2018 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் 156 புள்ளிகளும், சிங்கள மொழிமூலம் 164 புள்ளிகளும் சித்தி அடைவதற்கான புள்ளிகளாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிளவடையாத நாட்டிற்குள் சகல மக்களும் அபிவிருத்தியின் வரப்பிரசாதங்களை பெற்று சமாதானத்துடனும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய நாட்டை உருவாக்கக்கூடிய தல‍ைமைத்துவம் தற்போது நாட்டில் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.   அத்துடன் நாட்டில் வறிய மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் இத்தகைய அபிவிருத்தி செயற்திட்டத்தை அன்று நாட்டில் அவதானிக்க முடியாது போனது. இந் நிலயைில் தற்போது இடம்பெற்றுவரும் இந்த அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு சகலரது ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும் என்றார். திருகோணமலை மாவட்டத்தில்...
வவுனியாவில் இன்று காலை முதல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய  கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக வவுனியா மையப்பகுதிகள்  இருவேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. அச்சுவரொட்டிகளுக்கு தமிழர் தயாகத்தில்  கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடிக்கண்டறியும்  குடும்பங்களின்  சங்கம்  உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அச்சுவரொட்டிகளில் உச்ச துரோகத்தின் குறியீடு சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது.  தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜினமாச்  செய்யவேண்டும். தமிழ்  மக்களை ...
தேனியை சேர்ந்த சிறுவன் தினேஷ் குணப்படுத்த முடியாத தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். சிறுவன் தினேஷ் தனது உடல் உறுப்புகளை சிதைத்து வரும் நோயை எதிர்த்து போராடிக் கொண்டு ஓவியங்கள் வரைவதிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளான். அவன் வரைந்துள்ள ஓவியங்களை பார்த்து பலரும் வியக்கிறார்கள். நடிகர் சூர்யாவை சந்திப்பது தனது கனவாக இருக்கிறது என்று தினேஷ் கூறியிருந்தான். இதை அறிந்த சூர்யா தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் தினேசை...
பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் விடுமுறை நாட்களையொட்டி தான் வெளியில் செல்ல திட்டம் போடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த செயல்முறை முக்கியமானதாக கருதப்படும். சமையல் செய்த உணவு கெட்டுப்போகாமல் இருப்பதற்குத் தான் நாம் ஃபிரிட்ஜில் வைக்கிறோம். ஆனால், அதற்கு போதுமான மின்சாரம் இல்லையென்றால், கெட்டுப்போகும். இதன் காரணமாக, வெளியூர் செல்வதாக இருந்தால், உணவை பிரிட்ஜில் வைப்பதை கைவிட வேண்டும். வீட்டில் பவர் இல்லையென்றால், உணவில் சால்மோனெல்லா உள்பட பல பாக்டீரியாக்களை பரவச் செய்யும். இதனால்,...
டால்பின் மீன்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து நடிகை த்ரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துபாய் சென்றிருந்த நடிகை த்ரிஷா, நீச்சல் குளத்தில் டால்பின்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை திரிஷா வெளியிட்டார். டால்பின்களை குளத்தில் அடைத்து வைத்து மனிதர்களுடன் விளையாட செய்வது அவற்றை கொடுமைப்படுத்துவது போன்றது ஆகும். பணக்காரர்கள் விளையாட்டுக்கு டால்பின்கள்தான் கிடைத்ததா? பீட்டா விளம்பர தூதுவராக இருந்து கொண்டு டால்பின்களை கொடுமைப்படுத்தி இருக்கிறீர்களே? என்று த்ரிஷாவை கண்டித்து உள்ளனர். டால்பின்களை...
இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தில் காலநிலை மாற்றமும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது உலக வங்கியின் முன்னணி பொருளாதார நிபுணர் முத்துகுமார மணி இதனை தெரிவித்துள்ளார். எதிர் காலத்தில் வெப்ப நிலையில் உயர்வு மாற்றங்கள் ஏற்படும் போது அது இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரம் 5 வீதத்தினால் குறைந்து செல்லும்...
அரசியலமைப்பு சபையின் வழி நடத்தல் குழுவின் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அரசியலமைப்பு சபையினால் ஆராயப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து அரசியலமைப்பு சபையின் கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது. அது குறித்த தொடர்ச்சியான கலந்துரையாடல் இன்றைய கூட்டத்திலும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமா தாண்டி உலக சினிமாக்களில் கலக்கி வருகிறார். இவர் இயக்கிய 'ஒன் ஹார்ட்' என்கிற இசை திரைப்படம், 2018 வருடத்திற்கான கன்சோனன்ஸ் இசை மற்றும் நடன விழாவிற்கு தேர்வாகியுள்ளது. இதுதான் திரைப்படம், இசை மற்றும் நடனத்திற்கான முதல் சர்வதேச திரைப்பட விழா என்பது குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது.. உலகெங்கிலும் இருந்து கலந்துகொண்ட படங்களில் 22 படங்கள் திரையிடலுக்கு தேர்வாகியுள்ளன. அதில் இந்தியாவில் இருந்து...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கான சதிநடவடிக்கையின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இருக்கிறார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான, டிலான் பெரேரா, எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் கூட்டாக இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியிலிருந்து தப்பித்து கொள்ளவே...