எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தாம் தயாராக இருப்பதாக மஹிந்தவின் சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்‌ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் ஒருவர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸ இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். குறித்த கருத்து தொடர்பில் நேற்றைய தினம் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஸவிடம் ஊடகவியலாளர்கள்...
நேபாளத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியா ஊடாக இலங்கை வரும் போது நாய்கள் கூட சாப்பிட முடியாத வகையிலான முந்திரி பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார். எனினும் ஜனாதிபதியின் இந்த கூற்றை பொய்யாக்கும் வகையில் நாமல் டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். இந்தியாவிலிருத்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் வரும் போது, முந்திரி பருப்புக்களை உண்பது போன்ற புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். அத்துடன், “அப்படி...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேரி கொல்வின் அம்மையாரின் வரலாற்றைப் பேசும் "A Private War" திரைப்படம் வெளிவரவிருக்கின்றது. நவம்பரில் திரைக்கு வரும் இத் திரைப்படம் நிச்சயம் தமிழீழம் குறித்த ஒரு பரவலான கவனத்தை உலகளவில் ஏற்படுத்தும் என்று நம்பலாம். ஏனெனில் கொலிவூட் திரைப்படங்களின் ரசிகப் பரப்பும் அதன் பின்னுள்ள அரசியலும் அத்தகையது. படத்தில் ஒரு திருஸ்டி. நேரில் மட்டுமல்ல...
ஹொரணை - வஹவத்த பிரதேசத்தில் உள்ள றப்பர் தொழிற்சாலையில் அமோனியா நச்சுவாயு கசிந்ததில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதுடன், பாதிக்கப்பட்ட 5 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 8 வயது சிறுமியொருவர் காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். ஹொரவபொத்தான, றத்மலை பகுதியை சேர்ந்த இக்லாஸ் ராசானா என்பவரின் 8 வயது மகளான அப்லா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ரத்மலை முஸ்லிம் வித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியான இவர் நேற்று காய்ச்சல் காரணமாக பாடசாலையில் இருந்து 10 மணியளவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து,...
''முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் ஆரம்பித்து வைத்த அரசியல் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்கு முஸ்லிம்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும்.அவரது கனவு,லட்சியம் நிறைவேறுவதற்காக நாம் அயராது உழைக்க வேண்டும் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார். சம்மாந்துறையில் ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18 ஆவது நினைவுதின நிகழ்வை ஒட்டி...
மன்னார் நகர் நிருபர் மன்னார் புதைக்குழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை அமெரிக்காவின் புளோரிடா பல்கலைகழகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்வது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்வது பிற்போடப்பட்டுள்ளது. மனித புதைகுழி தொடர்பில் நடத்தப்பட்ட விசேட கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம், இது குறித்த தீர்மானம் அடுத்த கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மனித புதைகுழி தொடர்பான விசேட கூட்டம் மன்னார் மாவட்ட நீதிமன்ற புதிய நீதிபதி...
(மன்னார் நகர் நிருபர்) மன்னார் சதோச வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தோகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மீட்கப்பட்டுவருகின்றது. மன்னார் மவட்ட நீதமன்ற  நீதிபதி ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் மன்னார் சதோச வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப்பபடுத்தப்படும் மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணி இடம் பெற்றுவருகின்றது. இந் நிலையில் நேற்றைய தினம் அகழ்வு...
-மன்னார் நகர் நிருபர்-   முருங்கன் ஆதார வைத்தியசாலையில் தற்போது இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்ற நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வருகை அதிகமாக காணப்படுவதோடு, வைத்தியர்கள் ஒய்வில்லாமல்  பணிபுரிகின்றனர். இவர்கள் விடுமுறைகளில் சென்றால் அனைவரும் திரும்பி போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக முருங்கன் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று புதன் கிழமை(13)...
கடந்த ஆண்டு நிகழ்ந்த மாவீரர் நாள் நினைவேந்தல்களில் சுயகட்டுப்பாட்டுடன் உணர்வு பூர்வமாகப் பங்குபற்றிய அனைவருக்கும் எமது நன்றிகள். அதே போல் இந்த ஆண்டு நிகழ்வுகளும்  தடம் புரளாமல் நடைபெற வேண்டுமென நாம் விரும்புகிறோம்.  எனினும் நினைவேந்தல் நிகழ்வுகளைப் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்த முனைவதை நாம் உணர்கிறோம். அதனைத் தவிர்த்து இந் நிகழ்வுகளின் புனிதத்தைப் பேணும் வகையில் சிலவிடயங்களைக் கவனத்திற்கொள்ளுமாறு வேண்டுகிறோம். கடந்த ஆண்டு திலீபனின் நினைவு நாளில் தூக்குக்காவடி எடுத்தார்...