பிரபல நடிகை ஒருவர் கொச்சி-எர்ணாகுளம் சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கியுள்ளார். மோகன்லாலின் நீரளி படத்தில் நடித்துவரும் நடிகை மேகா மேத்தியூஸ் தான் அது. தன் சகோதரரின் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொள்வதற்காக அவர் தன் வீட்டில் இருந்து காரில் கிளம்பியுள்ளார். வழியில் எதிரில் வந்த கார் நடிகையின் கார் மீது மோதியதில் அது கவிழ்ந்தது. விபத்து முடிந்து 15 நிமிடங்கள் நடிகை மயக்கமாக காருக்குள் கிடந்துள்ளார். யாரும் உதவிக்கு வராத நிலையில் ஒரு...
சிங்கப்பூரை இரவில் சுற்றிவந்தார் வடகொரிய ஜனாதிபதி வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் இன்றிரவு சிங்கப்பூரை சுற்றி பார்த்து பலரிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். நாளை காலை அமெரிக்க ஜனாதிபதியுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பிற்கு முன்னதாக இரவில் கிம் சிங்கப்பூரை சுற்றிப்பார்த்துள்ளார். இன்று மாலை ஆறு மணியளவில் கிம் தங்கியுள்ள சென் ரெஜிஸ் ஹோட்டலிற்கு வெளியே பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைவதை ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளனர். அதற்கு சில மணிநேரத்தின் பின்னர் கிம் மரினா பே சான்ட்ஸ்...
கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேசத்தில் மணலுக்குப் பதிலாக கிரவல் மண் கொண்டு அமைக்கப்படுகின்ற மாதிரி வீட்டினை பல்வேறு தரப்பினரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர். யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளைப் பிரதேசத்தில் இதுவரை ஐயாயிரத்து 268 வீடுகள் அமைக்கப்பட்டுள்ள போதும், 2036 குடும்பங்களுக்கான வீட்டுத் தேவைகள் காணப்படுகின்றன.      இந்நிலையில் தற்போது வீடு கட்டுவதற்கு தேவையான மணலுக்குப் பதிலாக கிரவல் மண்ணைக் கலந்து...
மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் நிறுவனத்தின் சர்வமத அமைப்பின் ஏற்பாட்டில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு இன்றைய தினம் (11) மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.                   இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை, மாநகர முதல்வர் தி.சரவணபவான், இந்து குருமார்கள், இஸ்லாமிய மௌலவிகள், சர்வமத அமைப்புகளின் பிரதிநிதிகள், எகெட் நிறுவன பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இன்றைய நோன்பு...
09-06-2018 தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடும் பாலா ஐயா அவர்களின் நிதி பங்களிப்புடன் செட்டிகுளம் பிரதேசத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு தேவையான உணவு பொதியும் சிறு தொகை பணமும் இன்றைய தினம் வெளிச்சம் அறக்கட்டளை ஊடாக வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் திரு. பா.லம்போதரன், செயலாளர் திரு.தி.கார்த்திக், பொருளாளர் திரு. செ.மேனதாஸ் மற்றும் சமூக நலன் விரும்பி ஜெகன் அவர்களும்...
தேசிய அரசாங்கத்தின் புதிய இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 6 பிரதியமைச்சர்கள் ஆகியோர் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் மானப்பெரும, நளின் பண்டார, ரஞ்சித் அலுவிஹார, எட்வர்ட் குணசேகர, லக்கி ஜெயவர்தன, புத்திக பத்திரன ஆகியோரே சந்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, இரண்டு இராஜாங்க அமைச்சர்களும், அரச...
ஒவ்வொரு வீட்டிலும் ஆண் பெண்களுக்கு வழங்குகின்ற  உரிமைகள்தான் சமூகத்தின் உரிமையாக பரிணமித்து நாளை எம் இனத்தின் விடுதலையாக தோற்றம் பெறும் என வடமகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரனையுடன், மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வட மாகாண பெண்கள் வலுவூட்டல் பயிற்சிப்பட்டறையும் கொள்கை வகுப்பாக்க செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.      ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் புனித மாதமாக கருதப்படுகின்ற ரமழான் மாதம் இடம்பெற்று வருகின்றது. ரமழான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் மக்கள் பாரிய செலவில் அலங்கரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது வழமையாகும். அதற்கமைய குட்டி அரபு நாடு போன்று காத்தான்குடி நகரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மிகவும் பின்தங்கிய நிலையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட நகரம் இன்று பார்ப்பர்வர்களை ரசிக்கும்படி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடிக்கு...
விஸ்வமடு இராணுவ முகாமில் இருந்து அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமிற்கு இடமாற்றம் பெற்றுள்ள இராணுவ அதிகாரி கேர்ணல் பந்து இரத்னபிரியவை தமிழ் மக்கள் கண்ணீரோடு வழியனுப்பியமை தற்போது வடக்கு, கிழக்கு உட்பட தென்னிலங்கை மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த இராணுவ அதிகாரியின் மீது அளவற்ற அன்பினை அப்பகுதி தமிழ் மக்கள் வைத்திருப்பதற்கு காரணம் என்ன? கண்ணீரோடு வழியனுப்ப காரணம் என்ன என்பது தொடர்பில் பலரும் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், இராணுவ...
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த தமிழ் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரிஸ் சொய்சி லே ரோய் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய நாயாரண பதுகா ஆலயத்தில் பத்து நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்குள்ள பெருமளவு புலம்பெயர் தமிழ் சாய் அருள் வேண்டி பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர். யாரும் எதிர்பாராத வேளையில் சாயின் விக்கிரகத்திலிருந்து ஒளிக்கீற்று பக்தர்களை நோக்கி வீசியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி, திருவிழாவினை பதிவு...