வடமாகாணசபையின் முதலமைச்சருக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் சர்ச்சைகள் உருவாகியுள்ளது. த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தைப் பகுதிக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதில் உறுதியாகவிருக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடமாகாணசபையின் உறுப்பினர்களான லிங்கநாதன் உள்ளிட்ட சிலரும் தாண்டிக்குளத்தில் இவ்பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கவேண்டுமென்பதில் உறுதியுடன் இருக்கின்றனர்.
தமிழர் பிரதேசத்தில் இவ்வர்த்தக மையம்...
கிராமிய பொருளாதார மத்திய மையம் வவுனியாவின் ஓமந்தையில் அமைக்கப்படவேண்டும் – சிவசக்தி ஆனந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டப்பேரணி
Thinappuyal -
கிராமிய பொருளாதார மத்திய மையம் வவுனியா ஓமந்தையில் அமைக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று காலை (28.06.2016) 10.00 மணியளவில் வவுனியா, காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இவ்வார்ப்பாட்டப் பேரணியானது ஆரம்பமாகி வவுனியா பிரதேச செயலகம் வரை சென்று, வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்த வர்த்தக மையம் ஓமந்தையில் ஏன் அமைக்கப்படவேண்டும் என தினப்புயல் ஊடகம் கேள்வி எழுப்பியபோது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...
இலங்கைக்கு சொந்தமான கடல் வலயம் 2020ம் ஆண்டளவில் மேலும் அதிகரிக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச கடற்பரப்பிற்கு சொந்தமான மேலும் ஒரு கடல் பகுதி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு தற்போது சொந்தமாக உள்ள கடல் பரப்பு இலங்கையை போன்று 60 மடங்கு பெரியவை.
எதிர்காலத்தில் மேலும் 23 மடங்கு கடற்பரப்பு இலங்கைக்கு சொந்தமாகும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு தொடர்புடைய பல நிறுவனங்களுடன்...
தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளரும், முன்னாள் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு எதிரான படுகொலை வழக்கை, ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வவுனியா நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தன்னுடைய தனிப்பட்ட தேவைக்காக சென்றுகொண்டிருந்த போது, வவுனியா-செட்டிக்குளம் வைத்தியசாலையின் மதிலில், தன்னுடைய வாகனத்தை 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதியன்று மோதியமையால், பிரமுகர்கள் பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பலியானார்.
இதுதொடர்பில், வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பும்...
பொறுப்புக்கூறல் பொறிமுறையின் சுதந்திரமான, நடுநிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணயைாளர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், புதிதாக எழுந்துள்ள கொத்தணிக் குண்டுக் குற்றச்சாட்டையும் இலங்கை விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்ரெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள...
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகிய முன்னாள் புலி உறுப்பினர்களில் இதுவரை 103 பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்கள் என தெரிவித்தார் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ஒருவரின் மனைவி.
அத்துடன் சிறையில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகும் முன்னாள் போராளிகள் அனைவரையும் சர்வதேச மருத்துவர்களால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
காணாமற்போனவர்களை வெளிப்படுத்தக் கோரியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் நேற்றைய தினம் நல்லூர் ஆலய முன்றலில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை...
இன்று செவ்வாய்க்கிழமை காலை, நாமல் ராஜபக்ஷவை, , பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு, அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அவருக்குச் சொந்தமான சட்ட நிறுவனம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சட்ட நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்கள் தொடர்பிலும் அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று குறித்த பிரிவினரின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் விசாரணைகளின் பின் இவர் கைச்செய்யப்படுவாரா என்பது கேள்விக்குறியாகும்….
ஆபூர்வ ஜோதிடர் என அழைக்கப்படும் நாஸ்டர்டாமஸ் பற்றி அனைவரும் அறிந்திருப்போம்.
உலகில் நடக்க இருப்பவை குறித்து அவர் கணித்துகூறியது ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவது திகைப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா என்பவரை அந்நாட்டு மக்கள் நாஸ்டர்டாமஸ் அழைத்து வருகின்றனர்.
காரணம், இவர் 50 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85...
சிரியா ஊடகவியலாளர்கள் ஐந்து பேரை கடத்தி சென்ற ஐ.எஸ் தீவிரவாதிகள் அவர்களை தூக்கிலேற்றி கொலை செய்துள்ளனர்.
பிரித்தானியாவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் மனித உரிமைகள் அமைப்பான SOHR இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிரியா ஊடகவியாளர்கள் 5 பேரை தங்களுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டதாக கூறி ஐ.எஸ் குழுவினர் கடத்தி சென்றுள்ளனர்.
தொடர்ந்து 2 மாதங்கள் அவர்களை சித்திரவதை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே டிசம்பர் மாதத்தில் ஊடகவியலாளர்கள்...
அமெரிக்காவில் ரயிலுடன் கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவில் செல்ல தங்களது சொந்த வாகனத்தில் புறப்பட்ட இந்த குடும்பம் லாஸ் அனிமாஸ் பகுதியில் இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
பயணிகள் ரயில் கடந்து செல்லும் பாதையில் தண்டவாளத்திலேயே இவர்களது கார் சிக்கியதாலே விபத்து நேர்ந்துள்ளதாக கொலராடோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கி இறந்த...