பிக்பாஸ் வீட்டில் யார் ஜெயிப்பார்கள் என்று ரசிகர்களிடம் கேட்டால் ஒரு பதிலும் வராது. முதல் சீசனை போல இரண்டாவது சீசனில் யார் ஜெயிப்பார்கள் என்று கணிக்க முடியவில்லை. காலையில் வந்த புதிய புரொமோவில் ஐஸ்வர்யா வழக்கம் போல் எல்லோரிடமும் சண்டை போட்டார். அடுத்த வந்த வீடியோவில் பிக்பாஸ் ஜெயிக்க யார் தகுதியானவர்கள் என்று நிரூபிக்க சொல்கிறார். இதனால் போட்டியாளர்களுக்குள் ஒரு பேச்சு வார்த்தை நடக்கிறது. அதில் ஜனனி ஒன்று சொல்ல யாஷிகா...
ஹாங்காங் அணிக்கு எதிராக பந்துவீசிவதில் தவறு செய்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். ஆசியக் கிண்ண தொடரில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி போராடி ஹாங்காங்கை வென்றது. இந்தியா நிர்ணயித்த 286 ஓட்டங்கள் இலக்கை நோக்கி விளையாடிய ஹாங்காங், 8 விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. கத்துக்குட்டி அணியான ஹாங்காங்கின் விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். இதனால் ஹாங்காங் வெற்றியை நெருங்கியது....
கன்னடத்தில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ராஷ்மிகா. இவர் நடித்துள்ள கிரிக் பார்ட்டி, அஞ்சனி புத்ரா, ஜமக் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றன. தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படமும் வெற்றி பெற்றது. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. ராஷ்மிகாவும் கன்னட படங்களில் கதாநாயகனாக நடிக்கும் ரக்ஷித்தும் காதலித்தனர். இருவரும் கிரிக் பார்ட்டி படத்தில் ஜோடியாக நடித்தபோது நெருக்கமாகி காதல்வயப்பட்டனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். கடந்த ஜூலை...
நயன்தாரா தமிழ் பட உலகில் நம்பர்–1 இடத்தில் இருக்கிறார். முன்னணி கதாநாயகிகளாலும் அவரது மார்க்கெட்டை சரிக்க முடியவில்லை.  சிம்பு, பிரபுதேவாவுடனான காதல் கிசுகிசுக்கள், காதல் தோல்வி சர்ச்சைகள் போன்றவை அவரது பட வாய்ப்புகளை குறைக்கவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் கொடி கட்டி பறக்கும் அவரது கால்ஷீட்டுக்கு பெரிய கதாநாயகர்கள் காத்து இருக்கிறார்கள். சமீபத்தில் திரைக்கு வந்த நயன்தாராவின் படங்கள் அனைத்துமே நல்ல வசூல் பார்த்துள்ளன. இதனால் சம்பளத்தை ரூ.5...
இலங்கை ரூபாவின் பெறுமதியானது நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்துகொண்டே செல்கின்றது. இந்நிலையில் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு  நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர்சியாக சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி இன்றைய தியம் 167 ரூபா 41 சதமாக ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக கடந்த 16 ஆம் திகதி இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனர் மீது தனியார் பஸ்ஸின் நடத்துனர் ,சாரதி மற்றும் பஸ்ஸின் உரிமையாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இவ் தாக்குதலில் காயமடைந்த இ.போ.ச பஸ் நடத்துனர்  28 வயதுடைய நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச் சம்பவம் தொடர்பில்  தனியார் பஸ்ஸின் நடத்துனர் , சாரதியினை நேற்று முன்தினம் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆயர்படுத்தியபோது எதிர்வரும்...
பஸ் கட்டணம் 4 சத வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த பஸ் கட்டண அதிகரிப்பு நாளை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, ஆரம்ப பஸ்கட்டணத்தில் எவ்வித மாற்றங்களுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஏமனில் மீனவர்கள் சென்ற படகின் மீது போர்க்கப்பல் குண்டு  தாக்குதல் மேற்கொண்டதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏமன் நாட்டு தலைநகரான சனா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா அரசின் உதவியை அந்நட்டு ஜனாதிபதி அப்துர்ரப்போ மன்சூர் ஹாதி நாடினார். இதையடுத்து, கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சவுதி அரேபியா தலைமையிலான...
காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு சென்ற 15 வயதான மாணவி குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. பதுளை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் இந்த மாணவி, தனக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை பெற பதுளை வைத்தியசாலைக்கு தாயாருடன் சென்றுள்ளார். இதன்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என தெரிவித்து வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். மகப்பேற்று பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவி சில...
அண்மைய மருத்துவ ஆய்வுகள் மாரடைப்பு நோயானது ஒருவரில் மனநோய் தன்மையை இருமடங்காக்குகிறது என்கின்றன. மாரடைப்பு நோயினை ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகள் மூலமாக அது ஏற்படும் வாய்ப்புக்களைக் குறைத்துக்கொள்ளலாம். இதே வாழ்க்கைமுறை மனநோய் தன்மை ஏற்படும் வாய்ப்பையும் தடுக்கக்கூடியது என்கின்றனர் ஆய்வாளர்கள். விஞ்ஞானிகள் உலகளவில் 3.2 மில்லியன் மக்கள் மீது மேற்கொண்டிருந்த 48 வெவ்வேறு ஆய்வுகளிலேயே இத் தகவல் அறியப்பட்டிருக்கிறது. எனினும் மாரடைப்பால் அவதிப்படும் பெரும்பாலானோர் மனநோய் தன்மையைக் கொண்டிருப்பதில்லை. எனவே மேலதிக ஆய்வுகள்...