மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வுகள் மிகக் கோலாகலமாக இன்று வவுனியாவில் நடைபெற்றது இதில் பங்குபற்றிய வைத்திய கலாநிதியும் வடமாகாணசபை அமைச்சருமான சத்தியலிங்கம் ......மிகத்தெளிவாக ஒரு விடையத்தை எடுத்துரைத்தார் இது அணைவருடைய கண்களிலும் கண்ணீரை வரவைத்தது      
  கிழக்கு மாகாண மட்ட மகளிர் உதைப்பந்தாட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த மட்டக்களப்பு மாவட்ட மகளிர் உதைப்பந்தாட்ட அணி வீராங்கனைகளை கௌரவித்து சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் மட்டு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை, கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி தினேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம...
  இந்திய கிரிக்கெட் அணி தனது 500 வது டெஸ்ட் போட்டியை வெகு விமரிசையாக கொண்டாட பி.சி.சி.ஐ ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்து கொள்ள இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியினை 1932 ஆம் ஆண்டு CK Nayudu தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக காலடி எடுத்து வைத்தது. இந்த காலகட்டத்திலும், அவுஸ்திரேலியா அணி தான் முன்னிலை வகித்து வந்துள்ளது. இந்நிலையில், இதற்கு...
  தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டியில் கோவை அணியை வீழ்த்தி சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் தமிழகத்தில் முதல் முறையாக ஐ.பி.எல் பாணியில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 2 வது அரையிறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோவை கிங்ஸ் அணியை எதிர்...
  இலங்கை கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் தினேஷ் சந்திமால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது சந்திமாலுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே சந்திமால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திமாலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேலும் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், பரிசோதனைக்கு பின்னரே அவரது உடல்நலம் குறித்து கருத்து கூற முடியும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம்...
  பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாராலிம்பிக் போட்டிகள் மிக சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த ஓர் சந்தர்பத்தையும் இது வழங்கி வருகின்றது. ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்கள் தங்களது பதக்கங்களை பற்களால் கடிப்பது சதாரணமான விடயம். இதன் மூலம் வீரர்கள் தங்கத்தை சோதனை செய்வதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய பாராலிம்பிக் போட்டிகளில் பார்வையற்ற வீரர்கள் தங்களது பதக்கத்தை காதருகில் கொண்டு செல்வது வழக்கமாக...
  அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள செல்சாவில் பயங்கரமாக குண்டுவெடித்ததில் 25க்கும் மேலானோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள 23வது தெருவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில், அங்கிருந்த கட்டிடம் சேதமடைந்துள்ளது. இதற்கிடையே அதிகாரப்பூர்வமற்ற தகவலாக அப்பகுதியில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்து வெடிகுண்டு வெடித்தது என்று தெரிவித்தன. இதனை உறுதிசெய்யும் விதமாக,...
  நோர்வே நாட்டில் 4 மாத பச்சிளம் குழந்தையை தாக்கிய குற்றத்திற்காக அக்குழந்தையின் தந்தைக்கு 8 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் பெற்றோர் இருவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில், ஓர் இரவில் 4 மாதமே ஆன குழந்தையின் தலையில் தந்தை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் குழந்தையின் மூளை வெகுவாக பாதிக்கப்பட்டது. எனினும், குழந்தையை எதற்காக தாக்கினார்...
  ஸ்பெயின் நாட்டில் பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு கார் ஓட்டியபோது நிகழ்ந்த விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் தீவுகளில் ஒன்றான Mallorca என்ற நகரில் இரண்டு தினங்களுக்கு முன்னர் 44 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது மகனுடன் சைக்கிளில் பயணம் செய்துள்ளார். அப்போது, அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று பொலிஸ் மீது மோதிவிட்டு அங்கிருந்து நிற்காமல் பறந்துள்ளது. இந்த விபத்தில்...
  சிரியா விமான படைகளுக்கு சொந்தமான போர் விமானத்தை ISIS தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் கிழக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்த சிரியாவின் போர் விமானத்தையே ஏவுகணை உதவியுடன் ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஜீபில் டார்டா என்னும் ஏரியா அருகில் விமானி விமானத்தை தரையில் இறக்கும் போது இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என அவதானிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானதாக மனித உரிமை கண்காணிப்பு...