தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினால், அது தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அமையும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற பத்திகையாளர் மாநாட்டில் பத்திகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசகருமான சிவசேனதுரை சந்திரகாந்தன் மேலுள்ளவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தமுறை தமிழரசுக் கட்சி அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு...
  ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை வடக்குக்கு வருகின்றார். இவருடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசியக்...
  தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மைத்திரிபால, UNP தேசிய அமைப்பாளர் தயாகமகே பா.உ அமீரலி பாசிக்குடா விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல்… 
    ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரித்து ஓட்டமாவடியில் பாராளு மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (29)திங்கட் கிழமை இடம் பெற்றது. இத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிஸாத் பதியுதீன், முஸ்லிம் காங்கரஸ் கட்சி தலைவர் றவூப் ஹக்கீம், ஐக்கிய தேசிய கட்சி உப தலைவர் கருஜெய சு10ரிய, ஆஸாத்சாலி உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து...
  ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பொலிவுட் நட்சத்திரங்கள் அரசியல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் மஹிந்தவுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதற்காக பிரபல நட்சத்திரங்களான சல்மான்கானும், ஜாக்குலினும் இலங்கை வந்தடைந்தனர். இதில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டோவின் பூர்வீகம் இலங்கையாகும். இவர்கள் வந்த கையோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்  
  இந்தப்பகிரங்க மடல் தங்களை வந்தடைய வேண்டும். இல்லாவிட்டால், வடக்கில் உள்ள சிறீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களுக்கு இங்கு என்ன வேலை? நீங்கள் நன்றே நலம் காண்பீர்கள் என்பது எனக்குத்தெரியும். யுத்தம் சுடுகாடு ஆக்கிய ஊர்களுக்குள் நின்றுகொண்டு இரத்தவாடையும் பிணவாடையும் சுமந்துவரும் காற்றை இப்போதும் என் மக்கள் சுவாசித்துக்கொண்டிருப்பதால், என் தேசம் சுமந்த யுத்த விழுப்புண்களிலிருந்து இப்போதும் ஊனம் ஒழுகிக்கொண்டிருப்பதால் என்னால் அமைதி காண முடியவில்லை. ஆதலால் நலம் விசாரிக்கும்...
  தற்போதைய அரசாங்கம் அற்றுப்போகும் நிலையில் இராணுவ ஆட்சியினைக் கொண்டுவருவதற்கான முனைப்புகளில் கோத்தபாய அவர்கள் இறங்கினாலும் அதனை இலங்கையில் செயற்படுத்துவது கடினமானதொரு விடயம். ஆகவே விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்று தற்போது அரசின் ஒட்டுக்குழுக்களாக செயற்படும் கருணா, பிள்ளையான் போன்றோரை தேசத்துரோகச்செயல்களில் ஈடுபடுத்தவிருப்பதாகவும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கெரில்லாப் போர்முறையை உண்மையில் நன்கு தேர்ச்சி பெற்றவர் என்ற ரீதியில் முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் பிள்ளையானும், பிரதி அமைச்சரான கருணா அம்மானும் பயன்படுத்தப்படுவார்கள்...
  முஸ்லீம் மார்க்கத்திற்கு எதிராக தற்போதைய அரசாங்கத்தினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் அதனைக் கண்டும், கேட்டும, உணர்வடைந்தும், இந்த அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என்று கண்மூடிக்கொண்டிருக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளும், மக்களும் அல்லாஹ் கூறியதைப்போன்று முஸ்லீமாக இருக்கமாட்டான் பதிலாக சைத்தானாகவே இருப்பான்.    அந்தவகையில் ரிசாட் பதியுதின், ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற மற்றும் மாகாணசபையின் உறுப்பினர்கள் பலர் அரசிலிருந்து விலகிக்கொண்டமையானது வரவேற்கத்தக்கது. இன்னும் ஒரு சிலர் எமது மார்க்கத்தினை காட்டிக்கொடுப்பதற்காகவும், பள்ளிவாசல்களை...
  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக எச்சரித்துள்ளார். பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வெளியிட்டமைக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் காங்கிரஸின் சார்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார். எனவே காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீனுக்கு...