நீர்கொழும்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஐவரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஐவர் தொடர்பில் இலங்கை கடற்படையினர் தற்போது (16) தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.
  அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் டன்யா டிலூசா. இவரது மகள் மோல்லி டிலூசா (7). இவர்களது வீட்டில் 2 வயதான ஹயுஸ் என்ற ஜெர்மன் ஷெப்பர்டு இன நாயை செல்லமாக வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று சிறுமி மோல்லி தனது வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு கொடிய விஷமுள்ள கிலுகிலுப்பை பாம்பு (ரேட்டில் சினேக்) வந்தது. அது விளையாடிக் கொண்டிருந்த மோல்லியை கடிக்க தயாராகி கொண்டிருந்தது.அதை பார்த்த ஹயுஸ் நாய்...
யாழ்பாணத்தில் மாணவர்நிலை குறித்து கௌரவ நீதிபதி இளஞ்செழியன் கவலை....!-காணொளிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள சமூகவிரோதிகளின் சிம்மசொப்பனமாக விளங்கும் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று கண்ணீர் விட்டு கலங்கி அழுத காட்சிகள் எல்லோர் கண்களையும் கலங்க வைத்தது. தனக்கு கல்வி கற்பித்த ஜென். ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியர் ஜீவானந்தம் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் கண்கலங்கி அழுதுள்ளார். ஒரு ஆசிரியன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இளஞ்செழியனின் அழுகை அப்பட்டமாகக்...
அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோவில் வானத்தில் பறந்து செல்லும் விமானம் ஒன்றை மறைவு பகுதியில் இருந்து குர்து போராளி ஒருவர் சுட்டு வீழ்த்துகிறார். அந்த வீடியோவில் துருக்கி அரசுக்கு சொந்தமான AH-1W SuperCobra விமானம் ஒன்று அங்குள்ள மலைபிரதேசம் ஒன்றில் பறந்து செல்கிறது. ஆனால் அந்த விமானத்தை தாக்கி அழிக்க போதுமான ஆயுதத்தை தாங்கி நின்ற குர்து போராளி அதை சுட்டு வீழ்த்த தயாராகிறான். இதனையடுத்து விமானத்தை குறிவைத்து அந்த குர்து போராளி சுடுகிறான்....
  மனைவியரை எவ்வாறுஅடிப்பது என்பது குறித்து சவுதியை சேர்ந்த குடும்ப நல மருத்துவ ஆலோசகர் கூறிய அறிவுரை வீடியோ வெளியாகியுள்ளது. சவுதியில் குடும்பநல மருத்துவ ஆலோசகராக பணியாற்றும் KhaledAl-Saqaby என்பவர் வழங்கிய அறிவுரையில், கணவன்மார்கள், மனைவியரை அடிப்பதில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இது ஒரு இடைவிடாத பிரச்சனை என்பதுதான் என்றாலும், அல்லாவின் துணையோடு இந்த பாலத்தை நாம் மிகவும் கவனமாக கடக்க வேண்டும். மனைவியரை அடிப்பதன் நோக்கம், ஒழுக்க ரீதியாக அவர்களை கட்டுப்படுவதற்காகத்தானே தவிர...
சுவிட்சர்லாந்தில் உணவுப்பொருட்கள் கடத்தலை தடுக்கும் பொருட்டு மத்திய சுங்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுவிஸ் நாட்டில் அதிகரிக்கும் உணவுப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் பல்வேறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டில் இதுவரை 19 டன் உணவுப்பொருட்களை கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளதாக சுங்க இலாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 28 டன் என இருந்தது. இதுவரை கைப்பற்றப்பட்ட உணவுப்பொருட்கள் ஒரு சாதனையாக கருதப்பட்டாலும், கடத்தல் ஆசாமிகள் தொடர்ந்து...
பிரான்ஸ் நாட்டு சிறுவர்கள் இருவர் ஐ.எஸ் குழுவினரின் பிணைக்கதிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ்.குழுவினர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் பிரான்ஸ் நாட்டவரான இரு சிறுவர்கள், ஒற்றர்கள் என ஐ.எஸ்.அமைப்பால் குற்றம்சாட்டப்பட்ட சிரியா நாட்டவரான இரண்டு நபர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த சிறுவர்கள் இருவரும் பயிற்சி மேற்கொள்வது போன்றும் அந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிரான்ஸ் அதிபரின் புகைப்படத்தில் துப்பாக்கியால் சுட்டு...
போப் பிரான்சிஸ் அவர்கள் கனடிய குழந்தையை முத்தமிட்ட சிறப்பான தருணத்தை அக்குழந்தையின் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். கனடாவின் ஒன்றாரியோவை சேர்ந்த டைலர்- ஜெசிக்கா தம்பதியினரின் நான்கு மாதக்குழந்தை ஹென்றி. இவர்கள் vatican City - க்கு அண்மையில் பயணம் மேற்கொண்டனர், அப்போது போப்பாண்டவரின் கவனம் இவர்களது குழந்தையின் மீது படும் என்பதை கனவிலும் கூட நினைத்துப்பார்த்திருக்கமாட்டார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, செயிண்ட் பீட்டர் சதுக்கம் இடத்தில் சுமார் 13,000 பேர் போப்பாண்டவரின்...
எதிரிகளின் இலக்கை அணு ஆயுதம் தாங்கி சென்று இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்ட சூப்பர்சோனிக் பிரித்வி -2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி பரிசோதித்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை என்ற சிறப்பு உண்டு. ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை பரிசோதிக்கப்பட்டடதாக இந்திய ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஏவுகணை 500 கிலோ முதல் 1000கிலோஎடை கொண்டது. அணு ஆயுதத்தை சுமந்துசென்று 350...
உலகத் தரம் வாய்ந்த கார்களை உற்பத்தி செய்வதற்கு பெயர் போன நிறுவனம்BMW ஆகும். இந் நிறுவனம் தானியங்கி கார்களையும் உற்பத்தி செய்து அறிமுகம் செய்யவுள்ளதாக அந் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். இப் புதிய காருக்கு i NEXT எனும்பெயர் சூட்டப்பட்ட நிலையில் 2021ம் ஆண்டில் வீதிகளில் பயணிக்கும் என அவர் உறுதிபடக்கூறியுள்ளார். இதேவேளை கூகுள், Tesla மற்றும் Volvo உட்பட சில நிறுவனங்கள் ஏற்கனவே தானியங்கி கார்களை வடிவமைத்து பரிசோதனைக்கு...