காணிப்பிரச்சனையில் அரசியல் நாடகம் வேண்டாம் என கோரி ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்களால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை வவுனியாவில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர் வாய்களை கறுப்பு நிற துணிகளால் கட்டியவாறு ஊர்வலமாக வந்த இளைஞர் யுவதிகள் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவம் மக்களின் காணிகளை அபகரித்துள்ளமையினால் வட பகுதி மக்கள் பல்வேறு துன்பங்களை...
  கிளிநொச்சி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், பொலிஸார் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்றதற்கான எந்தவொரு அறிகுறிகளும் இல்லை எனவும் இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலையாக இருக்கலாம் எனவும்...
கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்திலுள்ள குடிநீர் கிடைக்கும் பிரதேசத்தை ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்துள்ளதனால் குடிநீரின்றி பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்சனைகள் தொடர்பில் அதிகாரிகளிடமும், அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரிடமும் பல தடவைகள் முறையிட்டும் இதுவரை தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று பிரதேச மக்கள் குற்றம்சாட்டப்படுகின்றனர். யுத்தம் காரணமாக தமது சொந்த இடத்தை விட்டு வெளியேறிய கிளிநொச்சி பூநகரி பிரதேச மக்கள் 2010...
  யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் கடந்தவாரம் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக, அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று சிறிலங்காவின் உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று விவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, இந்த மோதல்கள் தொடர்பாக விசாரிக்க யாழ்.பல்கலைக்கழகத்தின் மூத்த கல்வியாளர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக்...
  நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான கொழும்பு நோக்­கிய எதிர்ப்புப் பேரணி வர­லாறு படைக்கும். பொது மக்கள் பல இலட்சம் பேர் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் ஒன்­றி­ணைந்து புது யுகத்­திற்­கான சரித்­திரம் படைப்­பார்கள் என கூட்டு எதிர்க் கட்சி தெரி­வித்­துள்­ளது. நாட்டை நேசிக்கும் அனைத்து மக்கள் பிர­தி­நி­தி­களும் எதிர்ப்புப் பேர­ணியில் கலந்து கொள்ள வேண்டும். குறிப்­பாக அர­சாங்­கத்­திற்குள் இருந்துகொண்டு செய்­வ­த­றி­யா­துள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உண்­மை­யான பக்­தர்கள் வெளியில் வர வேண்டும். அப்­போது...
தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வரை, அவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப் போவதில்லை என்று, சிங்கள மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களின் பெற்றோர் சிலர் கலந்து கொண்டனர். “யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலை அடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் எமக்குத் திருப்தி அளிக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் இருந்து சிங்கள மாணவர்கள், வவுனியா வரை பேருந்தில் கொண்டு...
  இந்­திய மத்­திய அரசின் உயர் மட்ட குழு­வினர் ஆகஸ்ட் மாதம் 10 மாதம் திகதி இலங்­கைக்கு வரு­கின்­றனர். அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரில் வரும் இந்த உயர் மட்ட குழு­வினர் மூன்று நாட்கள் இலங்­கையில் தங்­கி­யி­ருப்­ப­துடன் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்­ளனர். ஆகஸ்ட் மாதம் 11 மற்றும் 12 ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்ள மனித வள உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்­கி­லேயே தகவல் தொழில்­நுட்ப, உள்­ளூராட்சி...
  அலவ்வ – வாரியகொட பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற பஸ் – முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்தமையால் கோபமடைந்த குழுவினர் பஸ்ஸினை தீ வைத்துள்ளனர். எரிபொருள் நிரம்பு நிலையத்திலிருந்து பிரதான பாதைக்கு சென்ற முச்சக்கரவண்டி, வவுனியா – கொழும்பு தனியார் பஸ்ஸில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றதிற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதேச வாசிகள் அவ்வழியில் பயணித்த பஸ்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறித்த...
  யாழ்ப்பாணம் கீரிமலை கடற்பரப்பில் தென்படும் பிள்ளையார் சிலை பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களின் முன்னர் திடீரென இந்த கடற்பரப்பில் பிள்ளையார் சிலை தென்பட்டது. இது கடலில் மிதந்து வந்ததென பரவலாக பேசப்படுகிறது. எனினும், அது உட்கார்ந்திருக்கும் நிலை மற்றும் எடை என்பனதான் பலரையும் சிந்திக்க வைத்து, ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த சிலை ஒரு அதிசயம், கடவுள் செயல் என சொல்பவர்களும் உள்ளனர். இந்த சிலை விவகாரம் யாழில்...
இலங்கைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய வெளிநாட்டு தூதுவர்கள் நான்கு பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தமது நியமன கடிதங்களை கையளித்துள்ளனர். மெக்ஸிக்கோ, போர்த்துக்கல், கிரீஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தல் போன்றே அனைத்து இன மக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தற்போதைய அரசின் கொள்கை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன்போது இலங்கைக்கு...