வத்தளை ஒல்லியமுல்லவில் தமிழ்ப் பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்றுக் காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென மேடையை நோக்கிச் சென்ற சில பௌத்த குருமார் அங்கு தமிழ் பாடசாலை அமைப்பதற்கு தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இது சிங்களவர்கள் வாழும் பிரதேசம் என்றும் பாடசாலை அமைப் பதால் பக்கத்தில் உள்ள மைதானத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு, எமது பிரதேச பிள்ளைகள் விளையாடுவதற்கு மைதானம் இல்லாமல் போய் விடுமென்றும் நிகழ்வில்...
பாரிஸ் நகர மையத்தில் லாசப்பலில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர் பவனி நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் பலத்த பாதுகாப்பின் மத்தியில் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட தேர்பவனியை மாநகர காவல் படையினருடன் இணைந்து ஆயுதம் தாங்கிய தேசிய பொலிஸ் விசேட பிரிவினரும் (CRS) கண்காணித்தனர்.
வழமையாக தேர்செல்லும் வீதிகள் பாதுகாப்புக்காரணங்களால் குறைக்கப்பட்டு லாசப்பல் பிரதேசத்தை ஊடறுத்துச்செல்லும் இரண்டு பிரதானவீதிகளில் மட்டும் தேர் பவனி இடம்பெற்றது.
தேர் செ…ன்ற பிரதான வீதிகளோடு...
நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் விட மூவின மக்களும் ஒற்றுமையாக வாழம் ஒரே மாவட்டம் நுவரெலியா மாவட்டம். இங்கு கல்வித்துறையையும், பெருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்
கடந்த 28.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அட்டன் நகரில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாசவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டன் விஜித்தா...
பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், மிகவும் தீவிரமான, மருந்து களுக்கு கட்டுப்படாத மார்பக புற்று நோய்க்கு சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார்.
பொதுவாக மார்பக புற்றுநோய் உருவாவதற்கு ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரோன் உள்ளிட்ட ஹார் மோன்கள் காரணமாக உள்ளன. இதைத் தொடக்கத்திலேயே கண் டறிந்துவிட்டால், இந்த புற்று நோய் செல்கள் வளர்வதை டமோக்சி பென் உள்ளிட்ட மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
எனினும், 3 (ட்ரிபிள்) எதிர்மறை மார்பக...
அன்பு இலங்கைத்தமிழ் சகோதரர்கள்அனைவருக்கும் வணக்கம்…
முதலில் இவ்வளவு காலம் என்னை சகோதரனாக ஏற்றமைக்கு ( எனக்கு எந்த தகுதியும் இல்லாமல்) நன்றி… நீங்களும் இன்னும் சில பல சகோதரர்களும் இங்கு விமர்சனம் என்ற பெயரில் என்னைப்புகழ்ந்த எல்லா வார்த்தைகளையும் மனமாற ஏற்றுக்கொள்கிறேன்..
காலம் எனக்கு சில உண்மைகளை என் கண்முன் காட்டியிருக்கிறது…. என்னை புரிந்துகொண்டவர்கள் என் சொந்தங்கள் என்னை தவறாக எடுக்கமாட்டார்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்து பேசிய எனக்கு, என்னைப்பிடிக்காதவர்கள்...
சுலைமான் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பிலிருந்து மாவனெல்லை வரை சீ.சீ.ரீ.வி கமராக்கள் சோதனை
Thinappuyal -
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பிலிருந்து மாவனெல்லை வரையான வீதிகளில் பொறுத்தப்பட்டுள்ள சீ.சீ.ரீ.வி கமராக்களை ஆராய்வதற்கு புலனாய்வு பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி நேற்று முதல் அந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள கமராக்களை சோதனையிட்ட அவர்கள் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர். அத்துடன் அவர் மாவனல்லை வரை கடத்திச் செல்லப்பட்டிருந்தமையினால் அங்கு வரை வீதிகளில் குறித்த சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் பயண பாதையை...
மலையக மாவட்டங்களிலுள்ள நகரங்களில் முக்கியமான நகரமான ஹட்டன் நகர் தற்போது நகரசபையாக உள்ளது. இதனை மாநகர சபையாக மாற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூரநோக்கின் முதற்படியே இன்றைய அபிவிருத்தித்திட்டத்திற்கு இடப்படும் அடித்தளமாகும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைப் புகையிரத நிலையத்துக்கு சொந்தமான காணிப்பிரதேசத்தை ஹட்டன் நகர அபிவிருத்திக்காக கையேற்று வாகன தரிப்பிடமும், சிறப்பங்காடியும் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு அமைச்சர் திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றது. இந்த...
கொழும்பு துறைமுகத்தில் சற்றுமுன்னர் பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள குவித்து வைக்கப்பட்டுள்ள இறப்பர் தொகை ஒன்றிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீவிபத்தினால் குறித்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துறைமுகத்தில் கொள்கலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீவிபத்து பரவியுள்ள இடத்தை அண்மித்த பகுதிகளில் இருந்த கொள்கலன்கள் சேதமடைந்துள்ளதாகவும், உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துறைமுக...
எல்லை தகர்க்கும் மனிதநேயம்! மனைவியின் உடலை சுமந்து சென்றவருக்கு காத்திருந்த நேசக்கரம்!
Thinappuyal -
தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஒடிசா மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் முன்வந்துள்ளார்.
இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர் தனா மஞ்ச்சியை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு அவரின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவதாகவும் அதற்காக அவரின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கும்படி கேட்டு பஹ்ரைனின் பிரதமர் அந்நாட்டில் உள்ள இந்திய...
புதுக்குடியிருப்பில் மாற்று வலுவுள்ளோரால் வறிய மாணவர்களுக்கான இலவச கணனி கற்கை நிலையம் அமைச்சர் டெனிஸ்வரனால் திறந்துவைப்பு
Thinappuyal -
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் புதிய பீனிக்ஸ் மாறுவலுவுள்ளோர் அமைப்பால் யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட வறிய மாணவர்களுக்கு கணினி அறிவை கொடுக்கும் வகையில் புதிய இலவச கணனி கற்கை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது, குறித்த நிலையத்தை 27-08-2016 சனிக்கிழமை மாலை 8.30 மணியளவில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
குறித்த நிகழ்வில் தனது கருத்தை தெரிவித்த அமைச்சர், இயலுமான தன்மையுள்ளவர்களே இவ்வாறு சிந்திக்க தவறுகின்ற...