ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மான் 6-0, 6-0 என்ற நேர் செட்களில் லிதுவேனியாவின் ரிகார்டாஸ் பெராங்கிûஸ தோற்கடித்தார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் எதிர் வீரரை ஒரு புள்ளிகூட பெறவிடாமல் வீழ்த்திய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார் ஜான் மில்மான்.
பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடக்கும் 31வது ஒலிம்பிக் போட்டியின் பெண்களுக்கான நீச்சல் பிரிவில் ஹங்கேரி தங்கம் வென்றுள்ளது. பெண்களுக்கான 400 மீட்டர் நீச்சல் போட்டியில் ஹங்கேரியின் கதின்கா ஹோஸ்ஜூ வெற்றி பெற்றுள்ளார். இவர் இப்போட்டியில் தங்க பதக்கம் வென்றதுடன், மிக குறுகிய நேரத்தில் இலக்கை அடைந்தவர் என்ற புதிய உலக சாதனையையும் நிகழ்த்தி உள்ளார். இவர் 4 நிமிடம் 26.36 விநாடிகளில் இலக்கை அடைந்துள்ளார். இவர் ஒலிம்பிக்கின் நீச்சல்...
ஒலிம்பிக் போட்டிக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொள்கிறது. முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் ஜப்பானை வீழ்த்தியதன் மூலம் 5-ஆவது இடத்தைப் பிடித்த இந்திய அணி, ரியோ ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. தரவரிசையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 13-ஆவது இடத்திலும், ஜப்பான் அணி 10-ஆவது இடத்திலும்...
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த சைப்ரஸ் பளுதூக்குதல் வீரர் அந்தோணி மார்டாசைட்ஸ் ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டார். ஜூலை 25-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார் கொள்வனவு செய்வதற்காக சலுகை வட்டி அடிப்படையில் ஒரு கோடி ரூபா கடன் வழங்கப்பட உள்ளது. 100 லட்சம் ரூபா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடன் வழங்குமாறு நிதி அமைச்சர், அரச வங்கிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். எவ்ளவு வட்டி வீதம் என அறிவிக்கப்படாத போதிலும் 4 வீத வட்டியில் கடன் வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வங்கி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வளவு வட்டி வீதத்திற்கு கடன் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து அறிவிக்குமாறு நிதி...
மஸ்கெலியா நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட லக்ஷபான தோட்டத்தில் இடம் பெற்ற தீ விபத்தினால்இரண்டு குடியிருப்புகள் சேதமாகியுள்ளதுடன்  நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர் தீ விபத்துச்சம்பவமானது 06.08.2016 சனிக்கிழமை இரவு 9.30 மணியளவிலே சம்பவித்துள்ளது இரண்டு வீடுகளை கொண்ட குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தீல் ஒரு வீடு முழுமையாக சேதமுற்றுள்ளதாகவும் மற்றைய வீடு பகுதியளவில் சேதமுற்றுள்ளதுடன் வீட்டு உபகரணங்கள் ஆவணங்கள் போன்றன எறிந்து நாசமாகியுள்ளது குறித்த குடியிருப்பில்  வசித்தவர்களுக்கு எவ்வித பாதிப்புகளூம் ஏற்படவில்லையென்றும் தற்காளிகமாக...
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையில்  ஆரம்பிக்கப்பட்டுள்ள அவ சர நோயாளர் காவு வண்டி சேவையில், இந்தியர்கள் எவருக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா உறுதியாக தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நோயாளர் காவு வண்டியின் செயற்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை ராஜகிரியவில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்திய – இலங்கை புரிந்துணர்வு அடிப்படையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இந்திய துரித...
கூட்டு எதிர்க்கட்சி ஒழுங்கு செய்த பாத யாத்திரையில் அதிகளவில் திவிநெகும அபிவிருத்தி அதிகாரிகளே கலந்து கொண்டதாக புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிரான பாதயாத்திரைக்கு தலைமையேற்று செயற்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் திவிநெகும அதிகாரிகள் என புலனாய்வு பிரிவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு வழங்கிய அறிக்கையில் கூறியுள்ளனர். பிரதேச மட்டத்தில் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் குறைந்த எண்ணிக்கையிலான கமத்தொழில் ஆய்வு அதிகாரிகளே பாத யாத்திரையில்...
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச விசாரணை வலியுறுத்தும் அதேநேரம், வடகிழக்கு அரசியல் அபிலாஷைகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்தால் மட்டுமே நல்லிணக்கத்தினை உருவாக்க முடியும், சொல் வடிவத்தில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது என தமிழ் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர். யாழ்;. மாவட்ட செலயகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நல்லிணக்க கருத்தறியும் செயலணி முன்னிலையில் கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்கள், நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமது கருத்துக்களையும், மக்களின் எதிர்பார்ப்புக்களையும் வெளிக்கொணர்ந்தனர். இதன்போது,...
மனித உரிமைகள் ஆணையகத்தில் தேங்கியுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பான தீர்மானம் ஒன்றை மனித உரிமைகள் ஆணையகம் மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். சித்தரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் பொலிஸாரின் அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே அதிகம் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனார், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தவர்கள் மரணித்தமை, பொலிஸாரால் சித்தரவதைகளுக்கு உட்படுத்தப்படுதல், அரச பணியாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற அநீதிகள் தொடர்பான முறைப்பாடுளே அதிகம் பதிவாகியுள்ளதாகவும் ஆணையத்தின் தலைவர்...