வவுனியா ஓமந்தை நவ்வி கிராமத்தில் கள்ளுத் தவறணை ஒன்று பிரதேச பெண்களால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா ஓமந்தை பாலமோட்டை கிராம சேவையாளர் பிரிவில் பாடசாலை மற்றும் சமயவழிபாட்டுத் தலங்களுக்கு அருகே காணப்பட்ட கள்ளுத் ததவறணையே இவ்வாறு அடித்து உடைக்கப்பட்டது.
பொதுமக்கள் பலமுறை உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லையென குற்றஞ்சாட்டியே பிரதேச மக்கள் இதன் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
பிரான்ஸில் கழக மட்ட போட்டியொன்றின் போது கால்பந்தாட்ட வீரர் ஒருவர் மரணித்துள்ளார். பிரான்ஸின்; முன்னாள் புர்னிகா பாசோ கழக வீரரான Ben Idrissa Derme ரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரெஞ்சு கிண்ண போட்டியொன்றின் போது அவர் AJ Biguglia என்ற கழகத்தை அவர் பிரதிநிதித்துவம் செய்திருந்தார். 34 வயதான Ben Idrissa Derme மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி வீடு ஒன்றில் கொள்ளையிடப்பட்ட 20 பவுண் நகைகள் 13 தினங்களின் பின்னர் குறித்த வீட்டுக்கு அருகில் குப்பையில்….
Thinappuyal -
காத்தான்குடி வீடு ஒன்றில் கொள்ளையிடப்பட்ட 20 பவுண் நகைகள் 13 தினங்களின் பின்னர் குறித்த வீட்டுக்கு அருகில் குப்பையில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி, பரீட் நகர் பகுதியில் கடந்த மாதம் 29 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பெண்ணைப் தடிகளால் தாக்கிவிட்டு இரண்டு இலட்ச ரூபா பணம் மற்றும் 20 பவுண் தங்க நகைகள் என்பன கொள்ளையிடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்...
பிரான்சில் தமிழ் சிறார்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் படம் வெளியானது!அச்சத்தில் ஈழத்தமிழர்கள்…?
Thinappuyal -
உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது பிரான்ஸில் உள்ள சிலர் நச்சுவாயு கலந்த கண்ணீர்ப்புகை வீசியதால் சிறுவர்கள் பெண்கள் உட்பட பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். சுமார் 40பேர் பாதிக்கப்பட்டனர் என்றும் சிலர் மயக்கம் அடைந்தனர் என்றும் மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா பேசிக்கொண்டிருந்த போதே அங்கு வந்திருந்த...
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவரை பார்வையிடுவதற்கு உறவினர் அல்லது நண்பருக்கு வாரத்திற்கு ஒரு முறையே சந்தர்ப்பம் வழங்கப்படும்.
இந்த நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை, பார்ப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு வந்த பலர் மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு சிறைச்சாலை கட்டுப்பாட்டு அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் துமிந்தவை பார்ப்பதற்கு அவருக்கு நெருக்கமான ஒருவர் கடந்த வாரம் வந்துள்ள நிலையில் அவரை திருப்பி அனுப்புவதற்கு...
மூத்த தமிழ் செய்தியாளர் கே ஜி மஹாதேவா காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்று கிழமை சென்னையில் தமது 76 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான 'ஈழநாடு' செய்தித்தாளின் சிரேஸ்ட செய்தி ஆசிரியராக மஹாதேவா கடமையாற்றினார்.
மட்டக்களப்பை சேர்ந்த மஹாதேவா, மலையகத்தில் இருந்து 1960களில் வெளியான 'செய்தி' என்ற செய்தித்தாளிலும் பணியாற்றினார்.
இதன்பின்னரே அவர் யாழ்ப்பாண ஈழநாடு செய்தித்தாளுடன் இணைந்தார்.
இந்த செய்தித்தாள், வாழைச்சேனை கடதாசி ஆலையின் தலைவர் கே சி தங்கராஜாவினால்...
திருகோணமலை உப்புவெளி பகுதியில் இரண்டு பிள்ளைகள் காணாமற்போயுள்ளனர்.
9 வயதான சிறுமியொருவரும் 11 வயதான சிறுவனொரும் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக வகுப்பிற்காக கண்ணியா சென்ற வேளையிலேயே நேற்று (12) மாலை இரு பிள்ளைகளும் காணாமற்போயுள்ளதாக பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், காணாமற்போன பிள்ளைகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் காணாமந்போயுள்ள சிறுவனால் எழுதப்பட்டது என கூறப்படும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு...
யாழ் நீதிமன்றில் நீதிவான், வழக்கினை நிறைவு செய்து வெளியில் வரும் போது, கொழும்பு குற்றப்பிரிவினர் மூவரை வெள்ளை வானில் ஏற்றி சென்றுள்ளதனால் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர்களிடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
கேதீஸ்வரன், அஜந்தன், அகிலன் ஆகிய மூவரையுமே எழுமாற்றாக பிடித்து சென்றுள்ளதாகவும், இதன்போது ஏன் பிடிக்கின்றீர்கள் என மற்றவர்கள் வினவியுள்ளதுடன் விசாரணைக்காக பிடிப்பதாக வெள்ளை வானில், வந்த கொழும்பு குற்றப்பிரிவினர் கூறியுள்ளனர்.
இதனால் பதற்றமடைந்த ஏனையவர்கள்...
நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முப்படையினரும் சர்வதேச நீதிப் பொறிமுறைகளுக்கு உட்பட்டே செயற்பட்டுள்ளனர் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இராணுவத்தினர் ஒருபோதும் மனித உரிமைகளை மீறவில்லை, ஆனால் தற்போதைய நல்லாட்சி இராணுவத்தினரை குற்றவாளிகளாக சித்தரிப்பதாக குறிப்பிட்டார்.
இராணுவத்தினர் குற்றங்கள் செய்திருப்பதாகவும் இதை தாம் ஒப்புக் கொள்வதாகவும் நல்லாட்சி கூறிவருகின்றது.
“இவர்கள் குற்றம் செய்திருந்தால் தானே ஒப்புக்...
விச ஊசி விவகாரம் தொடர்பில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் இரு தினங்களில் 73 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றது.
விச ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த 2ம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றன.
அதில் யாழ் மாவட்டத்தில் 19 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 16...