கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என,   தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் Tedros Adhanom Ghebreyesus இதனைத் தெரிவித்துள்ளார். பெருமளவில் கட்டுப்படுத்த முடியாமல் பூதாகரமாக எழும் தொற்று நோய் பரவலை, ‘பாண்டமிக்’ என மருத்துவத்துறையினர் குறிப்பிடுகின்றனர். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பினை ‘பாண்டமிக்’ என அறிவிக்கவும் உலக சுகாதார நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, கொரோனா வைரஸ்...
வில்லியாக நடிக்க ஆசைப்படுவதாக நடிகை நிவேதா தோமஸ் தெரிவித்துள்ளார். தனது சினிமா குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்ட அவர், “கதாநாயகியாக நடித்துக்கொண்டு இன்னொரு புறம் நடிகர்களுக்கு மகளாகவும் நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். எனக்கு வில்லியாக நடிக்கவும் ஆசை இருக்கிறது. அந்த மாதிரி கதாபாத்திரத்தை பற்றி நிறைய நாட்கள் யோசித்து இருக்கிறேன். நிவேதா என்றால் அழகான பெண் என்று நினைக்கின்றனர். அதே நிவேதா வில்லியாக வந்தால் ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்பதை பார்க்க ஆசையாக...
தீவகப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு எதிராக உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இதனால், வேலணை பிரதேச செயலகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வேலணை பிரதேச செயலகத்தில் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஒருங்கிணைப்புக் குழுக்...
கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 40/1 மற்றும் அதற்கு முந்தைய 30/1, 34/1 ஆகியவற்றிலிருந்து விலகுவதற்கான முடிவினை இலங்கை அரசாங்கம் ஐ.நா. சபையில் உத்தியோகப்பூர்வமாக நேற்று அறிவித்தது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடரில் இலங்கை சார்பாக இந்த அறிவிப்பை வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, நாளை (வெள்ளிக்கிழமை) ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்போது,...
யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து இலங்கையர்கள் இருவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 691 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்த ஒரு விசேட விமானம் மூலம் ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டயமன்ட் பிரின்ஸஸ் கப்பலில் சேவையாற்றிய இலங்கை ஊழியர்கள் இருவரும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என...
சிவகங்கை மாவட்‌டம் கீழடியில் நடைபெற்று வரும் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 2 முதுமக்கள் தாழிகள்,  மண் ஓடுகள் மற்றும்  பாசி மணிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் கடந்த 19-ஆம் திகதி முதல் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார்  122 ஏக்கர் பரப்பில் விரிவான அகழ்வாராய்ச்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொந்தகை ஈமக்காடு பகுதியில் நடத்தப்பட்ட  ஆய்வில்  இரண்டு முதுமக்கள் தாழிகளும்,  ஏராளமான மண் ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன....
யாழ். வண்ணார்பண்ணை மற்றும் கொக்குவில் மேற்கு பகுதிகளில் 3 இடங்களில் வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. நேற்று மாலை 6 மணியளவில் வண்ணார்பண்ணை முருகமூா்த்தி ஆலயத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற வாள்வெட்டு கும்பல், கடையை அடித்து நொருக்கியதுடன், உரிமையாளரையும் தாக்க முயற்சித்துள்ளது. இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை நடாத்தியிருக்கின்றது. குறித்த கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு கொக்குவில் மேற்கு...
தேசியக் கொள்கையொன்று இல்லாமல் பயணிக்கும் அரசாங்கத்தால் நாட்டின் எதிர்காலமே பாதிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். சிறிகொத்தவில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “2015ஆம் ஆண்டு நாம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது, நாட்டின் பொருளாதாரம் பாரிய பின்னடைவையே சந்தித்திருந்தது. எனினும், 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் ஊடாக நாட்டை முன்னேற்றவும் மக்களுக்கான...
வெலிகம மிரிஸ்ஸ பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற நிலையில், சம்பவத்தில் காயமடைந்தவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் வீட்டில் வைத்து இவ்வாறு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நியாயமான விலையில் மீன்களைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இழுவைப்படகு உரிமையாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்தப் பணிப்புரையை விடுத்தார். ஏற்றுமதி சந்தை தொடர்பாக கொள்கை அடிப்படையில் புதிய திட்டங்களை வகுக்கும்போது ஏற்றுமதியாளர்கள், மீன்பிடிப்படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட குழுவொன்றின் மூலம் செயற்படுவதன் அவசியத்தை...