குழந்தைகளுக்கு பொதுவாக சொக்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் சொக்லெட் கேக் என்றால் சொல்லவே தேவையில்லை. தற்போது 5 நிமிடத்தில் சாக்லெட் கேக் செய்வது எப்படி என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள் கேக் மாவு - ஒரு கப் வெள்ளை சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன் கொக்கோ - 2 டேபிள் ஸ்பூன் முட்டை - 1 பால் - 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் செய்முறை ஒரு கப் கேக் மாவு, சர்க்கரை, கொக்கோ,...
ஒரு பிரபல இணையதளம் நடத்திய கருத்துகணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் விஜய் அதிக வாக்குகள் பெற்று 'King of Social Media' என பட்டம் கொடுக்கப்பட்டது. இதை பார்த்த விஜய்-அஜித் ரசிகர்கள் வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். விஜய்யை திட்டி அஜித் ரசிகர்களும், அஜித்தை திட்டி விஜய் ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து தமிழ் சினிமாவின் மானத்தை இந்திய அளவில் பறக்கவிட்டுவிட்டனர். இவர்கள் என்றுதான் மாறுவார்களோ?
கபாலி படத்தின் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் ராதிகா ஆப்தே. இவர் எப்போதும் மிகவும் தைரியமாக, சர்ச்சையான கதாபாத்திரமாக தான் தேர்ந்தெடுத்து தான் நடிப்பார். பல நடிகைகள் நான் நடிக்க வரும் போது என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்துவார்கள். அப்படித்தான் ராதிகா ஆப்தேவிடம் ஒரு கேள்வியை முன் வைக்க ‘நடிக்க வாய்ப்பு பெறுவதற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டவர்களை எனக்கு தெரியும். நல்ல வேளை எனக்கு அது போன்று...
  நல்லாட்சி மற்றும் நல்லிணகம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்புடன் செயற்படுவருவதை சுட்டிக்காட்டிய ஐநாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், ஜனாதிபதியின் அம்முயற்சிகளுக்கு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களுக்குமிடையில் நேற்று (21) நியூயோர்க் நகரில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றபோதே பான் கீ மூன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தாம் இலங்கைக்கு வருகை தந்திருந்த...
ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா சார்பில் ஏற்பாடு செய்யப்படும் இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், ஒபாமா தம்பதியினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டபோது
1995ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் திகதி நாகர்கோவில் மகா வித்தியாலய கட்டிடத்தின் மீது இலங்கை விமானப்படையின் புக்காரா விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் 21 மாணவர்கள் அவ்விடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். அந்த கோர நிகழ்வின் 21வது ஆண்டு நிறைவு இன்றாகும். அதன் நினைவாக இன்றைய தினம் நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் பலியான மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது. அந்த நிகழ்வில்...
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ மாநகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 19 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்கள் வென்றுள்ளது. இப்போட்டியில் முதன் முதலில் தங்கம் பெற்றுத்தந்த மாரியப்பன் தங்கவேலு இன்று இந்தியா திரும்பினார். இவருக்கு டெல்லி விமான நிலையத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கேயல் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் கூறுகையில், பாரா...
சுதந்திரத்தை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். சமூகத்தினரிடையே பல்வேறுப்பட்ட கருத்துக்களை முன்வைக்கப்படலாம்.எனினும், சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் விடயத்தில் அனைவரும் ஒரே மனபாங்குடன் செயலாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பல வருடங்களாக நாட்டில் சுதந்திரம் இருக்கவில்லை. யுத்தம் நிறைவு பெற்றவுடன் பாரிய ஒடுக்குமுறை ஆட்சி இடம்பெற்றது....
இலங்கையில் 16 - 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களில் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக மருத்துவ ஆலோசகர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், தற்கொலை செய்துக் கொள்வது இலங்கையின் பிரதான சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினை என்று கூறுவதில் தவறில்லை. ஏன் என்றால் இலங்கையில் 2015ஆம் ஆண்டில் தற்கொலையின் மூலம் மாத்திரம் 3051 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது....
இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் உதவியளிக்கவுள்ளதாக அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது. அமரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இந்த கருத்தை ஐக்கிய நாடுகளின் சபை அமர்வுக்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் செல்லும் வழி தொடர்பில் அமெரிக்கா தமது வரவேற்பை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையின் நடைமுறை அரசாங்கம் பொருளார வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது என்று இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தை...