ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சின் ஐந்து பேர் அமைப்பாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டதாக சு.க.வின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார். அந்த வகையில் சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, லக்ஷமன் யாப்பா அபேவர்தன, சந்திம வீரக்கொடி ஆகியோர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
    வடக்கில் டக்லஸ் தேர்தலில் நிற்கலாம் வெற்றி பெறலாம் மாகாண சபையில் எதிர்க்கட்சியாக இருக்கலாம் அதுவெல்லாம் பிரச்சனை இல்லை டக்கரோடு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தலாம் மகிந்தவின் எடுபிடி அங்கஜனுக்கு வாக்குப்போடலாம் வடக்கில் பிரதேச சபைகளை அவர்கள் ஆட்சிக்கு விட்டுக்குடுக்கலாம். இதையெல்லாம் ஈழத்தமிழர் அரசியல் ஏற்றுக்கொள்ளும் ஆனால் கிழக்கில் கருணா, பிள்ளையான் மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது மக்கள் யாரும் அவர்கள் கட்சிக்கு வாக்களிக்க கூடாது கருணா, பிள்ளையான் துரோகிகள்...
தமிழ்ஈழப்போராட்டத்தை காட்டிக்கொடுத்த துரோகிகள் கயவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசுவதற்கு கூட்டணி ஆனந்தசங்கரி,புளட்,ரெலோ,ஈ.பீ.ஆர்.எல்.எப்:,ஈ.பீடி.பி.,;,போன்ற சுயநலன்கொண்ட இப்போதெல்லாம் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் „தீர்வு-சமாதானம்“ குறித்து பற்பல அமைப்புகள் போராட வெளிக்கிடுகின்றார்கள்!இவர்களில் எவரெவர் உண்மையாக மக்களின் நலனில் அக்கறையோடு „பதாதகைகள்“தாங்குகிறார்கள்,குரலிடுகிறார்களென்பதை நாமறியோம்!பராபரமே!!! எந்தக் குழுவுக்கு எவவெரவர் பின்னாலிருக்கிறார்-எந்தெந்த அரசுகள் இருக்கின்றெனவென்பதும் புரிந்துகொள்ள முடியாதிருக்கு.இன்றைய காலம் மிகவும் இருண்ட அரசியலையே எமக்கு வழங்கிக்கொண்டிருக்கு!இலங்கையிலிருந்து பெரும் அரச சார்பு ஊடகங்களான“ரூபவாகினி,வீரகேசரி,சூரியன் பண்பலை வானொலி“என்று கோதாவிலிறங்கி,நமது மக்களின்...
  உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் எனப்படும் மு.மனோகர் இன்று திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை நடத்தினால் நாளை ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிரிச்சான் துயிலும் இல்லங்களை அந்தந்தப் பிரதேச சபைகள் பொறுப்பெடுப்பதை தவிர்க்க முடியாமல் போகும். இந்த இரு சபைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ளன என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது தொடர்பில்...
  இஸ்லாமிய ஆக்கிரமிப்பு மதவாதிகளால் கிழக்கில் இந்து ஆலயங்களின் தொடர்தாக்குதலில் நேற்று மட்டக்களப்பில் ஒரு ஆலயம் உடைத்து சேதம்! கிழக்கில் 2009யுத்தம் முடிவின் பின்னர் தொடர்ந்து இந்துமத ஆலயங்கள் தமிழ் முஸ்லிம் எல்லையிலுள்ள தமிழ் கிராமங்களின் ஆலயங்கள், சேமக்காலைகள் தாக்கி அழிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நேற்று நள்ளிரவு காத்தான்குடி எல்லையிலுள்ளஆரையம்பதி பிரிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஆரையம்பதி நரசிம்மர் ஆலயம் உள்ள சிலைகள், பொருட்களை உடைத்து தமிழரை கோபப்படுத்தி இனவன்முறையை...
இதுவரை காலமும் கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் என குறிப்பிடப்பட்டு வந்த பதவிநிலைப்பெயர் தற்போது உதவி பிரதேச செயலாளர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அம்பாறை மாவட்ட  அரசாங்க அதிபர்  டி.எம்.எல். பண்டாரநாயக்கவின் எழுத்துமூல உத்தரவின் பேரில் இப்பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது. இது தொடர்பில் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட  இலங்கை நிருவாகசேவை அதிகாரி எஸ். ஜெகருபனிடம் கேட்டபோது, அவர் இதனை ஊர்ஜிதம் செய்தார்....
குழந்தைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் கடமை. அந்த வகையில் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க என்னென்னெ உணவுகளை அளிக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். பச்சை நிற காய்கறிகள் முட்டைக்கோஸ், காலிபிளவர், கீரை வகைகள், ப்ரக்கோலி, தக்காளி போன்ற காய்கறிகள் சத்துகள், பீட்டா கரோட்டின், கேரட்டினாய்ட்ஸ் போன்றவை அதிக அளவில் இருப்பதால் இவை குழந்தைகளுக்கு அளிப்பது மிகவும் நல்லது. பருப்பு வகைகள் பருப்பு வகைகளில்...
செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவியை சந்தோஷமாக வைத்துக் கொண்டால், வீடு முழுவதும் லட்சுமி கடாட்சம் நிறைந்து செல்வம் பொங்கி வழியும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் நம் வீட்டில் உள்ள அறையில் சில பொருட்களை வைத்து பரிகாரம் செய்வதின் மூலம் எப்படி அதிக பணம் சேரும் என்பதைப் பற்றி பார்ப்போம். கொத்தமல்லி வீட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அனைத்து மூலையிலும் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தேவயான அளவு நீர் விட்டு அதில் சில...
செப்சிஸ் என்பது தொற்றுகளால் ஏற்படும் ஒரு உயிர்கொல்லி நோயாகும். இது நமது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைவதால் ஏற்படும் நோயாகும். செப்சிஸ் உடலில் உள்ள பல பாகங்களை பாதித்து அவற்றை செயலிழக்க வைக்கக்கூடும் செப்சிஸ் காரணங்கள் நிமோனியா, வயிறு தொடர்பான தொற்றுகள், சிறுநீரக தொற்றுகள், இரத்தத்தில் ஏற்படும் தொற்றுகள் போன்றவை முக்கியமான காரணங்களாகும். நோயெதிர்ப்பு மண்டலம் பல்வவீனமாக இருப்பதும், வயதும் கூட செப்சிஸ் ஏற்பட காரணமாக அமைகிறது. அறிகுறிகள் காய்ச்சல் வரும் பொழுது 101...
தலைமுடி உதிர்வுக்கெதிதாக மாத்திரைகள் முதல் ஊசி வரையில் பல சிகிச்சை முறைகள் நடமுறையிலுள்ளன. இவ்வாறிருக்கையில் தற்போது தலைமுடி வளர்ச்சியை தூண்டும் புதிய முறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆம், செயற்கையாக தொகுக்கப்பட்ட சந்தண நறுமணமூட்டி தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நாசிப் பகுதியிலேயே மணம் வாங்கிக் கலங்கள் இருப்பதாக நாம் அறிந்துள்ளோம். ஆனால் உண்மையில் உடலின் பல பகுதிகளில் இம் மணம் வாங்கிக் கலங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக தோலில் காணப்படும் OR2AT4 வாங்கிகள். இவ்வகை வாங்கிகளே தோலில் காயம்...