சினிமா நடிகைகளுக்கு பொதுவாகவே ரசிகர்கள் செல்வாக்கு அதிகம் இருக்கும். அப்படியானவர்களில் ஒருவர் பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகை ஸ்ரத்தா கபூர். பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடித்து வந்தார். கடந்த 27 ம் தேதி அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இயலவில்லை, இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனால் தீவிர...
என் வழி தனி வழி என்று ரஜினி சொன்ன வசனத்திற்கு ஏற்ப வாழ்ந்து வருவது அஜித் என்றே சொல்லலாம். வழக்கமாக நடிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது இல்லாமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து வருகிறார். இவர் எந்த விழாவுக்கும் வருவது இல்லை, தான் நடித்த படங்களின் பட நிகழ்ச்சிக்கே வருவது இல்லை என்று குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் இப்போது யாரும் அதை பெரிதாக பேசுவது இல்லை. அஜித் இதற்கு...
செக்கச்சிவந்த வானம் கடந்த வாரம் ரிலிஸாகி இன்று வரை வெற்றி நடைப்போடுகின்றது. இந்நிலையில் இந்த வாரம் மூன்று படங்கள் களம் இறங்கியுள்ளது. ஆனால், அப்படியிருந்தும் செக்கச்சிவந்த வானத்திற்கு நல்ல திரையரங்குகள் இருந்து வருகின்றது. இந்நிலையில் செக்கச்சிவந்த வானம் 8 நாட்கள் முடிவில் சென்னையில் மட்டுமே ரூ 6 கோடி வரை வசூல் செய்துவிட்டது. எப்படியும் ரூ 10 கோடி வரை சென்னையில் செக்கச்சிவந்த வானம் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. உலகம் முழுவதும் ரூ...
2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று காலை வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது அனைத்து மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, குருணாகல், கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கான சிங்கள மொழி மூலத்திற்கான வெட்டுப்புள்ளி 168 என்பதுடன், தமிழ் மொழி மூலத்திற்கான வெட்டுப்புள்ளி 165 ஆகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 166 வெட்டுப்புள்ளியெனவும், மொனராகலை, பதுளை, அநுராதபுரம்,...
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி பெரியகல்லாறு பிரதேசத்தில் வேன் ஒன்று நேற்று  நள்ளிரவு வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்கானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதூக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வேன் கொழும்பிலிருந்து  கல்முனைக்கு பயணித்த போது களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய கல்லாற்று பகுதியில் நள்ளிரவு 2 மணியளவில் வேககட்டுப்பாட்டடை மீறி வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி...
இலங்கை பெண்கள் கூடைப்பந்து அணியின் பயிற்றுவிப்பாளரின் பதவி காலத்தை எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு வரை விளையாட்டுத் துறை அமைச்சு நீடித்துள்ளது. இலங்கை பெண்கள் கூடைப்பந்து அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் திலக ஜினதாஸவை எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கூடைப்பந்து தொடர் வரை குறித்த அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என விளையாட்டுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Brexit ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதால் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுவரும் பிரித்தானியர்கள் உடனடியாக தங்கள் பாஸ்போர்ட்டுகளை புதுப்பித்துக் கொள்ள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தங்கள் பாஸ்போர்ட்டுகளை புதுப்பித்துக் கொள்ளாத பிரித்தானியர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதில் தடை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புடன் உரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளாதவரை பிரித்தானியர்கள் தற்போது வைத்திருக்கும் பாஸ்போர்ட்டுகள் செல்லாதவை என மாறிவிடும் எனவும் கூறப்படுகிறது. இதனால் தங்கள் பாஸ்போர்ட்டுகள் செல்லுபடியாகும்...
பிரான்சின் பாரிஸ் நகரில் காற்று மாசு அதிகரித்து வருவதால் புதிய நடைமுறை ஒன்றை கொண்டு வரவுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்சின் பாரிசில் தான் காற்று மாசு அதிகம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம், ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நகரின் முக்கிய பகுதிகளில் கார்களை இயக்க தடை விதித்துள்ளது. இதன்படி காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகள் மற்றும் சாலையோர நடைபாதை...
ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்தமை தொடர்பில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காரொன்றில் பயணித்த 40 வயதான பெண் மீது மற்றுமோர் காரில் வந்த இனந்தெரியாத நபரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் படுகாயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந் நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த பேலியகொட...
இலங்கையில் நாளாந்தம் வாகன விபத்துக்களால் 7 முதல் 8 பேர் வரை உயிரிழப்பதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பாதுகாபபு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். நாளாந்தம் பதிவாகும் 100 முதல் 105 வரையிலான விபத்துக்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாவதாகவும் மேலும் 20 பேர் வரையில் நாளாந்தம் விபத்துக்களால் காயமடைவதாகவும் அவர் மேலும் கூறினார். அரச நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சில் நேற்று அமைச்சர் ரஞ்ஜித்...