வவுனியா ஓமந்தை பகுதியில் காரில் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற மூவரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஏ9 வீதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே யாழ்ப்பாணத்திலிருந்து சம்மாந்துறை நோக்கி காரில் பயணித்த மூவர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 24, 28, 29 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோ 126 கிராம் கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக...
யாழில் நகைகளை கொள்ளையடித்து வந்த கொள்ளை கும்பலையும், அவற்றை கொள்வனவு செய்து வந்த வர்த்தகர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தென்மராட்சி பகுதியிலுள்ள வங்கி ஒன்றின் முகாமையாளர் கடந்த வாரம் வங்கியிலிருந்து வீடு திரும்பிய வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்கள் முகாமையாளர் அணிந்திருந்த மூன்றரைப் பவுண் தங்க சங்கிலியை அறுத்து சென்றனர்.
கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை அடையாளம் கண்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முகாமையாளர் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டின்...
முல்லைத்தீவு - மணற்குடியிருப்பு பகுதியில் உயர் ரக மீன்வகைகள் பல பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தினால் இவ்வாறான மீன்வகைகள் பிடிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இவர்களுக்கு பெருந்தொகை வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்த அதிர்ஷ்டம் மணற்குடியிருப்பு பகுதி மீனவர்களுக்கு கிடைத்துள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.
புத்தளம் கற்பிட்டி கடற்பகுதியிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சி செய்த மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
கற்பிட்டி கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினராலேயே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடலில் பயணித்த படகொன்றை சந்தேகத்தின் பேரில் வழிமறித்து சோதனை மேற்கொண்டபோதே அதிலிருந்த 7 கிலோ தங்கத்தை படையினர் கைப்பற்றியதுடன், படகில் பயணித்த மூவரையும் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர்கள் இந்தியா நோக்கியே தங்கத்தை கொண்டுசெல்ல முயன்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும்...
சிலாபம் - மகவெவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து நேற்றைய (04-11-2018) தினம் இடம்பெற்றுள்ளது.
அதிவேகமே குறித்த விபத்துக்கு காரணமாயுள்ளது. மாதம்பை - மெதகம பகுதியில் வசிக்கும் தனுக உதேஷ் (வயது27) எனும் இளைஞனே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதுண்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என மாரவில பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா ஊடகவியலாளரை கைது செய்தமை ஊடகவியலாளர்களையும், ஊடகத்துறையையும் அச்சுறுத்தும் செயல்
Thinappuyal News -
எமது ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் சிரேஷ்ட ஊடகவியலாளரான இம்மானுவேல் தர்ஷன் அவர்களை வவுனியா பொலிசார் கைதுசெய்து சிறையில் அடைத்தமை எமது பத்திரிகை நிறுவனத்தையும் ஒட்டுமொத்த ஊகவியலாளர்களையும் அச்சுறுத்தும் செயலாகவே நாம் பார்க்கிறோம். கடந்த 02-11-2018 (வெள்ளிக்கிழமை ) வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் இ. தர்ஷன் பணிபுரியும் ஊடகத்தின் (தினப்புயல்) பணிப்பாளர் சத்திவேல் பிரகாஸ் அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏனைய ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர்...
இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் நெருக்கடி காரணமாக குழப்பம் ஏற்பட்டு ரணிலின் பிரதமர் பதவி ஒரே இரவில் பறிக்கப்பட்டு மகிந்த ராஜபக்சவின் கைகளில் கொடுக்கப்பட்டதன் பின் இலங்கையில் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஊடகவியலாளர் வவுனியாவை சேர்ந்த தினப்புயல் பத்திரிகையின் ஊடகவியலாளர் இ.தர்சன் என்பவர்.
வடக்கு கிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் நெருக்கடியான காலகட்டத்தில் தங்கள் உயிரை துச்சமாக மதித்து சேவையாற்றி வந்தவர்கள். இதன் காரணமாக பலர் கொல்லப்பட்டும் காணாமல்...
தினப்புயல் ஊடகவியலாளர் இம்மானுவேல் தர்சன் வவுனியா பொலிசாரினால் அதிரடிக் கைது – ஊடகவியலாளர்கள் பார்வையிடவும் மறுப்பு – ஊடகவியலாளர்களுக்கான அராஜகம் மீண்டும் ஆரம்பம்;
Thinappuyal News -
தினப்புயல் ஊடகவியலாளர் வவுனியா இம்மானுவேல் தர்சன் பொலிசாரினால் விசாரனைக்காக அழைக்கப்பட்டு 02-11-2018 இரவு 7.00 மணிக்கு கைதுசெய்யப்பட்டார் . அதிரடிக்கைது ஊடகவியலாளர்கள் பார்வையிடவும் மறுப்பு - ஊடகவியலாளர்களுக்கான அராஜகம் மீண்டும் ஆரம்பம். வவுனியாவை தளமாகக்கொண்டு இயங்கிவரும் தினப்புயல் பத்திரிகையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏன் கைது செய்தீர்கள் என வவுனியா பொலிஸ் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, கடந்தவாரத்தில் வவுனியாவில் ஆவாக்குழு தொடர்பாக வெளிவந்த...
உடதும்பறை சூரியஅரன பகுதியில் நீராடச் சென்ற ஒரு குழுவைச் சேர்ந்த நபரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.பொத்தல அந்துருப்பல என்ற இடத்தைச் சேர்ந்த 20 வயதுஇளைஞர் நண்பர்களுடன் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி காணாமற்போயுள்ள நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குரிய சகல வசதிகளையும் பாராளுமன்றத்தில் பெற்றுக் கொடுப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்ட உத்தரவாதத்தை அளித்துள்ளார்.
பாராளுமன்றத்தினுள் புதிய பிரதமருக்குரிய வசதிகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி , சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
அரசியலமைப்பிற்கமைய புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் `அது குறித்து கவனம் செலுத்தி...