மட்டக்களப்பில் பெய்துவரும் மழையினால் உடைந்துள்ள இரண்டு அணைக்கட்டுகளை விரைவாக திருத்தியமைக்க நடவடிக்கையெடுக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மாவடியோடை அணைக்கட்டு மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்புல் அணைக்கட்டு ஆகியன உடைப்பெடுத்துள்ள நிலையில் அவற்றினை கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் மற்றும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். உறுகாமம் நீர்ப்பாசனத்திற்குட்பட்ட...
ஜேர்மன் நாட்டின் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் அலுவலகம் முன்பு மர்ம நபர்கள் சிலர் இறந்தபோன பன்றியின் தலையை வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஜேர்மனியில் உள்ள Stralsund என்ற நகரில் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலின் பாராளுமன்ற அலுவலகம் அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து தான்26 வருடங்களுக்கு முன்னர் ஏஞ்சலா மெர்க்கல் முதன் முதலாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் பொலிசார்இந்த நகரில் ரோந்து பணியில்...
பிரித்தானியா மகாராணி எலிசபெத் அவர்களின் 90வது பிறந்தநாள் விருந்து Windsor Castle அரச குடியிருப்பில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மகாராணி அவர்களின் பிறந்தநாள் ஏப்ரல் 21 ஆம் திகதி என்றாலும், உற்றார் உறவினர்கள் கலந்துகொள்ள, கலைநிகழ்ச்சிகளோடு பிறந்தநாள் விருந்து அரசகுடியிருப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் இராணுவத்தினரின் மரியாதை அணிவகுப்பு மற்றும் பாடகர்கள், நடன கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவரும் கலந்துகொண்டு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். கலைநிகழ்ச்சிகளை அரசகுடும்பத்தினர் அனைவரும் கண்டு ரசித்தனர், பிரித்தானிய...
பலத்த காற்றினால் அருந்து வீழ்ந்த மின்கம்பியால் போக்குவரத்து தடையேற்பட்டுள்ளது அட்டன் நுவரெலியா பிரதான பாதையில் மின் கம்பி அறுந்து வீழ்ந்ததால் சுமார் ஒரு மணித்தியாலம் வரை போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகம பகுதியில் 17.05.2016 காலை 8.30 மணிமுதல் 9.30 மணிவரை போக்குவரத்து தடையோட்பட்டுள்ளது. அதிக காற்றினால் பாதையோரமிருந்த மின் கம்பத்திலிருந்த மின் கம்பியானது பாதையின் குருக்கே வீழ்ந்த நிலையிலே இச்சம்பவம் சம்பவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற அட்டன் மின்சார சபையினர்...
தல நடித்த வேதாளம் படம் நவம்பர் மாதம் வெளியானது. அப்படத்தை தொடர்ந்து மறுபடியும் அஜித் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பது நாம் அறிந்த விஷயம். இந்த புதிய படத்துடைய பூஜை மே 1ம் தேதியே போடப்பட்ட நிலையில், படத்தின் படப்பிடிப்பு ஜுன் அல்லது ஜுலை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும், பட காட்சிகள் அனைத்தும் ஈரோப்பில் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு படம் அடுத்த...
சென்ற வாரம்தான் ஒரு தனியார் பேருந்தில் தெறி திரைப்படம் திருட்டு டிவிடி பயன்படுத்தி ஒளிபரப்பியதால் பேருந்து ஓட்டுனரை அதிரடியாக கைது செய்தனர். அது போல மீண்டும் இன்று ஒரு தனியார் பேருந்து பிடிபட்டுள்ளது. நேற்று இரவு அவினாசியில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்த CJS – BSS வண்டி எண் TN37AH7997 என்ற தனியார் பஸ்ஸில் புத்தம் புது திரைப்படமான ‘மனிதன்’ திரைப்படம் ஒளிபரப்புவதை பயணி ஒருவர் நடிகர்...
நேற்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாக்கை பதிவு செய்தனர்.இதில் தனுஷ், மணிரத்னம், சமந்தா போன்றவர்கள் வாக்கு அளிக்கவில்லை. மேலும் இத்தேர்தலில்சூர்யா எல்லாரும் வாக்களிக்க வேண்டும், நம் ஜனநாயக கடமையை தவறக் கூடாது என்று வீடியோ மூலம் பதிவு செய்தார் . ஆனால் கடைசியில் அவரே வரவில்லை, என்னவென்று விசாரித்தால் வெளிநாட்டில் குடும்பத்துடன் சிக்கி கொண்டாதால் கடைசி நேரத்தில் வர இயலவில்லை என்று அறிக்கை...
சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் பலரின் கடின உழைப்போடு வெளியான படம் 24. சூர்யாவுடன், சமந்தா, நித்யா மேனன் நடித்திருந்த இப்படத்திற்கு அட்டகாசமான இசையை கொடுத்திருந்தார் ஏ.ஆர். ரகுமான். North America மற்றும் Canadaவில் இப்படம் $ 1.5 மில்லியன்வசூலித்திருப்பதாக சினி கேலக்ஸி நிறுவனம் கூறியுள்ளது. சூர்யா நடித்த படங்களில் இப்படம் தான் அதிக வசூலித்த படமாம்.
நேற்று ( மே 16 ) நடந்த சட்டமன்ற தேர்தல் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்களித்து தங்கள் கடமையை நிறைவேற்றினர். இந்நிலையில் ஏ.ஆர். ரகுமான், சூர்யா, தனுஷ், சமந்தா, மணிரத்னம், இளையராஜா, விக்ரம், ஐஸ்வர்யா தனுஷ், விக்ரம் பிரபு என பல பிரபலங்கள் வாக்களிக்க வரவில்லை. சூர்யாவை தவிர மற்ற பிரபலங்கள் எதனால் வாக்களிக்க வரவில்லை என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
நேற்று தமிழ்நாடு முழுவதும் நடை பெற்ற சட்டமன்ற வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. தேர்தல் கமிஷன் செய்த விளம்பரத்துக்கும் மற்றும் சில நடிகர்கள், கலைஞர்கள் மேற்கொண்ட முயற்சிக்கும் எப்படியும் 80 சதவீதம் வாக்குப்பதிவு வந்து விடும் என்று நம்பி இருந்தது தேர்தல் கமிஷன். ஆனால் சென்னையில் தான் மிகவும் கம்மியாக வாக்குப்பதிவு அடைந்தது. இதை அறிந்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இத்தேர்தலுக்காக பிரபல ஆர் ஜே பாலாஜி பல வீடியோக்களை செய்தார். அவர்...