மைக்கில் காந்தன் 1866 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை பொலீஸ் பிரிவின் 150 வருட நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியிலும் இடம்பெற்றது. கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பொலீஸ் திணைக்களத்தின் 150 வருடத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வமத பிரார்த்தனை மற்றும் பொலீஸ் அணிவகுப்பு என்பன இடம்பெற்றது. அத்தோடு 150 வருட நினைவாக கிளிநொச்சி சென்திரேசா மகளீர் கல்லூரி மாணவிகளிடையே நடாத்தப்பட்ட சித்திர போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும்...
  மைக்கில் காந்தன் 'சட்டமும் ஒழுங்கும் தாய்நாட்டின் உயிர் மூச்சு' எனும் தொனிப்பொருளில் இலங்கை பொலிஸ் திணைக்களகத்தின் 150 வது பொலிஸ் தினம் இன்று 03-09-2016 சனிக்கிழமை வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், தலைமையில் பொலிஸ் திணைக்களகத்தின் கொடி ஏற்றப்பட்டு பொலிஸ் திணைக்களகத்தின் கீதம் இசைக்கப்பட்டது. நிகழ்வில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என். திசிரகுமார, உதவிபொலிஸ் அத்தியட்சகர் பியசிறி...
    தலைமன்னார் படப்பிடி பகுதியில் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளை தன்வசம் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை இன்று சனிக்கிழமை காலை கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உ.கௌசிகன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து  மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ்...
  ஐ.நா செயலாருக்கு கைலாகு மட்டும் கொடுத்து வழியனுப்புங்கள் என முன்னதாக கோரியவர்கள் பின்னர் எங்கள் மனவருத்தத்தை புரிந்து கொண்டு ஆறு நிமிடங்கள் மாத்திரம் ஒதுக்கி தந்தார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பணத்திற்கு வெள்ளிக்கிழமை காலை விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் யாழ்.பொது நூலகத்தில் வடமாகாண முதலமைச்சர் , மற்றும் மாகாண அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினாவிய போதே...
  தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமையும் எந்த ஒரு தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம்.எமது மக்களை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. நிரந்தரமான ஒரு தீர்வுகிடைக்கும் வரையில் மக்கள் பொறுமையாக இருக்கும் அதே வேளையில், கொள்கையில்உறுதியுடன் இருக்கவேண்டும்' எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அமரர் தர்மலிங்கத்தின் 31ம் ஆண்டு நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை(02)முற்பகல் தாவடியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இதன் போதுகலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்...
  இலங்கை வந்­த­டைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ள நிலையில் இதன்­போது பொறுப்­புக்­கூறல் விசா­ர­ணையில் சர்­வ­தேச பங்­க­ளிப்பு தொடர்பில் ஆரா­யப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. நேற்று இலங்கை வந்­த­டைந்த ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் நேற்­று­மா­லையே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை சந்­தித்து பேச்சு நடத்­தி­யி­ருந்தார். அந்­த­ வ­கையில் இன்று மாலை 7 மணிக்கு ஜனா­தி­பதி...
  பேஸ்புக் நிறுவனம் ஆப்பிரிக்க கண்டத்தின் 14 நாடுகளில் இணையதள இணைப்பை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை மேற்கொண்டது. இதற்காக, சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு செயற்கைகோள் ஒன்றை பேஸ்புக் நிறுவனம் உருவாக்கியது. அந்த செயற்கைகோளின் பெயர் ஆமோஸ்-6. இதனை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்புவதற்காக, எரிபொருள் சோதனை நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென வெடித்துச் சிதறியதால், அதிர்ச்சியில் இருக்கிறது பேஸ்புக். நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், தொழில்நுட்பத்தை...
  கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள தனது கணவரை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்தின் முன் மூன்று பிள்ளைகளின் தாயான மயூரி இன்று காலை போராட்டத்தில் குதித்துள்ளார். கணவர் காணாமல்போனமை குறித்து ஜனாதிபதி அல்லது பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பமொன்றைத் தருமாறு கோரி அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அநுராதபுரம் புதிய பஸ் நிறுத்தும் இடத்தில் பழக்கடை ஒன்றை நடத்தி வந்த மயூரியின் கணவரான மதுஷ்க ஹரிஸ் த சில்வா 2013ஆம் ஆண்டு செப்டெம்பர்...