பெருந்தோட்ட கம்பனிகள் (RPC), மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB), இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம் (SLSPC) நிறுவனங்களைப் போன்று மலையகப்பகுதிகளில் தனியாருக்கச் சொந்தமான சிறு தேயிலைத் தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களுக்கும் தனி வீடுகள் அமைத்துக் கொடுக்க அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்து வருகிறார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். ஹப்புத்தளை, நீட்வுட் தனியார் தோட்டத்தில் மண்சரிவு ஆபத்தை எதிர்கொள்ளும் மிகவும்...
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய 9ஆம் திருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது. ஓட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமக் குருக்கள் கீர்த்தி ஸ்ரீ வாசன் அவர்களினால் அபிசேகங்கள் பூசைகள் இடம் பெற்று எம்பெருமான் உள்வீதி வலம் வந்து முத்துப் சப்பரத்தில் அடியார்களுக்கு அருள்பாலித்து எம்பெருமான் ஆலயத்தை வந்தடைந்ததும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு, ந.கலைச்செல்வன்.  
  புனித தலமான கதிர்காமத்தில் வயோதிப புத்த பிக்கு ஒருவர் சிறுமி ஒருவரிடம் கீழ்தரமான முறையில் நடந்துகொள்ளும் காட்சி பதிவானது. கதிர்காமம் ஏழுமலை கோயிலுக்கு செல்லும் படிவரிசையில் நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவரின் காலை, வயோதிப பிக்கு ஒருவர் காலால் சுரண்டுவதும் அதற்கு அந்த பெண் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் நிற்பதும் காணொளியில் பதிவானது. பெண்ணின் உறவினர்கள் குறித்த பெண்ணை அழைத்த போதும் தான் சிறிது நேரம் இவ்விடத்தில் இருந்துவிட்டு வருகிறேன்...
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம். நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக ஊறும். பேரீச்சம்...
ஐம்பது வயதிற்கு மேல் ஆனாலும் பெண்களில் சிலர் ஜம் மென்று அழகாக காட்சியளிப்பர். அதைப் பார்த்து பலரும் ஏக்கப் பெருமூச்சு விடுவதுண்டு. இளமையை தக்க வைத்துக் கொள்ள என்ன தான் சாப்பிடுகிறாரோ? என்று நினைப்பதும் உண்டு. அவ்வாறு ஏங்கும் பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ். உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது ஆரோக்கியமான தோலை தருகிறது பால் காய்ச்சாத...
சுவாதி கொலையில் கைதான ராம்குமார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தபடுகிறார். ராம்குமாரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த இவர், சுவாதியுடன் பழக முடியாத ஆத்திரத்தில் அவரை கொலை...
இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிஷாபிஷ்வால் மற்றும் உதவிச் செயலாளர்டொம் மெலினாவ்ஸ்கி ஆகியோருடன் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் இக்கலந்துரையாடல் நிகழ்வு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்றது. இதில், இலங்கையின் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இடம்பெற்றுவருகின்ற பல சீர்திருத்தங்கள் பற்றி பேசப்பட்டன. இதன்போது அரசியலமைப்பு, சட்ட விவகாரம் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பிலும், கடந்த ஆண்டுஇலங்கை அரசாங்கத்துடன் ஐக்கிய நாடுகள் பேரவையில்...
இலங்கையின் மூத்த கலைஞர் மரிக்கார் ராம்தாஸ் காலமானார். இலங்கை தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கிய தடத்தை பதித்த ராம்தாஸ் தனது 69ம் வயதில் காலமானார். சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த ராம்தாஸ் சென்னையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது இயற்கை எய்தினார். இலங்கையின் நாடகக்கலை, திரைப்படம், வானொலி ஒலிபரப்பு, தொலைக்காட்சி என பல்வேறு பரிமாணங்களில் தன்னை மிளிரச்செய்த அற்புத கலைஞராக ராம்தாஸ் போற்றப்படுகின்றார். அன்னார் நடித்து வெளியான கோமாளிகள் திரைப்படம் மிகவும் பிரபல்யமான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின்...
12.07.2016 அன்று வடமராட்சியையும் தென்மரட்சியையும் இணைக்கும் வறணி திராலி இணைப்பு வீதியின் புனரமைப்பு வேலைகள் சம்பிரதாய பூர்வமாக வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த நிகழ்விற்கு வடமாகாண சபையின் எதிர்கட்சித்தலைவர் தவராசா அவர்களும் வீதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் சிவயோகம் அவர்களும் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் அவர்களும் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் பெலிசியன் அவர்களும்...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்று தமிழகம் வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தன் என்ற சுந்தரராஜாவை இலங்கை சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி அதற்கான தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சாந்தன் இலங்கையை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் இலங்கை இந்திய கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இந்த விடயம் முன்னெடுக்கப்படுகிறது. குறித்த மாற்றல் நடவடிக்கைக்கான அனுமதி ஒப்புதலுக்காக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சாந்தனின்...