கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில், இனந்தெரியாத ஆண்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த பகுதிக்கு மாடு கட்டச் சென்ற பெண் ஒருவர் வழங்கிய தகவலின்பிரகாரம், குறித்தசடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சடலம் அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்துள்ளதாக தெரிவித்துள்ள கிளிநொச்சி பொலிஸார், கொலையாஅல்லது தற்கொலையா என பல கோணங்களில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  
சட்டவிரோதமாக யானைக் குட்டியினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனைப் பெற்று தற்போது பிணையில் வெளியே வந்துள்ள உடுவே தம்மாலோக தேரர் தனக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு நீதிமன்றிடம் கோரியிருந்தார். அதற்கமைய அவருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதனையடுத்து வெளிநாடு சென்று வந்துள்ள உடுவே தம்மாலோக தேரர் மீண்டும் தனது கடவுச்சீட்டை உயர்நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துலவிடம் இன்று கையளித்துள்ளார். லண்டனில் உள்ள பௌத்த நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மத நிகழ்வுகளில்...
கொழும்பில் மீண்டும் காசநோய் தலைதூக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வட கொழும்பு மற்றும் மாளிகாவத்தை பிரதேசங்களில் இந்த நோய் அதிகம் பரவி வருவதாக கொழும்பு நகரசபையின் வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். கடந்த 8 மாதங்களில் குறித்த பிரதேசங்களில் 20 காசநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சாரின் பாதுகாப்பைஅதிகரிக்க மலேசிய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். உயர்ஸ்தானிகரின் வீடு, அலுவலகம் போன்றவற்றில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளபாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய பொலிஸ்மா அதிபர் அபூபக்கர்தெரிவித்துள்ளார். கடந்த 4ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து இவர்தாக்கப்பட்டமையை அடுத்து இவரது பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து 7 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அதில்இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு, மாங்குளம் - மல்லாவி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாங்குளத்தில் உள்ள பாடசாலைக்கு மகனை விடுவதற்காக வந்தவேளை வீதியின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்தில் மோதியே குறித்த தாய் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 4ஆம் கட்டை அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான 38 வயதுடைய இரவிக்குமார் இன்பமலர் ஆவர். உயிரிழந்தவரின் மகனான 14 வயதுடைய...
  பௌத்த மதம் என்ற ரீதியில் திட்டமிடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்படும் ஓர் ஆண்டாக எதிர்வரும் ஆண்டினைத் திட்டமிடுவதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். தேரவாத பௌத்தின் தலைமையகமாக இலங்கையை மாற்றுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் மகாதர்ம பரப்புரை நிகழ்ச்சித்திட்டமானது, முப்பீடங்களின் தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலின் கீழ் எதிர்வரும் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி அவர்கள் நேற்று (12) பிற்பகல் அம்பலாங்கொடை பொல்வத்த ஸ்ரீ அக்காராம விகாரையில் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வின்போது குறிப்பிட்டார். அமரபுரம் மகா நிக்காயாவின் கல்யாணிவன்ச...
வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு வவுனியா விவசாய பண்ணையில் இன்று (13.09) விவசாய திணைக்களத்தின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட சுமார் 40.27 மில்லியன் ரூபாவில் 8.32 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணத்தொகுதியே இன்று வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 420 பயனாளிகள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்ட உபகரணத் தொகுதியில் சிறிய ரக உழவுஇயந்திரம், மா அரைக்கும்...
நாட்டில் கொலைச் சம்பவங்கள் மற்றும் கொள்ளை, பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்படுவதும் கொலை செய்யப்படுவதும் இன்றைய காலங்களில் அதிகரித்துள்ளன. அதுமட்டுமன்றி கொலை செய்யப்படும் சம்பவங்களும் பாரிய அளவில் அதிகரித்து செல்கின்றன. இவ்வாறான கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வல்லுறவு சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்னதான் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அவ்வாறான அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மட்டக்களப்பு ஏறாவூரில் கடந்த சனிக்கிழமை இரவு தாயும்...
யாழ் வட்டு இந்து கல்லூரிக்கு 22.2 மில்லியன் ரூபா செலவில் மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன்,¸சரவணபவன் உட்பட  பலர் கலந்துகொண்டனர். தகவலும் படங்களும்:- பா.திருஞானம் 
நாட்டில் பல பாகங்களிலும் கடுமையான வரட்சி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் கடுமையான வரட்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவையில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியான காலநிலையை தொடர்ந்து தற்போது வரையில் நீர் நிலைகளின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. 5000 அடி நீர் மட்டம் காணப்பட்ட வெலிகந்த கரபொல ஏரியின் நீர் மட்டம் தற்போது வரட்சியின் காரணமாக வெகுவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்...