துள்ளது.
சட்ட ரீதியான நடவடிக்கை
புதுக்குடியிருப்பு - வள்ளுவர் புரம் பகுதியில் சிறுமி தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.
சிறுமியின் சகோதரியின் குடும்பம் பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவரும்...
மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட 6 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த 6 பேரையும், எதிர்வரும் 4ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை திருக்கோவில் மெதடிஸ்த...
விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற நெல் அறுவடையை விற்பனை செய்தல் உள்ளிட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகள் பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடி
அவர் மேலும் உரையாற்றியதாவது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டோம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.
ஆனால்...
மரதன் மற்றும் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் மருத்துவ பரிசோதனை
Thinappuyal News -
பாடசாலைகள் மற்றும் பொதுமக்களுக்காக நடத்தப்படும் மரதன் மற்றும் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரதன் மற்றும் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்த புதிய சுற்றறிக்கையை விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனை
குறித்த சுற்றறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, மரதன் ஓட்டப் போட்டிகளில் ஈடுபடும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க மருத்துவ அறிக்கை மற்றும் ஈசிஜி...
தொழிலதிபர் ஒருவரின் சடலத்தினை அவரது இரண்டு மனைவிகளும் உரிமைக்கோரியதனால் மலர்சாலையில் வைத்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை வலான பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் மாரடைப்பு காரணமாக பாணந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த வர்த்தகருக்கு இரண்டு மனைவிகள் இருந்ததாகவும், அவர் இறக்கும் போது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை
குறித்த நபரின் முதல் மனைவி...
"டினியா" எனப்படும் தோல் நிலை படிப்படியாக தொற்றுநோய் வடிவத்தில் உருவாகி வருவதாக தோல் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த தொற்றுநோய் வயது வித்தியாசமின்றி அனைத்து மக்களிடமும் பரவுவதாகவும், பெரும்பாலும் வியர்வை உள்ள இடங்களிலும், தலையைச் சுற்றியும் ஏற்படும் தன்மை இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் விசேட வைத்தியர் ஜனக அகரவிட்ட, விசேட வைத்தியர் இந்திக கரவிட்ட உள்ளிட்ட வைத்தியர்கள் பலரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன், மக்களுக்கு மேலும் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
நோய் தொற்று...