இரண்டு ஆண்டுகளே இந்த தேசிய அரசாங்கம் நீடிக்கும் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஏற்படுத்திக் கொண்டுள்ள தேசிய அரசாங்கத்திலிருந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் நிச்சயமாக, சுதந்திரக் கட்சி விலகிக்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னரும் ஐக்கிய தேசியக் கட்சியினால் தனியாக ஆட்சி அமைக்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கம் கடந்த 2015ம்...
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் பென் ஸ்டோக் இடது முழங்காலில் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். இடது முழங்காலில் ஸ்டோக்கிற்கு உபாதை ஏற்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் ஏற்பட்ட இந்த உபாதை  காரணமாக ஸ்டோக்கிற்கு சத்திரசிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனால் ஸ்டோக்கிற்கு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட்போட்டித் தொடரிலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரிலும் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால், அது மிக சுலபமாக ஏனைய பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் இருந்துவரும் செயல்முறைகளே இங்கும் கடைபிடிக்கப்படுகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் செயல்முறை என்பது அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கால அவகாசம் வழங்குகிறது. இதனால் உங்களின் தகுதி குறித்த மதிப்பீடுகளை தயார் படுத்தவும் உதவுகிறது. 1. பாடநெறி பல ஆண்டுகள் மிக உயரிய நிலையில் இங்கு நீங்கள் பாடங்களை கற்றுக்கொள்ள இருக்கின்றீர்கள். ஆதலால் உங்களுக்கு மிகவும் பிடித்தமான பாடநெறியை...
பிரித்தானியாவில் பெரும்பாலான வரி செலுத்துவோருக்கு சொந்த வீட்டுக்கு மேலதிகமாக சொத்து வைத்துள்ளனர். இது அவர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தருவதாக உள்ளது. இரண்டாவது சொத்தில் இருந்து வரும் வருவாய்க்கு வரி? இரண்டாவது சொத்தில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கும் சொத்து வரி செலுத்த வேண்டும். பொதுவாக சொத்துவரி செலுத்தும் அதே காலத்தில் இதற்கும் செலுத்தலாம். மட்டுமின்றி பிரித்தானிய குடிமக்கள் அல்லாதவர்களுக்கு வருவாய் ஈட்டுபவர்களுக்கான சிறப்பு சட்டங்கள் பொருந்தும். வாடகை வருவாய் எப்படி கணக்கிடப்படுகிறது? தொழில்முறையாக ஈட்டும் வருவாய்...
குழந்தை பாக்கியம் தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உடலுறவு கொண்ட சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தின் ஹராய் கிராமத்தில் ராம் சங்கர் திவாரி என்ற சாமியார் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். தனது பெயரை பரமானந்த பாபா என்று மாற்றிக் கொண்டதுடன் குழந்தையில்லாத பெண்களை குறிவைத்து இவரது ஆசையை தீர்த்துக் கொண்டுள்ளார். குழந்தையில்லை என மனமுடைந்து வரும் பெண்களை வசீகரிக்கும் வகையில் பேசி, தன்னுடன் உறவு வைத்துக் கொண்டால்...
ஐரோப்பிய நாடுகளில் கோடைகால சுற்றுலாவுக்கு சிறந்த இடங்கள் குறித்த பட்டியலை பயண வழிகாட்டி நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் தங்களது சுற்றுலாவினை சந்தோஷத்துடன் செலவழிக்கும் விதமாக, சுற்றுலா இடங்களில் கிடைக்கும் பொருட்கள், காலநிலை போன்றவற்றினை கொண்டு இந்த 10 சுற்றுலா இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. "அழகின் விளிம்பில்" என்ற பெயரில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.
பிரான்சில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டத்தால் பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோல் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது, பிரான்சின் பல பகுதிகளில் குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள், பாரிஸில் அதிகமாக பெட்ரோல் விநியோகம் தடைபட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துறை அமைச்சர் கூறியதாவது, பிரான்சில் நடந்து வரும் தொழிலாளர் போராட்டத்தில் பெட்ரோல் விநியோகம் தடைபடுவது சரியானது அல்ல. தற்போது நிலவி வரும் இந்த பிரச்சனையினை தடுப்பதற்காக பிரான்ஸ் பிரதமர், சட்டப்பேரவையில்...
அஜித் தன் அடுத்த படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார். இப்படத்தில் ஒரு வெயிட்டான வில்லன் ரோல் இருக்கிறதாம். இதில் நடிக்க விஜய் சேதுபதியை படக்குழு அனுகியதாக கூறப்பட்டது. இந்நிலையில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஏன் என்று விசாரிக்கையில் அவர் அடுத்து கே.வி.ஆனந்த்இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் இவருடைய திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகின்றது. இதனால், பல நாட்கள் கால்ஷிட் தேவை என்பதால் அஜித் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க மறுத்ததாக...
தெறி படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து விட்டது. இந்நிலையில் இப்படம் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் விஜய் 3 முறை ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் சென்னையில் பிரபல திரையரங்கில்(மல்டிப்ளக்‌ஷ்) 1400 காட்சிகள் ஓடி புது சாதனை படைத்துள்ளதாம்.
சிம்பு நடிப்பில் இந்த வாரம் இது நம்ம ஆளு பிரமாண்டமாக வரவிருக்கின்றது. இப்படத்தின் முன்பதிவு மிகவும் வேகமாக நடந்து வருகின்றது. இந்நிலையில் ஒரு சில பிரச்சனைகளால் ஆஸ்திரேலியா, ப்ரான்ஸ் மற்றும் நியூசிலாந்தில் மட்டும் இப்படம் ரிலிஸ் ஆகவில்லையாம். இதனால் அப்பகுதி சிம்பு ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். இப்படம் தமிழகத்தில் மட்டும் 350 திரையரங்குகளில் வரவுள்ளது.