தனது அலுவலகத்தில் வைத்து 16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் கிராம உத்தியோகஸ்தர் ஒருவருக்கு மீண்டும் கிராம உத்தியோகஸ்தர் பதவி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து புத்தளம் வனாதவில்லு பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வனாதவில்லு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இலக்கம் 637/2 ரால்மடுவ கிராம சேவகர் பிரிவுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு சென்ற 16 வயது சிறுமியை, அந்த கிராம சேவகர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக, வனாதவில்லு...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், தொடர்ந்தும் ஆலயங்கள், விகாரைகளுக்கு சென்று மன ஆறுதலுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரும் அரசாங்கத்திற்கு எதிராக ஆலயங்களுக்கு சென்று தேங்காய் உடைப்பது உள்ளிட்ட மத நம்பிக்கை ரீதியான எதிர்ப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் பல்வேறு ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன்...
சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 971 பேரை கைது செய்துள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் மூலம் இவ்வாறு 971 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை, நேபாளம், இந்தியா, பங்களாதேஸ், பர்மா, இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் அதிகளவான வெளிநாட்டுப் பிரஜைகள் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரானிடம் இருந்து மீண்டும் எரிபொருளை கொள்வனவு செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால், இலங்கை 2012 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதை நிறுத்தியது. ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், மீண்டும் அந்நாட்டிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கனிய எண்ணெய் மற்றும் பெற்ரோலிய வாயு துறை அமைச்சு தெரிவித்துள்ளது. துறைக்கு பொறுப்பான...
பண்டாரநாயக்கவின் கொள்கைகளுக்கு அமைய கூட்டு எதிர்க்கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வீரவில பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஹோகந்தர பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போது சாதாரண மனிதர்கள் என்ற வகையில்...
ஐக்கிய தேசியக் கட்சியும் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியினர் பாரியளவில் போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனர். மக்களின் ஆணைக்கு எதிராக குரல் கொடுப்போர், எதிர்ப்பை வெளியிடுவோர் மற்றும் நல்லாட்சியை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அண்மையில், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியவற்றை பார்வையிடச் சென்ற போது இந்த போராட்டம் குறித்து பிரதமர்...
யாழ். பருத்தித்துறை - பொலிகண்டி பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 61 கிலோ கேரள கஞ்சா பருத்தித்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை- பொலிகண்டி பகுதியில் விற்பனைக்காக பெருமளவு கஞ்சா வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையில் மேற்படி கஞ்சா இன்றைய தினம் அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் பொலிகண்டி பகுதியை சேர்ந்த 27வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்க அணிகள் மோதிய 2வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்கா களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன் படி, இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இங்கிலாந்து அணிக்கு பட்லர் (54), அணித்தலைவர் மோர்கன் (38), ரூட் (34) ஆகியோர் அதிரடி காட்டினர். ஆனால்...
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி- பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இடையேயான காதல் முறிவுக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் துணை அணித்தலைவரான விராட் கோஹ்லி, பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை தீவிரமாக காதலித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றித் திரிந்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். அனுஷ்கா சர்மாவும் கோஹ்லியின் ஆட்டதை பார்க்க மைதானத்திற்கு அடிக்கடி சென்று வந்தார். இந்நிலையில்...
  டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்த மெக்கல்லமிற்கு இந்திய அணித்தலைவர் டோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலியா -நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 370 ஓட்டங்கள் குவித்தது. இதில் அந்த அணியின் தலைவர் மெக்கல்லம் 54 பந்துகளில் சதம் அடித்து உலகசாதனை படைத்தார். இது பற்றி இந்திய அணித்தலைவர் டோனி கூறுகையில்,...