நேற்று திங்கள் இரவு ஏழு மணியளவில் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வண்டி -பேரூந்து விபத்தில் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை கட்டைவேலி பகுதியைச்சேர்ந்த செந்தூரன் எனப்படும் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 35 வயதான வைத்தியரே இவ்வாறு உயிரழந்தவராவார்.
கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிலையத்தில் தனது உந்துருளிக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு யாழ் நோக்கி செல்ல முற்பட்டபோதே யாழில் இருந்து பருத்தித்துறை...
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது உருவத்தை தாலியில் செதுக்கி கலியாணம் ஒன்று நடைபெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியுள்ளது. இது புலம்பெயர் நாடு ஒன்றில் இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.
இப்படி புலிகளின் தலைவரை தாலியில் இணைத்தமை பலராலும் வியப்பாக பேசப்பட்டாலும் தமிழர்களின் அடையாளமாக மாறி விட்டமை குறிப்பிடத் தக்கது….
இச் சம்பவம் உலகை உலுக்கிய ஒரு விடயமாக பார்க்கப் படுகிறது…
யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றில் கடவுள்களுக்காக நடந்த அடிபாடு!! நீதிபதி சொன்னது என்ன? ஊரில் ஒரு பிரச்சனை எனில் அக் காலத்தில் கோயிலில் ஊரவர் கூடி அந்த பிரச்சனையை தீர்ப்பார்கள். ஆனால் தற்காலத்தில் கோயிலை மையப்படுத்தி ஊரில் பிரச்சினையை ஏற்படுத்து கின்றார்கள் என
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் கோயில் வழக்கொன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போதே நீதவான் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும்...
ஏ9 கனகராஜன்குளப் பகுதியில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட புத்த சிலையை அடித்து உடைத்த மர்ம நபர்கள்….
Thinappuyal -
ஏ9 கனகராஜன்குளப் பகுதியில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட புத்த சிலை ஒன்று நேற்று நள்ளிரவின் பின்னர் இனந்தெரியாதோரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.
சிங்களப் பௌத்த பேரினவாதிகளால் திட்டமிட்டு தமிழ் இனத்தின் மீதும் தமிழர் பிரதேசத்திலும் திணிக்கப்படும் மதரீதியான அத்துமீறல்களை தமிழ் மக்கள் எதிர்த்து வரும் நிலையில் இப்படியான சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
சமூகங்களுக்கிடையில் இன முறன்பாட்டை தோற்றுவிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.
இச் சிலை உடைப்பின் பின்னனியில் இராணுவப் புலனாய்வாளர்கள்...
பெண்ணொருவரின் வீட்டிற்குள் புகுந்து தங்க ஆபரணங்களை திருடி தனது காதலிக்கு பரிசளித்த பிக்கு !
Thinappuyal -
பெண்ணொருவரின் வீட்டிற்குள் புகுந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு, காதலிக்கு பரிசளித்ததாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குருணாகல், ரிதிகம பொலிஸார் இந்த பிக்குவை கைது செய்துள்ளனர்.
குறித்த பிக்கு சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூடப்பட்டு வரும் விகாரைகளை திறப்பதாக கூறி, நாட்டில் உள்ள பல விகாரைகளில் வசித்து வந்துள்ள இந்த பிக்கு, கிறிபத்கல்ல கந்தேகம விகாரைக்கு சில மாதங்களுக்கு முன்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வேண்டும்.
Thinappuyal -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தவறு செய்திருப்பதாக உறுதி செய்யப்பட்டால், உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வேண்டும்.
அவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் ஒரு வார்த்தை கூட பேச போவதில்லை என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை விசித்திரமானது....
ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க வழி செய்யும் புதிய சட்ட மசோதா குறித்து, மத்திய அமைச்சரவைக் குழு இன்று விவாதிக்க உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு பாராளுமன்றத்தில் ‛நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2015' தாக்கல் செய்தது. இது தொடர்பான பரிந்துரைகளை கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் நிலைக்குழு அளித்தது.
இந்தியாவில் 30 ஆண்டுகள் பழமையான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மாற்றும்...
தெற்கு அதிவேகப் பாதை மற்றும் கட்டுநாயக்க அதிவேகப்பாதை என்பவற்றிட்கான உரிமை தனக்கே உரியது-முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க
Thinappuyal -
தெற்கு அதிவேகப் பாதை மற்றும் கட்டுநாயக்க அதிவேகப்பாதை என்பவற்றிட்கான உரிமை தனக்கே உரியது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் ஆட்சியில் குறித்த அதிவேகப்பாதைகள் நிர்மாணிக்கப்பட்ட போது தனது பெயர் பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் அவர்கள் அமைத்த அலுவலகத்தை தனக்கு திறந்து வைக்க முடியாது என ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் தான் நிர்மாணப்பணிகளை முன்னெடுத்த அதிவேகப் பாதைகளைமஹிந்த திறந்து வைக்கும் போது அவர்களது அலுவலகத்தை தான்...
யாழ்ப்பாணத்தில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 40 குடும்பங்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர் .
Thinappuyal -
யாழ்ப்பாணத்தில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 40 குடும்பங்கள், விரைவில் விடுவிக்கப்படவுள்ள பிரதேசத்தில் தமது காணிகளும் உள்ளடங்கியுள்ளதாகப் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு, இரண்டொரு தினங்களுக்குள் 'உங்களது காணி விரைவில் விடுவிக்கப்படும்' என யாழ். மாவட்டச் செயலகத்தால் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலி. வடக்கில் விரைவில் விடுவிக்கப்படவுள்ள 5 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு வலி.வடக்குப் பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலின் முடிவில்,...
மாத்தறையில் இருந்து அக்கரஸ்ஸ நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பெண்களிடம் முறைகேடான முறையில் நடந்துக் கொண்ட முதியவரை (70) அக்குரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த முதியவரிடம் இருந்து ரூபா 35,000 பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிபட்டுள்ளனர்.
பஸ்ஸில் பயணிக்கும் அதிக பெண்களே இவ்வாறு பாதிக்கபடுவதாகவும், பல்கலைக்கழகத்திற்கு செல்லும் பெண்களிடம் சிலர் முறைகேடாக நடந்துக் கொள்வதாகவும் பஸ் சாரதி, பஸ் நடத்துனர் ஆகியோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
குறித்த...