முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் நான் அதிக அக்கறை கொண்டுள்ளேன். எனினும் நாம் வழங்கிய கால எல்லைக்குள் மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற முடியாமை கவலையளிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தனது செயளாலர் ஊடாகவே இந்தச் செய்தியை கேப்பாப்புலவு மக்களுக்கு கூறியுள்ளார்.
நேற்று மாலை 6 மணியளவில் கேப்பாப்புலவு மக்களை சந்தித்த முதலமைச்சரின் செயளாலர் கேப்பாப்புலவு மக்களின் மாதிரி கிராமம்...
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸ மீதான மற்றுமொரு வழக்கு ஒன்று டிசம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு எதிராக கொழும்பு உயர்நீதிமன்றில் 29 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் வழக்கு தொடரப்பட்டிருந்ததாகவும், ஆனால், சிறைச்சாலையில் உள்ள பசில் இன்று நீதிமன்றில் ஆஜராக முடியாதுள்ளதாக அவரது சட்டதரணி உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த வழக்கு மீதான விசாரணையை டிசம்பர் மாதம் ஒத்திவைப்பதாக நீதிபதி பத்மினி என்.ரணவக்க உத்தரவிட்டுள்ளார்.
திவிநெகும...
பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த நான்கு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொது சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த வர்த்தக நிலையங்களில் இருந்து காலாவதியான இனிப்பு வகைகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளாரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு
Thinappuyal -
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளாரைத் தெரிவு செய்வதற்காக, நாளை வியாழக் கிழமை பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பொன்றை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஐ.நா பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் நிரந்தர உறுப்பு நாடுகளான பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரிதிநிதிகளும், நிரந்த உறுப்புரிமை அற்ற ஏனைய 10 நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவிருக்கின்றனர். ஐ.நா...
மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரியை அரச மற்றும் தனியார் ஒன்றிணைந்த நிறுவனமாக ஓர் சபையின் கீழ் செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.
அரச பல்கலைக்கழக வைத்திய பீடங்களின் பீடாதிபதிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல போன்றவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பீடாதிபதிகள் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சயிட்டம் கல்லூரியின்...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கைதுசெய்து அவரின் குடியுரிமையை பறிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் அரசாங்கத்திற்குள் வலுப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்த நடவடிக்கைகள் தாமதமாவதற்கு மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளுக்கிடையில் நிலவும் கடும் கருத்து முரண்பாடே காரணம் என பெயரைக் குறிப்பிட விரும்பாத அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர்...
உலகம் முழுவதும் நேற்று கபாலியின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டு வருகிறது. அதிக எதிர்பார்ப்புள்ள இந்த படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுப்பதற்காக தயாரிப்பு தரப்பில் பல முயற்சிகள் எடுத்து வருகிறது.
கபாலியை முதல் நாள் பார்க்கவேண்டும் என்ற மோகம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் இருப்பதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.ஆனால் மலேசியவை சேர்ந்த ரசிகர் ஒருவர் ஒரு படி மேலே சென்று, டிக்கெட் கிடைக்காத சோகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று...
யாழ்ப்பாணத்திலுள்ள 31 நலன்புரி முகாம்களையும் எதிர்வரும் ஓஸ்ட் மாதத்திற்குள் மூடுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கமைய அந்த முகாம்களில் இரண்டு தசாப்தங்களுக்கு மேல் வாழ்ந்து வரும் மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக 971 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
யுத்தம்...
கிளிநொச்சி மாணவன் சாதனை யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இயந்திரவியல் சிறப்பு இறுதியாண்டு மாணவனான மகேஸ்வரன் றஜிதனால் வயலில் நீர்பாய்ச்சுவதற்கான வாய்க்கால் போடும் எளிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.
முழுக்க உள்ளூர் பொருட்களை கொண்டு அமைக்கப்பட்ட இவ்வியத்திரத்தின் மூலம் வேண்டிய படி வாய்க்கால் அமைக்க உதவும்.கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த மாணவன் சிறு வயது முதல் கல்வியிலும் ஏனைய இணைபாட விதான செயற்பாடுகளிலும் திறமையான மாணவன் கபொத சாதாரன தரப்பரீட்சையில் கிளிநொச்சி மகா...
கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண முடியாமல் போனதை நினைத்து நடிகை ப்ரியா ஆனந்த் ட்விட்டரில் கண்ணீர் வடித்துள்ளார். கபாலி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து வருகிறார்கள்.
கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். Buy Tickets பலர் தியேட்டரில் செல்ஃபி எடுத்து வெளியிடுகிறார்கள். இப்படி...