தமிழ் சினிமாவுக்கு உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கலைச்சேவையை ஆற்றி வருகிறார். இவர் இந்திய சினிமாவின் பத்மஸ்ரீ உட்பட பல விருதுக்கு சொந்தக்காரர், சிவாஜிக்கு பின் சினிமா வாரிசு என்ற செல்லமாக அழைக்கக்கூடியவர்கள் பலர். இந்நிலையில் உயரிய விருதான செவாலியே விருதை பிரான்ஸ் அரசு கமல்ஹாசனுக்கு கொடுத்து கவுரவிக்க உள்ளது. இதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகநாயகனின் மகுடத்தில் மற்றுமொரு வைரம்! வாழ்த்துக்கள் கலைஞானி கமல்ஹாசன்.
  ரியோ ஒலிம்பிக் போட்டியில் உலக சாதனை படைத்த ஜமைக்கா நாட்டு சூப்பர் ஸ்டார் உசைன் போல்ட் விரைவில் விளையாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் நிகழ்த்தாத சாதனையை ஜமைக்கா நாட்டை சேர்ந்த உசைன் போல்ட் நிகழ்த்தி தனது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 114 விநாடிகளில் 9 தங்கப்பதங்களை வென்ற ஒரே விளையாட்டு வீரர். அதாவது, மைதானத்தில் 2 நிமிடங்கள் மட்டும் செலவிட்டு...
  ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ள போல்ட், பீலே, முகமது அலி ஆகியோருக்கு இணையாக சரித்திரத்தில் தனது பெயரும் நிலைத்திருக்கும் என நம்புவதாக கூறியுள்ளார். பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்தது குறித்து போல்ட் கூறியதாவது, ஓட்டப் பந்தய வாழ்க்கையை தொடங்கும்போது, இந்த அளவுக்கு வருவேன் என்று நினைக்கவே இல்லை. இந்த மகத்தான சாதனைகளை சாத்தியமாக்க உதவிய...
  ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 5-வது இந்திய வீராங்கனை, வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைகளும் சிந்து வசமானது. இதுதவிர இளம் வயதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையையும் 21 வயதான சிந்து தட்டிச் சென்றுள்ளார். சிந்து வெள்ளி வென்றதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா 2-வது பதக்கத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் இவருக்கு பரிசு...
  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. குஷால் பெரேரா 1...
  பிரேசில் நாட்டில் நடந்து வரும் ரியோ ஒலிம்பிக் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. 31வது ஒலிம்பிக் திருவிழா ரியோடி ஜெனீரோ நகரில் கடந்த 5ம் திகதி கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டிகளில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் அமெரிக்கா 43 தங்கம் உள்பட 116 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 27 தங்கம் உள்பட 66 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும், 26 தங்கம்...
  ஒரு லிட்டர் நீரில் 500 கிலோமீட்டர் ஓடும் அற்புத பைக்: அதிசய கண்டுபிடிப்பு (Video) ஒரு லிட்டர் வெறும் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு தங்குதடையின்றி செல்லகூடிய அற்புதமான மோட்டார் சைக்கிளை பிரேசில் நாட்டிலுள்ள சாவ் பாலோ நகரை சேர்ந்த ரிக்கேர்டோ ஆஸேவெடோ என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்த மோட்டார் சைக்கிள் சாதாரண தண்னீரில் ஓடுவதோடு, பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களைப்போல் நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு போன்ற வேதிப் பொருட்களை...
  கிழக்கு மாகாண  முன்னாள் முதலைமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான  சி .சந்திரகந்தனின் 41 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மட் ட க்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது  அலுவலகத்தில்இரத்த தான நிகழ்வு ஒன்று  இடம்பெற்றுள்ளது . தற்போது சிறை சாலையில் இருக்கும் சந்திரகாந்தனின்  தொண்டர்களால் இந்த இரத்த தான நிகழ்வு இடம்பெற்றுள்ளது . இந்த இரத்த தான நிகழ்வில் தமிழ் மக்கள்...
    கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் புத்த விகாரை அமைப்பது பௌத்தர்கள் இல்லாத இடங்களில் திட்டமிட்டு பௌத்த சின்னங்களை அமைப்பது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்டித்து நாளை மறுதினம் திங்கட்கிழமை கிளிநொச்சியில் மாபெரும் பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஆனையிறவில் இருந்து கரடிப் போக்கு சந்தி வரை இடம்பெறவுள்ள இந்தப் பேரணிக்கு கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன. இது தொடர்பில் ஆராயும் பொருட்டு கிளிநொச்சி மாவட்ட...
விடுமுறையை கழிப்பதற்காக இங்கிலாந்தில் உள்ள கடற்கரைக்கு சென்ற குடும்பத்தினரை ராட்சத அலை ஆட்கொண்டுள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் Newquay நகரில் அமைந்துள்ள Fistral கடற்கரைக்கு, விடுமுறையை கழிப்பதற்காக அப்பா அம்மா மற்றும் 3 குழந்தைகள் அடங்கிய குடும்பத்தினர் சென்றுள்ளனர். இவர்கள் 5 பேரும் கடலில் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி 17.20 மணியளவில் ராட்சத அலை எழுந்துள்ளது, அலையில் தாக்கம் அதிகரித்ததால், அதில் சிக்கிய இவர்கள், அருகில் இருந்த பாறையில்...