சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க மகிந்த ராஜபக்ச வாக்களித்த போதிலும், நாமல் ராஜபக்ச அதனை தவிர்த்துள்ளமை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது. தச பல சேனா எனும் பிரச்சாரத்தின் பலத்தை நாமல் ராஜபக்ச மகிந்த ராஜபக்சிவிடம் காட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். தற்போது சிறையில் உள்ள கெஹலிய ரம்புக்வெல்லவும் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு வாக்களிக்க வந்தமை விசேட கவனத்தைப் பெற்றுள்ளது. அரசியல் செயற்பாடு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவர் நாடாளுமன்றத்திற்கு வருவது...
  பேருந்தில் 13 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படத்திய 39 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கங்கொடபிட்டிய பகுதியை சேர்ந்த கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் குறித்த சிறுமி பாடசாலை மாணவர்களுக்காக சிசுசெரிய பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​பேருந்தில் இருந்த தனது மகள் யாரோ ஒருவரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமியின் தாயார் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடற்படை சிப்பாய் முறைப்பாட்டிற்கமைய,...
  எயார்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு தனியார் முதலீட்டாளரினால் முறையான ஏலத்தொகை சமர்ப்பிக்கப்படாவிடின், அதனை தனித்தனியாக மூன்று நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஸ்ரீலங்கன் கேட்டரிங், விமான நிலைய சேவை நடவடிக்கைகள் மற்றும் விமானச் செயற்பாடுகளை மூன்று நிறுவனங்களாகப் பிரித்து விற்பனை செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்போது ஸ்ரீலங்கன் விமான நடவடிக்கைகளில் மட்டுமே நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் விமான...
  9 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கான விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் இந்த தயாரிப்புகளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விலை குறைப்பு செய்யப்படவுள்ள 9 பொருட்களின் புதிய விலைகள் பின்வருமாறு அமைகின்றன. ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு 550 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். சிவப்பு கௌபி ஒரு கிலோ கிராம்...
  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் திங்கட்கிழமை பரிசீலிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இந்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனு தொடர்பான ஆவணங்கள் தமக்கு கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம...
  வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்து தேர்தலில் வெற்றிபெறச் செய்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை கூறுவதற்காகவே நான் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளேன் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவசியமற்ற செயற்பாடுகள் மேலும் தெரிவிக்கையில், “உங்கள் நம்பிக்கையின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அத்திபாரத்தை அமைப்பதே...
  ரணில் விக்ரமசிங்கவினால் இன்று யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் காணிகள் 278 ஏக்கர் விடுவிக்கப்பட்டது. ஜே- 244 வயாவிளான் கிழக்கு , ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு , ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டது. காணி உரிமையாளர்கள் அச்சுவேலி வயாவிளான் பகுதி ரெயிலர் கடை சந்திப்பகுதியில் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
  விண்வெளி சுற்றுலா நிறுவனம் ஒன்று உங்களை விண்வெளிக்கு அழைத்துச்சென்று, நட்சத்திரங்களுக்கு கீழே சௌகரியமான இரவு உணவை வழங்க முன்வருகிறது. உலகில் தொடங்கப்பட்டுள்ள மிகச் சில முதல் சொகுசு விண்வெளி-சுற்றுலா நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் SpaceVIP இதனை அறிவித்துள்ளது. விண்வெளியில் இரவு உணவு உண்பது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் என சொகுசு விண்வெளி சுற்றுலா நிறுவனமான SpaceVIP தெரிவித்துள்ளது. நெப்டியூன் விண்கலத்தில் புவி சுற்றுப்பாதையின் விளிம்பிற்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு...
  ஹானர் நிறுவனம், போர்ஷே டிசைன் நிறுவனத்துடன் இணைந்து, மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்த மேஜிக் 6 RSR ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Magic 6 RSR Honor Porsche Design Magic 6 RSR இந்த போன் உயர்ந்த தொழில்நுட்ப வசதிகள் மட்டுமல்லாமல், Porsche பிராண்டின் பாணியை பிரதிபலிக்கும் ஆடம்பரமான வடிவமைப்பையும் கொண்டுள்ளது. பவர்ஹவுஸ் செயல்திறன் Magic 6 RSR சமீபத்திய Snapdragon 8 Gen 3 மொபைல் பிளாட்பார்மை கொண்டுள்ளது, இது அபரிமித வேகத்தையும் பதிலளிக்கும்...
  இந்தியாவில் ரூ.10 லட்சம் விலையில் சிறந்த Mileage கொடுக்கும் கார்கள் மொடல்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். Maruti Suzuki WagonR மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR) என்பது இந்தியாவில் காணப்படும் Hatchback model ஆகும். இதன் விலையானது ரூ.5.52 லட்சம் முதல் ரூ.7.38 லட்சம் (Ex-showroom) வரை விற்பனையில் கிடைக்கிறது. இந்த காரானது Petrol engine மற்றும் manual transmission மூலம் 25.19 கிமீ/லி Mileage வழங்குகிறது. அதேபோல,...