தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும் , வவுனியா நகரசபையின்  முன்னாள் உப நகர  பிதாவுமாகிய  திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் இவ் விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு கடந்த  23/05/2016 அன்று  கூமாங்குளத்தில்  அமைந்துள்ள   ஓர்கன்   நிறுவனத்தில்  நடைபெற்றது. அல்லையூர் சிவா செல்லையா அவர்களின்  ஊடாக இவ் விசேட உணவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது . இவ் நிகழ்வில் ஜெர்மனியில் இருந்து வருகைதந்த ஜனநாயக மக்கள்...
நாட்டில் தொர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காலநிலையினால் மலையகத்தின் அட்டன் மற்றும் தலவாகலை நகரங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக மரக்கறி விபாயாரிகள் தெரிவிக்கின்றனர். தம்புள்ளை பகுதியில் மரக்கறி பயிர்செய்கை வீழ்சியடைந்துள்ளதால்  தம்புள்ளையிலிருந்து மலையக நகரங்களூக்கு மரக்கறி வருகை வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் நுவரெலியா, வெளிமடை, வெள்ளவாய, பண்டாரவளை பகுதிகளிலிருந்தே குறிப்பிட்ட அளவிலான மரக்கறிகள் எம்மால் கொள்ளவனவு செய்ய முடிக்கின்றதாக  வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.  சகல மரக்கறி வகைகளும் 160 ரூபாய்க்கு மேல் விலையேற்றம் பெற்றுள்ளது. போஞ்சி...
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடைய தந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் இன்று (25.05.2016) இயற்கை எய்தினார். மண்டைதீவு அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் 1950 களில் வன்னியை நோக்கிய படித்தவாலிபர் திட்ட குடியேற்றத் திட்டங்களினூடாக கிளிநொச்சி வட்டக்கச்சியில் குடியேறினார்நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட கந்தையா கதிராசிப்பிள்ளை அவர்களின் மகளாகிய இலட்சுமியை வாழ்க்கைத் துணையாக வட்டக்கச்சியில் வாழ்ந்து வந்தார். மனைவியின் பிரிவிற்கு பின்னும் பிள்ளைகளுடன் வட்டக்கச்சியில் வாழ்ந்த இவர் இறுதி யுத்தத்தின்போது குடும்பத்தினருடன்...
அனைத்து ஊடகவியலாளர்களுக்கும்… அன்புடையீர், மாபெரும் முத்தமிழ்விழா – ஊடக அனுசரணை   28.05.2016 சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில்; இருந்து நள்ளிரவு வரை புதுக்குடியிருப்பு நகரில் பாரம்பரிய கலாச்சார கலைஞர்களினால் “முத்தமிழ் விழா” நடைபெறவுள்ளது. இதில் 30ற்கும் மேற்பட்ட வீதி நிகழ்வுகளான இனியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், காவடி மற்றும் வேறு நிகழ்வுகளையும் காத்தவராயன் சிந்துநடைக்கூத்து, கோவலன் கூத்து, அரிச்சந்திர மயானகாண்டம், சமூக நாடகம், பண்டாரவன்னியன் போன்ற தெரிந்தெடுக்கப்பட்ட எமது கலைஞர்களின் 05 மேடை நிகழ்வுகளும்...
யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுக்கும் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஹாவா குழுவின் தாக்குதல்கள் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான குழு வன்முறைகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறை மா அதிபர்...
யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக நினைவுத் தூபி ஒன்றை அமைக்க வேண்டுமென ஈ.பி.டி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் யோசனை முன்வைத்துள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த நபர்களுக்காக வடக்கின் ஓமந்தை பகுதியில் நினைவுத் தூபி ஒன்றை அமைத்து வருடாந்தம் அவர்கள் நினைவு கூரப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.இதற்காக தினமொன்றையும் நிர்ணயிக்க வேண்டுமென யோசனையில் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்கள் நாட்டுக்காக செய்த தியாகத்தை போற்றும் வகையில் ஓமந்தையில் பொருத்தமான ஓர் இடத்தில் நினைவுத் தூபி...
பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட போதிலும் ஸ்கொட்லாந்து காவல்துறையினர் இலங்கைக் காவல்துறையினருக்கு தொடர்ந்தும் பயிற்சி வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் காவல்துறையினர் சித்திரவதைகளில் ஈடுபடுகின்றமை குறித்த புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையிலும், ஸ்கொட்லாந்து காவல்துறையினர் இந்த பயிற்சியை வழங்கத் தீர்மானித்துள்ளனர். இலங்கைக் காவல்துறையினருக்கு பயிற்சி அளிப்பது குறித்து ஸ்கொட்லாந்துடன் செய்து கொண்ட உடன்படிக்கை இந்த மார்ச் மாதத்துடன் கலாவதியாகியிருந்தது. எனினும், தொடர்ந்தும் இலங்கைக் காவல்துறையினருக்கு பயிற்சிகளை வழங்க ஸ்கொட்லாந்து காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர். இலங்கையில் மனித...
கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோவின் நடவடிக்கைகளினால் தாம் பொறுமையிழந்ததாக மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். அண்மையில் சம்பூர் மஹாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்படை அதிகாரி ஒருவரை திட்டிய சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாகாண ஆளுனரின் நடவடிக்கை காரணமாகவே தாம் ஆத்திரமுற்று அவ்வாறு நடந்து கொண்டதாக நசீர் தெரிவித்துள்ளார். மாகாண ஆளுனர் தமக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை எனவும், அடிக்கடி தமது அதிகாரத்தில்...
இலங்கைக்கு உதவிகளை வழங்குவது குறித்து அமெரிக்க உயர் அதிகாரிகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் நேற்றைய தினம் கொழும்பில் விசேட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்க வெளிநாட்டு கடன் வள அலுவலகப் பணிப்பாளர் ஹாரி சாஸ்திரி தலைமையிலான குழுவினர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். வெளிநாடுகளுக்கு அமெரிக்கா உதவி வழங்குவது குறித்த தீர்மானங்களை எடுக்கும் முக்கிய அதிகாரிகளில் ஒருவராக சாஸ்திரி கருதப்படுகின்றார். இலங்கை மக்களுக்கு எவ்வாறான உதவிகள்...