ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து ஒரு வார காலம் செல்லும் வரையில் நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் கலகத் தடுப்புப் பொலிஸார் நிலைநிறுத்தப்பட உள்ளனர். சுமார் 150 கலகத் தடுப்புப் பொலிஸ் குழுக்கள் இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 50 முழு அளவிலான கலகத் தடுப்புப் பொலிஸ் பிரிவுகளும், சிறு அளவிலான கலகத் தடுப்புப் பிரிவுகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியிட்டதன் பின்னர் ஏற்படக் கூடிய கலகங்களை...
ஹற்றனிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் இரண்டு டயர்கள் கழன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹற்றன்-பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட், நியூவெளி பகுதியில் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகாமையில், பஸ்ஸின் பிற்பகுதியில் உள்ள இரண்டு டயர்களும் கழன்றுள்ளன. இன்று காலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அதிக வேகமாக சென்றதாலையே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் பயணித்த 20 பேருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் தெய்வாதீனமாக உயர் தப்பியுள்ளனர் என...
கொழும்பின் புறநகர்ப் பகுதியான பாதுக்க, போப்பே பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது, வானில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பியோடியதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் போப்பே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடக பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.  
தேர்தலின் போது முறைகேடுகள் இடம்பெற வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாக்களிப்பு நடைபெறுவது முதல் இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரையில் முறைகேடுகள் ஊழல்கள் நடைபெற எவ்வித வாய்ப்பும் கிடையாது. தேர்தல் பொறிமுறைமை மிகவும் வலுவானது. தேர்தல் அதிகாரிகள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். வாக்களித்தல், வாக்கு பெட்டிகளை எடுத்துச்செல்லல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட உள்ளது. வேட்பாளர்களின்...
விஜய், ஜீவா நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் நண்பன். இந்த படத்திலிருந்து இருவரும் உண்மையாகவே நெருங்கிய நண்பர்களாக விட்டனர். அதன் பிறகு அவரது தயாரிப்பில் ஜில்லா படத்திலும் விஜய் நடித்து கொடுத்தார். தற்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி இயக்கிவரும் படம் டூரிங் டாக்கீஸ். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இதில் விஜய்யுடன் கொண்ட நட்பால் ஒரு பாடலை முதன் முறையாக பாடி கொடுத்துள்ளார் ஜீவா.
இந்திய அணித்தலைவர் டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென்று ஓய்வு அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கடைசி வரை ஆடிய டோனி போட்டியை டிரா செய்தார். அதே நேரத்தில் அவுஸ்திரேலிய அணி தொடரையும் கைப்பற்றியது. டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்த டோனி போட்டி முடிந்ததுமே தனது ஓய்வை அறிவித்தார். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:- மெல்போர்ன் டெஸ்ட் போட்டி முடிந்ததும்,...
மிகவும் இலகுவான முறையில் பயன்படுத்தக்கூடிய மின்னஞ்சல் சேவையினை வழங்கிவரும் ஜிமெயிலிற்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நேரடியாக கூகிள் தளத்திலிருந்து ஜிமெயிலை பயன்படுத்த முடியாத வசதி சீனாவில் காணப்பட்ட போதிலும் Microsoft Outlook போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருட்களினூடாக இச்சேவை பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இவ்வாறு சேவையைப் பெறுவதற்கும் தடை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த 2010ம் ஆண்டு தொடக்கம் கூகுளிற்கும் சீனாவிற்குமான உறவு முறிவடைந்து அத்தளத்தினைப் பாவிப்பதற்கு சீனாவில் தடை...
இறந்ததாக கருதப்பட்ட தலிபான் தலைவர் முல்லா உமர் உயிருடன் இருப்பதாக ஆப்கான் உளவுத்துறை தெரிவித்துள்ளது.தலிபான் இயக்க தலைவன் முல்லா உமர் உயிருடன் இருக்கிறாரா? என்ற சந்தேகம் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்நிலையில் இவர் பாகிஸ்தானின் கராச்சியில் தான் பதுங்கியுள்ளார் என்பதை எங்களால் உறுதியுடன் கூற முடியும் என ஆப்கான் உளவுத்துறை உயர் அதிகாரி ரகமத்துல்லா நபில் கூறியுள்ளார். மேலும் ஆப்கானில் உள்ள தலிபான் அமைப்புகளின் மூன்று பிரிவுகளும் இதே...
பிரான்ஸில் உறைநிலைக்கும் கீழே பொழியும் கடும் பனிப்பொழிவால், இதுவரை 5 வீடற்ற நபர்கள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.பிரான்சில் பொழியும் கடும் பனியால், கடந்த சனிக்கிழமியன்று 29 வயது நபர் ஒருவர், வடக்கு பிரான்ஸில் இறந்து போனதாகவும், ஞாயிறன்று மேலும் இருவர் இறந்து போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இருவர் பாரிஸில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பெய்யும் பனிப்பொழிவால், வெப்ப நிலை பூஜ்யத்திற்கும்...
கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் தொற்றுக் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.இதுகுறித்து மருத்துவர் பிரெட் பெல்செட்ஸ் கூறியதாவது, இந்த வருடம் மிகவும் கொடூரமான காய்ச்சல் பருவம் காணப்படுகின்றது. மருத்துவ சேவை பிரிவின் அறைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளது. சுமார் 50 சதவிகிதமளவில் மட்டுமே பயனளிக்க கூடியதாக உள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையை நாடவேண்டும்...