பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை உரிய வகையில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை புஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்திருந்தார். புஸல்லாவை ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிச்சந்திரன் (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குற்றச்செயல்...
மட்டக்களப்பில் பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த உதயதேவி புகையிரதம் தடம் புரண்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தம் ஏற்படும்போது அதிஷ்டவசமாக பயணிகள் யாரும் புகையிரதத்திற்குள் இருக்கவில்லை.இதனால் எந்த விதமான உயிர் சேதங்களும் இடம்பெறவில்லை என அறியமுடிகின்றது. தடம்புரண்ட புகையிரதத்தை சீர்செய்வதற்கு பல மணி நேரம் முயற்சி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    
  ஹிக்கடுவ பகுதியிலுள்ள வீடொன்றில் பெரிய மலைப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. திரானாகம பகுதியிலுள்ள வீட்டிலிருந்த நாய்களை சாப்பிடுவதற்கான இந்த பாம்பு வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் இரவு நாய் குரைக்கும் சத்தம் கேட்டு, வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்று பார்க்கும் போது பாரிய அளவிலான மலைப் பாம்பை கண்டுள்ளார். பின்னர் அவர் பிரதேச மக்களுடன் இணைந்து குறித்த பாம்பினை பிடித்துள்ளார். இது தொடர்பில் ஹிக்கடுவ வனவிலங்கு அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகளை...
யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள எழுக தமிழ் பேரணியை முன்னெடுக்க வேண்டாம் என எந்தவொரு கருத்துக்களையும் தாம் வெளியிடவில்லை என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். எனினும் கடந்த காலங்களை விட தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு சூழல் தற்போது உருவாகியுள்ளதால், பொறுமை காக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் கூறினார். யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் நல்லெண்ண நடவடிக்கையாக தமிழ் மக்கள் பேரவையினர், பொது...
இலங்கையில் நல்லாட்சி நிறுவப்பட்டுள்ள போதிலும், அதன் பிரதான இரு தலைவர்களின் செயற்பாடுகளிலும் முரண்பாட்டுத் தன்மை காணப்படுவதாக தெரிய வருகிறது. பொருளாதார ரீதியாக மிகவும் பின்னடைவு கண்டுள்ள இலங்கையை மீட்டெடுக்க நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் முறையற்ற நிதிக்கொள்கையால் ஏற்பட்டுள்ள பாரிய கடன், பொருளாதார நெருக்கடி, மக்களின் வாழ்க்கை செலவை குறைத்து, ஆரோக்கியமான நிலை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின்...
கிளிநொச்சி நகரின் வடிகால் அமைப்பு குறைபாடுகள் தொடர்பில் நேரில் கண்டறிந்து தீர்வு காண்பதற்கான களப்பயனம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் மேற்கொண்டனர். கிளிநொச்சியில் நகரின் வடிகால் அமைப்பு முறையில் பாரிய குறைபாடுகள் காணப்படுவதாக கடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு வர்த்தகர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அதனை அடுத்து உரிய அதிகாரிகளோடு நேரில்...
நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 436 பேர் H.I.V தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக, நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 436 பேர் H.I.V தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் தொற்றினால் 394 பேர் மரணமடைந்ததற்கான பதிவுகள் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார். நேற்று பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே...
வடமாகாணசபையின் ஒப்புதல் பெறாமல், குறைந்தபட்சம் எமக்கு ஒரு தகவலும் கூட தெரியப்படுத்தப்படாமல் மத்திய அரசாங்கம் எமது மாகாணத்தில் பல செயற்றிட்டங்களை செய்கிறது. இதனை நாங்கள் பல தடவைகள், பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளபோதும், மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடுகளில் மாற்றம் எதனையும் காண முடியவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். யாழ்.கேரதீவு பகுதியில் தனியார் ஒருவரினால் அமைக்கப்படும் உப்பளம் மற்றும் பூநகரி- கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்படும் ஹோட்டல் ஆகியவற்றுக்கு ஆளுநர் அனுமதி...
வட மாகாணத்தில் கடமையாற்றும் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த அரச ஊழியர்களது இடமாற்றம் இதுவரைகாலமாக முன்னெடுக்கப்படாமையைக் கண்டித்து வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் இன்று (22.09.2016) காலை 9 மணியளவில் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணசபைகள் பிரிக்கப்பட்டபோது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 105 அரச ஊழியர்கள் வடமாகாணத்தில் கடமை புரிவதற்காக பணிக்கப்பட்ட நிலையில் 5 வருடகாலத்திற்கும் அதிக காலம் தாம் வடமாகாணத்தில்...
அப்பிள் நிறுவனம் கடந்த வாரத்தின் பிற்பகுதியில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus எனும் புதிய இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது. இக் கைப்பேசிகள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு iPhone 7 கைப்பேசியினை வடிவமைப்பதற்கு செலவாகும் தொகை 224.80 அமரிக்க டொலர்கள் என்பதே அந்த அதிர்ச்சி தகவல் ஆகும். இதில் என்ன அதிர்ச்சி என்று கேட்கின்றீர்களா? ஆம்,...